

ஏற்றுமதி, இறக்குமதி ஆகும் சில பொருட்கள்:
பரந்த விவசாய அடித்தளத்தைக் கொண்ட இந்தியா, உலகின் முன்னணி விவசாயப் பொருட்களை ஏற்றுமதி (Export) செய்யும் நாடுகளில் ஒன்றாகும். முக்கிய ஏற்றுமதிகளில் அரிசி (பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாதவை), கோதுமை, மசாலாப் பொருட்கள், தேநீர், காபி, பருத்தி, சர்க்கரை, கடல் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை அடங்கும்.
இந்தப் பொருட்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா சந்தைகளைக் கடந்து; உலகளாவிய உணவு சப்ளையராக இந்தியாவின் பங்கை வலுப்படுத்துகின்றன. இப்படி இந்தியாவின் காலநிலை மற்றும் மண்ணின் பன்முகத்தன்மை சர்வதேச அளவில் தேவைப்படும் பரந்த அளவிலான பயிர்களை உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது.
இந்தியா சமையலுக்குத் தேவைப்படும் பனை, சோயாபீன் (palm and soybean) எண்ணெய், பருப்பு வகைகள்(lentils), ஆப்பிள், கிவி போன்ற சில பழங்கள் மற்றும் பருத்தி போன்றவற்றை இறக்குமதி (Import) செய்கிறது.
பால் பொருட்கள், பாதாம் மற்றும் சிறப்பு விதைகளும் உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த இறக்குமதிகள் பெரும்பாலும் உள்ளூர் உற்பத்தியில் உள்ள இடைவெளிகள், இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படாத அல்லது குறிப்பிட்ட வகைகளை மக்கள் விரும்புவதால் வாங்கப்படுகின்றன.
அமெரிக்காவிடம் என்ன வாங்குகிறோம்?:
வரலாற்று ரீதியாக இந்தியா அமெரிக்காவிலிருந்து பல விவசாயப் பொருட்களை இறக்குமதி (Import) செய்துள்ளது. குறிப்பாக பாதாம், ஆப்பிள், பருப்பு வகைகள் மற்றும் பருத்தி போன்றவை. சமீபத்திய (Recent) இந்தியா-அமெரிக்க வர்த்தகக் கட்டமைப்பு ஒப்பந்தங்களில் குறிப்பிட்டுள்ள பருத்தி (Cotton) இறக்குமதியை ஒரு அரசியல் சார்ந்த பிரச்னையாக எடுத்துக்காட்டுகின்றன.
காரணம் என்னதான் இந்தியா அரிசி, கோதுமை மற்றும் கோழி போன்ற முக்கிய உணவுப் பொருட்களை வெளிநாட்டின் இறக்குமதியைச் சாராமல் இருந்தாலும், 2026ஆம் ஆண்டின்
தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் (interim trade agreement), அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு சில வரிச்சலுகைகள் வழங்குவதை அனுமதித்தது. அதே நேரத்தில் இது அமெரிக்காவிற்கான இந்திய ஜவுளி ஏற்றுமதிகளுக்குப் பல நன்மைகளையும் (Low export tax) திறந்து வைத்தது.
நமக்குள் எழும் கேள்வி: இந்தியாவிலே வளரக்கூடிய சில பொருட்களை ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்? இதற்கான பதில் நாம் மேற்கொள்ளும் ஒப்பீட்டு நன்மை (comparative advantage) மற்றும் வளத்தில்தான் (resource constraints) உள்ளது.
எடுத்துக்காட்டாக, பாதாம் பருப்புக்கு (almonds) கலிபோர்னியாவில் காணப்படும் குறிப்பிட்ட காலநிலை நிலைமைகள் தேவைப்படுகின்றன; ஆனால், பெரும்பாலான இந்திய பிராந்தியங்களில் இது இருப்பதில்லை.
அதேபோல் உள்நாட்டு உற்பத்தியைவிட நம் தேவை அதிகமாக இருப்பதால், பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பருத்தியும் சில நேரங்களில் ஜவுளித் தொழிலுக்கான தரம், தேவைகள் அல்லது சாதகமான வர்த்தகங்களைப் பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்படுகிறது.
எனவே, விவசாய வர்த்தகம் என்பது இந்தியாவால் என்ன வளர்க்க முடியும் அல்லது என்ன வளர்க்க முடியாது என்பது பற்றியது மட்டுமல்ல. இது பொருளாதார உத்தி, நுகர்வோர் தேவை மற்றும் உலகளாவிய பந்தத்தையும் பிரதிபலிக்கிறது.