
போர் நிறுத்தமென்று
செய்தி வந்ததும்…
குறைந்தது டென்ஷன்!
குதூகலிக்குது மனசு!
இருநாட்டுத் தலைவர்களுமே
இழப்பைக் கருத்தில்கொண்டு…
உடனடி நிறுத்தத்தை
உளமது விரும்பியே…
ஏற்றதை நினைந்தே
எல்லா மக்களும்
மகிழ்ச்சியில் திளைத்தே
மனம் மகிழ்கின்றோம்!
இந்திய ராணுவமும்…
அதில்அங்கம் வகிக்கும்
அத்தனை பெண்களும்…
நாட்டு நலனையே
நாளும் எண்ணி…
தூக்கம் மறந்து…
துயரை விலக்கி…
இரவு பகலாய்
இதுவரை உழைத்ததற்கு…
பலனை நாமும்
பெற்றே விட்டோம்!
சல்யூட் உங்களுக்கு
சகோதர சகோதரிகளே!
அமைதியாய்த் தூங்கி…
அலுப்பைப் போக்கி…
நிம்மதிப் பெருமூச்சை
நிதானமாய் விடுங்கள்!
உங்கள் தியாகம்…
வரலாற்றுப் பக்கங்களில்
பொன் எழுத்துக்களால்
பொறிக்கவே பட்டிடும்!
பஞ்சசீலக் கொள்கையைப்
பாங்குடன் காத்திடும்
எங்கள் இந்தியா…
என்றுமே சமாதானத்திற்கு…
முன்னோடி என்பதை
மீண்டும் ஒருமுறை…
உலகுக்கு அறிவித்த
உத்தமர் தம்மை…
போற்றிப் புகழ்வோம்!
போரின் கொடூரம்…
முழுதாய்ச் சொல்ல…
வார்த்தைகள் போதா!
கணவனை மகனை…
தந்தையை தமக்கையை…
யுத்த களத்துக்கு
அனுப்புவோர் மட்டுமே…
அதனின் உக்கிரமம்
முழுதாய் அறிவர்!
முதுகுத் தோலை
முழுதாய் இழந்த
பக்தன் சொன்னானாம்!
-‘பரம பிதாவே!
சிலுவையில் நீவிர்
பட்ட துயரத்தைப்
பட்ட வர்த்தனமாய்
இப்பொழுது உணர்கிறேன்!’
அமைதியாய் இனிமேல்
இனிதாய் உறங்குவோம்!