
இதுதான்டா இந்தியப்படை!
உல்லாசப் பயணம் வந்த
ஒன்றுமறியா பயணியரை…
பதைபதைக்கச் சுட்டுக்கொன்ற
பாவியரைக் களையெடுக்க…
எங்கள் சகோதரர்கள்
ஏற்பாடு செய்ததே
ஆபரேஷன் சிந்தூர்!
அதனிலும் தர்மத்தைக்
கடைப்பிடிக்கும அவர்கள் செயல்
காலத்திற்கும் புகழ்பெறும்!
மக்கள் நடமாட்டமில்லா
மத்திம இரவுதன்னில்…
பயங்கர வாதிகளின்
பதுங்குமிடத்தை மட்டும்…
துல்லியமாய்க் குறிவைத்து
சூடு நடத்திவிட்டு…
திரும்பிவிட்ட அவர்களின்
திறமையை என்னசொல்ல?!
எங்களின் இலக்கு எப்பொழுதுமே
குற்றவாளிகள் மட்டுமே!
பாகிஸ்தான் படைமீதோ…
ராணுவத்தளம் மேலோ…
குறையேதும் புரியாத
குடிமக்கள் யார்மீதோ…
எங்கள் ராணுவத்தினர்
என்றுமே தாக்கமாட்டார்!
நாடு பிடிப்பதோ…
நல்லோரை வதைப்பதோ…
எங்கள் வரலாற்றில்
என்றுமில்லை காண்!
இப்பொழுதும் எங்கள்
இந்தியச் சகோதரர்கள்…
பயங்கர வாதிகளின்
ஒன்பது நிலைமீதே…
தாக்கிவிட்டுத் திரும்பினர்!
சரித்திரத்தில் அவர்கள் பெயர்
தங்கமென மின்னும்!
எழுந்துநின்று நாங்கள்
இதயங்கனிந்த சல்யூட்டை
காணிக்கை ஆக்குகின்றோம்!
கபடதாரிகள் இனியாவது
திருந்தி நல்வழியில்
நடக்க முயலட்டும்!
நல்லவர்கள் பலர்மீது
நியாயமற்ற தாக்குதலை
செய்வதை விடுக்கட்டும்!
சிறப்பான வாழ்வுக்கு
மனந்திருந்தி திரும்பட்டும்!
மகிழ்வான வாழ்வினிலே
குடும்பமுடன் திளைக்கட்டும்!