சந்திரபாபு நாயுடு பதவியேற்பில் அரங்கேறிய கௌரவ அவமதிப்புகள்!

Chandrababu Naidu Inauguration
Chandrababu Naidu Inauguration
Published on

டைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல்களோடு சேர்த்து ஆந்திர மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. இதில் ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனசேனா கட்சி கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. இந்தத் தேர்தல் வெற்றியில் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் முக்கியப் பங்கு வகித்தார். அதைத் தொடர்ந்து இம்மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஜே.பி நட்டா, நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு, முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், தமிழக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் போன்றோரும், தெலங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தப் பதவியேற்பு விழாவில் முக்கியத் தலைவர்கள் வரிசைக்கு அடுத்த வரிசையில் நடிகர் சிரஞ்சீவி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் பாலையா போன்றோர் அமர்ந்திருந்தனர். இவர்களுக்கு அடுத்த வரிசையில்தான் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தெலங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடம் கிடைத்தது.

பின் வரிசையில் ஓ.பன்னீர்செல்வம்
பின் வரிசையில் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயரைப் பெற்றவரும், இவருக்கு மாற்றாக மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவியில் இருந்தவருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்தப் பதவியேற்பு விழாவில் திரைப்பட நடிகர்களுக்கு பின் வரிசையில் அமர்வதற்கே இடம் கிடைத்து, அவருக்கு வேண்டுமானால் கௌரவமாக இருக்கலாம். ஆனால், தமிழ் உணர்வு கொண்ட எந்த ஒருவரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். இவர், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சிரஞ்சீவி ஆகியோருக்கு மத்தியில் தனது தலையை எட்டி எட்டி காண்பித்துக் கொண்டிருந்ததும், தமது வழக்கமான பாணியில் கூப்பிய கைகளோடு விழாவின் பெரும்பாலான நேரத்தைக் கழித்ததும் பார்க்கவே பெரும்பாலானவர்களுக்கு பரிதாபமாக இருந்தது. இனிவரும் காலங்களிலாவது இவர் இதுபோன்ற வெளிமாநில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது இவருக்கு மட்டுமல்லாது தமிழ் உணர்வாளர்களுக்கும் கௌரவமாக இருக்கும்.

இதேபோன்று, தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் கவர்னர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் துணை நிலை ஆளுநர் என பொறுப்பு வகித்த தமிழிசை சவுந்தரராஜனும் நடிகர்களுக்கு பின் வரிசையில் அமரவே அனுமதிக்கப்பட்டார். அது மட்டுமின்றி, இவர் மேடையேறி வரும்போது மரியாதை நிமித்தமாக முதல் வரிசையில் அமர்ந்திருந்த அமித் ஷா மற்றும் வெங்கய்ய நாயுடு ஆகியோருக்கு வணக்கம் தெரிவிக்க, பதிலுக்கு அமித் ஷா மட்டுமே வணக்கம் தெரிவித்தார். ஆனால், தமிழிசைக்கு பதில் வணக்கம் தெரிவிக்க வெங்கய்ய நாயுடுவுக்கு மனமில்லையா அல்லது ஒரு பெண்ணுக்கு வணக்கம் தெரிவிப்பதை கௌரவக் குறைச்சலாக நினைத்தாரா என்று தெரியவில்லை. காங்கிரஸ் பேரியக்கத்தின்பால் நெடுங்காலம் தொடர்போடு இருக்கும் குமரி ஆனந்தன் குடும்பத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியால், ‘மிகவும் நாகரிகமானவர்’ என்று பாராட்டப்பட்டவரும், கடைக்கோடி மனிதரும் அணுகுவதற்கு எளியவருமான தமிழிசைக்கு இந்த கௌரவமான அவமதிப்பு தேவையா என்றே தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரும் நினைக்கும்படி உள்ளது.

பவன் கல்யாண் அலப்பறை
பவன் கல்யாண் அலப்பறை

எல்லாவற்றுக்கும் மேலாக, பதவியேற்பு விழா மேடை என்பது ஒரு பொது சபை என்பதை மறந்து, வணக்கம் செலுத்திவிட்டு சென்ற தமிழிசையை மீண்டும் அழைத்து அவரிடம் விரலை நீட்டி அமித் ஷா அவரை கண்டிப்பது போன்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. ஒரு பெண் என்ற நாகரிகம் சிறிதும் இன்றி அமித்ஷா தமிழிசையிடம் தனது அதிருப்தியை காட்டியது பலரது மனதையும் புண்படச் செய்ததோடு, ‘இந்த அவமானம் உனக்குத் தேவையா?’ என்று வடிவேலு பாணியில் அக்கா தமிழிசையிடம் கேட்கவே தோன்றுகிறது. கூடவே, ‘பாஜகவில் பெண்களுக்கான மரியாதை இதுதானோ’ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இதையும் படியுங்கள்:
G7 மாநாட்டில் கலந்துக்கொள்ள இத்தாலி சென்ற பிரதமர்… காலிஸ்தான் தீவிரவாதிகள் எதிர்ப்பு!
Chandrababu Naidu Inauguration

முத்தாய்ப்பாக, இந்தப் பதவியேற்பு விழாவில் முதலமைச்சராகப் பதவியேற்றது சந்திரபாபு நாயுடுவா? அல்லது பவன் கல்யாணா? என்றே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. காரணம், இவர் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை பிரதமர் மோடியிடம் அறிமுகப்படுத்தி வைத்ததும், விழா மேடையில் இவர் தனது சகோதரர் சிரஞ்சீவி மற்றும் மோடியோடு சேர்ந்து கைகளை தூக்கிக்கொண்டு காட்சி கொடுத்ததும், பொதுவானவர்கள் மனதில், ‘எதுக்கு இந்த வெட்டி அலப்பறை’ என்றே நினைக்கத் தோன்றியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com