முன்னோட்டம்:
* வந்தே பாரத் ரயில்களானது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
* இதன் சிறப்பே என்ஜினுக்கு என தனிப்பெட்டி இல்லாததுதான்.
* இவ்வகையான வந்தே பாரத் ரயில்களுக்கான வெள்ளோட்டம் 2019 ஆம் ஆண்டிலேயே துவக்கப்பட்டு விட்டது.
* ஜப்பான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அதிவிரைவு ரயில்கள் சென்னை, பெரம்பூரில் இருக்கும் ஐ சி எஃப் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.
* பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டுத் தயாரிப்பாக நாமே தயாரிக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோள்.
* வந்தே பாரத் ரயிலில் பாதுகாப்பு, வேகம், சொகுசான பயணம் இருப்பதால் மக்கள் இதை விரும்புகிறார்கள்.
சிறப்புகள்:
* வந்தே பாரத் ரயில்பெட்டிகள் முழுக்க முழுக்க குளிர்சாதன வசதிகளுடன் கூடியவையாக இயக்கப்படுகின்றன.
* இணைய வசதியுடன் கூடிய 32 இஞ்சு எல் ஈ டி தொலைக்காட்சிப் பெட்டி ரயிலின் உள்ளே பயணிகள் பார்க்கும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளது. அதில் உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள முடியும். அத்துடன் ரயில் எங்கிருந்து எங்கு சென்று கொண்டிருக்கிறது எனும் தகவலும் அதில் ஒளிபரப்பாகிறது.
* மேலும், இதில் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு, பொது வகுப்பு என இரண்டுவிதமான ரயில்பெட்டிகள் இயக்கப்படுகின்றன.
* இவற்றில் எக்ஸிகியூட்டிவ் கோச்சில் உள்ள இருக்கைகளை சுழலும் வசதியுடன் வடிவமைத்திருக் கிறார்கள்.
* பொது வகுப்பிலும் இருக்கைகள் சாதாரணமாக இல்லாமல் சொகுசுப் பேருந்துகளில் இருப்பதைப்போல அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன.
* இருக்கையின் முன்பகுதியில் நாளிதழ்கள் வாசிக்கவும், சாப்பிடுவதற்குத் தோதாகவும் நீட்டி, மடக்கக்கூடிய வகையில் கையடக்க டேபிள்கள் பொருத்தப்பட்டுள்ளன.
* ரயிலின் பேன்ட்ரி பகுதியில் குளிர்சாதனப் பெட்டி வசதியும் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் உணவு அல்லது மருந்துகளை குளிர்ச்சியாக வைத்து எடுத்துச்செல்ல இது வசதியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
* ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் இந்தியன் டைப் மற்றும் வெஸ்டர்ன் டைப் என இருவகை டாய்லட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டாய்லட்டின் உள்ளே துருப்பிடிக்காத ஸ்டீல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்.
* மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு சிறப்பம்சமும் உண்டு, எமர்ஜென்ஸி டாக் பேக் யூனிட் வசதி ஒவ்வொரு பெட்டியிலும் பொருத்தப்பட்டுள்ளது. பயண நேரத்தில் உடல்நலக் கோளாறு அல்லது வேறு ஏதேனும் எமர்ஜென்ஸி தேவைகள் ஏற்பட்டு நாம் ரயில்பெட்டியை நிறுத்த வேண்டுமென்றாலோ அல்லது இயக்குபவர் களிடம் பேச வேண்டுமென்றாலோ இந்த வசதிகள் நமக்கு உதவும். இதில் புஷ் டு டாக் பட்டனை அழுத்தினால் ரயில்வே நிர்வாகத்தினர் நேரடியாக நம்மிடம் பேச முடியும்.
* மேலும் ரயில் பெட்டி மொத்தமும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
* இந்தியாவின் முதல் எஞ்சின் இல்லாத இந்த ரயில் 750 கி.மீ. தூரத்தை சுமார் 8 மணி நேரத்தில் கடக்கும்.
* முன்னதாக வந்த வந்தே பாரத் ரயில்கள் 100 கி.மீ. வேகத்தை எட்ட 54.6 விநாடிகள் எடுத்தது.
* பிறகு, அந்த வேகத்தை 52 வினாடிகளில் எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* சர்வதேச விமானங்களின் வசதிகள் போன்று சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ரயில் 18 மாதங்களில் தயார் செய்யப்பட்டது.
* தற்போதைய ரயிலின் எடை 392 டன். இது முந்தைய ரயில்களைவிட 38 டன் எடை குறைவானது.
* ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் உள்ளன. அவற்றில் எக்சிகியூட்டிவ் கோச்சுகள் 2, மீதமுள்ள 14 பெட்டிகள் எகானமி கோச்சுகள் ஆகும்.
* இந்த ரயிலின் எக்ஸிகியூட்டிவ் கோச்சுகளில் உள்ள இருக்கைகளை 180 டிகிரியில் சுழற்ற முடியும்.
* சாதாரண இருக்கைக்கு ரூ.1,755 மற்றும் எக்சிகியூட்டிவ் இருக்கைக்கு ரூ.3.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* இந்த ரயிலில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் படிக்கட்டுகள் மற்றும் நவீன கழிப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் எத்தனை ரயில்கள்?
இந்தியாவில் இதுவரை மொத்தம் 36 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஆகஸ்ட் 2023ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த திட்டம் தற்போது ஆகஸ்ட் 2024ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் இந்த மொத்த இலக்கும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத் ரயிலால் என்ன பயன்?
* நேரம் குறையும் என்பதே பலரும் கருத்தாகிறது. அதிக காசு செலவானாலும் பரவாயில்லை சீக்கிரம் போய் ஊருக்கு சேர்ந்தால் போதும் என்கின்றனர் பலரும்.
* மேலும் சோர்வின்றி, சிரமமின்றி நிம்மதியாகப் பயணிக்கலாம்.
* உணவு சேவைகளும் இருப்பதால் வெகு செளகரியமாக உள்ளது.
மக்களின் வரவேற்பு எப்படி?
இயக்கப்பட்ட உடனே தீபாவளி பண்டிகைக்கு ஏராளமானோர் நெல்லை ரயிலுக்கு புக் செய்தனர். வெகு தூரம் பயணிப்பவர்கள் பேருந்துகளில் செல்லும் நேரத்தை குறைக்க இந்த ரயில் உபயோகமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் வந்தே பாரத் ரயில் சேவை:
தமிழகத்திற்கு 4 வந்தே பாரத் ரயில்கள் கிடைத்துள்ளன. சென்னை- மைசூர், சென்னை- கோவை, நெல்லை- சென்னை, சென்னை- விஜயவாடா ஆகிய 4 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நெல்லை வந்தே பாரத் ரயிலில் ஜிஎஸ்டி வரி உள்பட சாதாரண ஏசி பெட்டியில் ஒருவருக்கு டிக்கெட்டின் விலை ரூ 1,620 ஆகும். அது போல் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிக்க ஒருவருக்கு கட்டணமானது ரூ 3,025 வசூலிக்கப்படுகிறது. (உணவு கட்டணம் உள்பட).
இந்த ரயில் வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும். ஆரம்ப கட்டம் என்பதால் 652 கி.மீ. தூரத்தை மணிக்கு 83 கி.மீ. வேகத்தில் கடக்க உள்ளது. அதுபோல் இந்த ரயில் மதுரையில் நிற்கும் என்பதால் சென்னையிலிருந்து மதுரைக்கு பயணிப்போருக்கும் உதவியாக இருக்கும். மதுரையிலிருந்து சென்னைக்கு பயணிக்க வந்தே பாரத் ரயிலில் சேர் காரில் கட்டணமாக ரூ 1425, எக்ஸிகூட்டிவ் கட்டணமாக ரூ 2535 வசூலிக்கப் படுகிறது.
சென்னையிலிருந்து இயங்கும் வந்தே பாரத் ரயில்களின் விவரங்கள்:
------------------------------------------------------------------------------------------------------------
ரயில் பெயர் : எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூர்
ரயில் எண் : 20607 / 20608
தொடக்க நிலையம் : எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்
முனைய நிலையம் : மைசூர் சந்திப்பு
புறப்பாடு : 05:50 / 13:05
வருகை : 12:20 / 19:20
பயண நேரம் : 06h 30m
டிக்கெட் வரம்பு : ரூ921 – ரூ 1,880
------------------------------------------------------------------------------------------
ரயில் பெயர் : எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர்
ரயில் எண் : 20643 / 20644
தொடக்க நிலையம் : எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்
முனைய நிலையம் : கோயம்புத்தூர் சந்திப்பு
புறப்பாடு : 06:00 / 14:25
வருகை : 11:50 / 20:15
பயண நேரம் : 05h 50m
டிக்கெட் வரம்பு : ரூ1,365 – ரூ 2,485
------------------------------------------------------------------------------------------
ரயில் பெயர் : எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – விஜயவாடா
ரயில் எண் : 20677 / 20678
தொடக்க நிலையம் : எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்
முனைய நிலையம் : விஜயவாடா சந்திப்பு
புறப்பாடு : 05:30 / 15:20
வருகை : 12:10 / 22:00
பயண நேரம் : 06h 40m
டிக்கெட் வரம்பு : ரூ1,420– ரூ 2,630
------------------------------------------------------------------------------------------
ரயில் பெயர் : சென்னை எழும்பூர் – திருநெல்வேலி
ரயில் எண் : 20665 / 20666
தொடக்க நிலையம் : சென்னை எழும்பூர்
முனைய நிலையம் : திருநெல்வேலி சந்திப்பு
புறப்பாடு : 14:50 / 06:00
வருகை : 22:40 / 13:50
பயண நேரம் : 07h 50m
டிக்கெட் வரம்பு : ரூ1,620 – ரூ 3.025