சிலந்திகளும் கரையான்களும் வாழும் இடமானது இது!

புத்தகம் வாசிப்பு...
புத்தகம் வாசிப்பு...

-பொன். இராம்ஜி

கிராமங்கள் நூலகங்களின் வாசனையின்றி பசுமையினால் மட்டும் வளர்ந்துகிடக்கின்றன. இடம், பொருள், ஏவல் அறிந்து எந்தக் காரியத்தையும் செய்யவேண்டும். அந்த இடத்திற்கு அறிவைத் திறக்கும் திறவுகோல்கள் தேவை. (திறவுகோலின் மறுபெயர் சாவி. இது தூய தமிழ்ச்சொல் கிடையாது!)

சுமை தாங்கும் விவசாயிகளின் நலன் காக்க உயிர் காக்கும் புத்தகங்களைக் கிராமத்தில் கிடைக்குமாறு செய்யலாம். வயல் என்றாலே பாம்புகள் இருக்கும். பாம்புகடிக்குச் சரியான வைத்தியம் இன்றி பலர் இறந்துள்ளனர். சரியான மூலிகை வைத்தியம் குறித்து விழிப்புணர்வு இருந்தால் மட்டும் கிராமங்களில் விவசாயிகள் விவசாயம் செய்ய முன்வருவார்கள்.

இதுபோல கடன் வாங்கப்பட்ட சொற்கள் தமிழில் கலந்து வருவதற்குக் காரணம் உலகமெங்கும் வணிகத்தின் பொருட்டு உலகத்தைச் சுற்றிவர நினைப்பவர்கள் தங்களது மொழியின் எச்சங்களை விட்டுச் செல்கின்றனர். தூய தமிழ்மொழியில் பேசினால் யாருக்கும் இப்போதெல்லாம் புரிவது கிடையாது. அதற்கு அகராதி தேடவேண்டும் என்ற வேதனையில் தமிழ்மொழி வேண்டாம் என குழந்தைகள் ஒவ்வொரு வீடுகளிலும் சண்டை போடுகின்றனர்.

உலகெங்கும் வெள்ளைப் புறாக்களைக் கட்டி அன்னை தெரசாவோ, விவேகானந்தரோ வந்து ஏதாவது அதிசயம் நடத்தினால்தான் நன்மை நடக்கும். இதையெல்லாம் பார்த்துத்தான் கண்ணீர் மழையில் கரையான்கள் பல நூலகங்களை முத்தமிட்டுக்கொண்டிருக்கின்றன.

நெசவுத் தொழில் நலிந்ததினால் அங்கு சிலந்திகள் தறிநூலை இட்டு விளையாடிக்கொண்டிருக்கின்றன. இணையச் செய்திகளை அனுப்ப  நலிந்த மக்களுக்கு இ-சேவை மையம் தவிர வேறெங்கும் வசதிகள் இல்லை.

உலகப் புகழ்பெற்ற சென்னை, கன்னிமரா நூலகத்தில் தேடும் நேரத்தைக் குறைக்க வசதிகள் பல உண்டு. ஆனால், இணைய மென்பொருள் கிடைக்காததால் செய்ய இயலவில்லை என பதிலுரைத்தனர். ஆனால், குறிப்பிட்ட வாசகர் தொடர்ந்து மென்பொருளில் அனுபவம் உள்ளவரை அனுப்பியும் பதில் வரவில்லை.

மென்பொருள் இல்லாமல் ஆராய்ச்சியாளர்கள் எப்படி முழுமையாக விரைந்து புத்தகத்தைத் தேட இயலும்! இப்படி பல பிரச்னைகள் உள்ளன.

ஒரு வாசகர் மது ஒழிப்பு குறித்துப் புத்தகம் தேட வந்தாராம்! ராஜாஜி  காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டும் பலனின்றி சின்ன தமிழ்தாத்தா அவரது சுயலாபம் கருதி மதுக்கடையைத் திறந்தார். மதுவை மூடினால்தான் நூலகங்களுக்குப் பெண்கள் வர இயலும் என்ற நிலை இன்று உருவாகிக் கிடக்கிறது.

இதையும் படியுங்கள்:
பூவிருந்தவல்லி பெருமாள் கோவில் தோசை சாப்பிட்டு இருக்கீங்களா?
புத்தகம் வாசிப்பு...

தெற்கு பக்கத்தில் வசிக்கும் திருமணமாகாத பெண் தூரத்துப் பச்சை மயக்கத்தில் இந்தி வாலிபனுடன் பேச, அவனோ காதல் என நினைத்துவிட்டான். இவள் மறுக்கவே தனது ஏழு நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்முறை செய்து கொன்றுவிட்டானாம்!

நமது இந்தியச் சட்டம் விதிமுறையின்படி கேஸ் முடிக்க 3 வருடம். அதன்பின் வெறும் அபராதமாக 1000, 2000. அதுவும் அரசியல்வாதி ரெகமன்டேனில் வந்தால் வழக்கு தள்ளுபடியாகும். இதுதான் இன்றைய பெண்களின் நிலை. கல்வி இருந்தால் மட்டும்தான் பெண்ணின் அறியாமை நீங்கும். அதற்கு நூலகக்கல்வி அவசியம்தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com