தொடர்கதை: ஜாலியா ஒரு கொலை - அத்தியாயம் 5

கணவனின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு குடும்பம் எடுத்த அதிரடி முடிவு!
Jaliya Oru Kolai - Tamil Serial story
Jaliya Oru Kolai - Tamil Serial storyImage Credit: ChatGPT
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on: 

தொடர்கதை: ஜாலியாக ஒரு கொலை - அத்தியாயம் 5

ஐந்து மணி வாக்கில் பெருமாள்சாமி ஹார்லிக்ஸ் குடித்துவிட்டு நடை உலா கிளம்பினார்.

வீட்டில் மிச்சமுள்ள மூன்று தலைமுறைப் பெண்களும் தேநீர், காஃபி அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தனர்.

“அந்தாளு எவ்வளவுதான் கொடுமை பண்ணியிருந்தாலும், அதுக்காகக் கொலை பண்றது தப்பு, குத்தம், மகா பாவம்! பல கொலை, கற்பளிப்பு பண்ணுன ரவுடிகளா இருந்தாலும், கொளந்தைகளை நாசமாக்கிக் கொடூரமாக் கொல்ற பஞ்சமா பாதகனுகளா இருந்தாலும், மரண தண்டனை கூடாதுன்னு உலகம் பூரா பல நாடுகள்ல சட்டமே இருக்குதே…! அப்படி இருக்கும்போது, நீங்க அவரைக் கொல்லத் துணியலாமா?”

“அப்பறம்…? காலம் பூரா எங்களை சித்ரவதைப்பட்டுட்டிருக்கச் சொல்றயா…?”

“அப்புடிச் சொல்லுல. அவுரோட உசுருக்கோ, ஒடம்புக்கோ எந்த பாதிப்பும் இல்லாதபடி என்ன தண்டனை வேணும்னாலும் குடுங்க. அவரு பண்ற கொடுமைக எல்லாத்தையும் எப்படித் தடுக்க முடியுமோ அப்படித் தடுங்க. நீங்க அதுலருந்து தப்பிச்சாப் போதுமல்ல? கெட்டவங்களைக் கொல்லணும்னு நெனைக்கக் கூடாது. அவுங்ககிட்ட இருக்கற கெடுதல்களைத்தான் அழிக்கணும், இல்லாம ஆக்கணும்…”

அவள் சொல்வதின் நியாயங்கள் அவர்களுக்குப் புரிந்தன.

“அது சரி பாட்டீ…! அப்பாவை நாங்க மன்னிக்கக் கூடத் தயார். ஆனா, அவரோட கொடுமைகள்லருந்து தப்பிக்கறது எப்படி?”

“அது தெரிஞ்சிருந்தா எப்பவோ சொல்லியிருப்பனே…! இப்ப வேண்ணா நாம எல்லாரும் சேர்ந்து யோசிச்சுப் பாக்கலாம். ஏதாவது வளி கெடைக்கும்.”

*****

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com