

சுதந்திரம் சும்மா கிடைத்ததா.? நிச்சயமாக இல்லவே இல்லை. லட்ச கணக்கில் மக்கள் உயிர் தியாகம் செய்து உள்ளனர். காஷ்மீர் முதல் குமரி வரையில் மக்கள் வெகுண்டு எழுந்தார்கள்.
காந்தி அகிம்சையை இந்தியர்களுக்கு மட்டுமே வலியுறுத்தினார்.
இந்திய மக்களுக்கு அல்ல. இங்கு ஒரு சம்பவம்.
செளரிசெளெராவில் மக்கள் ஒத்துழையாமை போரட்டத்தை அமைதியாக நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தில் கடைசியில் இருந்த காவலர்கள் இந்தியர்களை அடி அடி என அடித்து வன்முறை செய்தார்கள். ஊர்வலத்தில் வந்த இந்தியர்கள் கோபம் கொண்டு தாக்கிய காவலர்களை சிறையில் அடைத்து எரித்து விட்டார்கள்.
நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் சிறப்பாக நடைபெற்றது. ஆனால், செளரிசெளெராவில் நடந்த நிகழ்ச்சி காந்தியை பெரிதும் பாதித்தது. நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி விட்டார்.
மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு இது பிடிக்க வில்லை.
சரி. இது ஒரு புறம் இருக்கட்டும். 1919 ஜாலியன்வாலா என்ற ஊரில் காங்கிரஸ் தலைவர் மற்றும் சாதாரண மக்கள் நிரம்பிய வண்ணம் இருந்தது. பாதுகாப்பு என சொல்லி ஜெனரல் டையர் மைதானத்தில் உள்ளே வர இருந்த 3 வாசலையும் மூடி விட்டான்.
ஒரே நுழைவு வாயில். அதில் பிரிட்டிஷ் போலிஸ் கூட்டம். அமைதியாக நடைபெற்ற கூட்டத்தில் ஜெனரல் டையர் சிப்பாய்களை சுடச்சொல்லி உத்தரவு பிறப்பித்தார்.
அதில் கர்ப்பிணிகள், குழந்தைகள், மூத்தவர்கள் என்று பரிவு காட்டாமல் எல்லோரையும் கொன்று குவித்தான்.
நகரமே ரத்தத்தில் மிதந்தது. இது கொடுமையிலும் கொடுமை. அது மட்டும் அல்ல. நகரில் சென்று கொண்டிருந்த மக்கள் மீதும் துப்பாக்கி சூடு. ஜெனரல் டையர் மனிதன் அல்ல. அசூரன் தான்.
ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். எல்லோரும் தியாகிகள் ஆனார்கள். ரத்தம் சிந்தாமல் வரவில்லை நமது சுதந்திரம்.
இங்கு தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை பார்க்க வேண்டும். சதந்திர போராட்ட வீரர்கள் வ. உ. சி மற்றும் சிவாவை பிரிட்டிஷ் அரசு சிறையில் அடைத்தது. அதை விட கொடுமை அவர்களை சிறையில் சித்திரவதை செய்தது அரசு.
இதை கண்டு கொதித்து எழுந்தனர் இந்திய இளைஞர்கள். அதில் வாஞ்சிநாதன் ஒருவர். இவர் காளி பக்தன்.
வ. உ. சி மற்றும் சிவா சித்தரவதைக்கு கலெக்டர் ஆஷ் துரை தான் காரணம் என்று அறிந்து ஆஷ் துரையை கொலை செய்ய திட்டம் போட்டார்கள்.
ஆம். வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் கலெக்டர் ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். பிறகு கழிவறை சென்று தன் முகம் அடையாளம் தெரிந்தால் தனது தோழர்களை அரசு கண்டு பிடித்து விடும் என்று எண்ணி தனது மூளையில் சுட்டு முகம் அடையாளம் தெரியாமல் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த மாதிரி நிகழ்ச்சி இந்தியா எங்கும் நடக்க வில்லை. வாஞ்சிநாதன் தியாகி. அவரைப் போல இளைஞர்கள் தியாக உணர்வு பெற வேண்டும். ஆனால் தியாகி வாஞ்சிநாதன் தேர்ந்து எடுத்த பாதை 'பயங்கரவாதம்'. இது நிச்சயமாக தவறு தான்.
இது போதும் என்று நினைக்கிறேன்.
பிரிட்டிஷ் அரசாங்கம் சும்மா கொடுக்க வில்லை சுதந்திரம். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் நாடு முழுவதும் தீ போல பரவியது. இனியும் இவர்களை அடக்கி ஆள முடியாது என்ற நிலையில் தான் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள்.
ஜெய் ஹிந்த்…!