இசை வானிலே வந்தாய்… புகழ் வானில் மறைந்தாய்!

Jayachandran
Jayachandran
Published on

1974 - 'நான் அவன் இல்லை' படத்தை பார்த்தபோது எனக்கு 12 வயது மட்டுமே. அதனால், 'மந்தார மலரே' பாடியது யார் என்று அவதானிக்கும் அறிவோ வயசோ இல்லை.

ஆனால், 1976... டீனேஜ் இல்லையா? 'மூன்று முடிச்சு' படத்தில் 'வசந்த கால நதிகளிலே' பாடிய குரல் (வாய் அசைப்பது கமல் என்பதாலும்) இளம் பெண்களை ஈர்த்திருக்கும்.

அந்த mouth organ பிட்டுக்கு பிறகு base voiseஇல் பாடி சொக்கு பொடிபோட்டது ஜெயசந்திரன். என்ன ஒரு இசை! மெல்லிசை மன்னர்... மாமன்னர் என்று நிரூபித்த பாடல்.

இங்கே ஒரு personal confession உண்டு.

அப்புறம் 'மாஞ்சோலை கிளி தானோ' பாடல், அதுவும் ஒரு அடிபொழி song. என்னுடைய பால்ய சிநேகிதன் ராஜ கோபால் favourite song. ஒரு பத்து முறையாவது பாடி காட்டி இருப்பான்.

என்னோடு சேர்ந்து இலங்கை வானொலியும் கொண்டாடிய ஜெயச்சந்திரன் பாடல்கள் ரெண்டு.

'சித்திர செவ்வானம்', மற்றும் 'ஒரு வானவில் போலே'…

யப்பா சாமி எவ்ளோ ஃப்ரெஷ் melodies…

அந்த 'தையர தைய' கோரஸ் கேட்டாலே மனசு கூச்சல் இடும்.

இருங்க...நடுவிலே கொஞ்சம் gap விடுறேன். oru glamour gap...

'நானே ராஜா நானே மந்திரி' ஷூட்டிங் பார்த்து இருக்கிறேன். ராதிகா, விஜய்காந்த் மீது காதல் வயப்பட்டு இருந்த சமயம் (ஆஃப் தி ரெகார்ட் ஆக நிறைய விஷயங்கள்)...

அந்த படத்தில் 'மயங்கினேன் சொல்ல தயங்கினேன்' பாடலில் இசைஞானி ஜாலம் காட்டி இருப்பார். ஜெயச்சந்திரன் குரலில் உயிர் பிராண்டும் வலி தெரியும்.

'காதல் மயக்கம்' என்று ஒரு பாட்டு... அலட்டிக் கொள்ளாத ஒரு மென்மையான குரலில் ஜெயச்சந்திரன் மயக்கி இருப்பார்.

'ராசாத்தி உன்ன' பாட்டை ஏன் சொல்லலைன்னு கேட்காதீங்க. பொள்ளாச்சி பக்கம் ஒரு டூரிங் டாக்கீஸ்க்கு தினமும் காட்டு யானை கூட்டம் வந்து இந்த பாடலை மட்டும் கேட்டு விட்டு அமைதியாக கலைந்துவிடுமாம்! அப்படிப்பட்ட இசை… குரல்.

இதையும் படியுங்கள்:
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்!
Jayachandran

ARR இசையில் 'கத்தாளம் காட்டு வழி' (இதற்கு அவருக்கு விருது கிடைத்தது. நான் பேட்டி எடுத்தேன்) 'கன்னத்தில் முத்தமிட்டால்'... இந்த இரண்டுமே அற்புதமாக அமைந்து விட்டன.

அது என்ன personal confession?

மலர் கணைகள் நிஜமாகவே பாய்ந்த நேரம் அது. நல்லவேளை. ரொம்ப பாதிப்பு இல்லை.

Glamour gap விஷயத்துக்கு வருவோம்.

ஜெயச்சந்திரன் ஆயிரம் பாடல்கள் பாடி இருக்கட்டும். அனுவுக்கு ஆல் time fav song என்ன தெரியுமா??

'காளிதாசன் கண்ணதாசன்' பாடல்தான்.

பேரழகி சில்க் ஸ்மிதாவை சற்றே விலகி நின்று பிரமிப்போடு ரசிக்க வைக்கும் பாடல்.

பாடலின் ஆரம்பமே "ஆ.. ஆ" என்றொரு கொஞ்சலான ஆலாபனையில் ஜெயச்சந்திரன் இதயத்தை சுண்டி விடுவார்.

'பூ உடல் முழுக்க' என்ற வரிகளின்போது, நிஜமாகவே மலர் போர்வை மட்டுமே அணிந்து சில்க் வசீகரிப்பார்.

'தாமரை உடலே மது ஒழுக' என்று ஜெயசந்திரன் பாடும்போது எனக்கு கால சக்கரம் அப்படியே 80களில் நின்றுவிட்டதுபோல இருக்கும். அப்படி ஒரு கிறங்கடிக்கும் பாடல். நன்றி இசை பிரம்மா.

தெளிவான தமிழ் உச்சரிப்பும், இறகு வருடும் குரலும் கொண்ட ஜெயச்சந்திரன் பாடலை கேட்டால் மனசே லேசாகிவிடும்..

இன்று அவரது மறைவு செய்தி கேட்டு மனம் கனத்துவிட்டது. ஒரு வானவில் போலே, இசை வானிலே வந்தாய். புகழ் வானில் மறைந்தாய்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com