ஜோக்ஸ்; ஏன்யா, நான் வெளியே நடமாடிக்கிட்டு இருக்கிறது உனக்கு பிடிக்கலையா?

Don't you like me hanging out?
kalki Jokes...
Published on

மனைவியை அடிக்கறவங்களுக்கு  சிறை தண்டனை தரலாமா மன்னா?

வேண்டாம் அமைச்சரே, அவ்வளவு தைரியமானவர் களை நமது படையில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

*********************************

நான் சின்ன வயசுல ஸ்கூல் ஃபீஸ் கொடுக்காமத்தான் படிச்சேன்யா!

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படிச்சதை சொல்றீங்களா தலைவரே?

*********************************

நம்ம கட்சியோட எதிர்காலம் எப்படி இருக்கும்யா?

எதிர்காலத்துல நம்ம கட்சியே இருக்காது தலைவரே!

*********************************

யானையே எதிர்ல வந்தாலும் நம் மன்னர் பயப்பட மாட்டார்!

அப்ப மகாராணி  எதிர்ல வந்தா ஏன் இப்படி பயப்படுகிறார்?

*********************************

மேடம்! உங்க மாமியார் பிழைக்கறது கஷ்டம்தான்!

பிழைச்சாலும் கஷ்டம்தான் டாக்டர்!

*********************************

எதுக்குத்தான் புதுக்கட்சி  ஆரம்பிச்சேன்னு இருக்கு!

என்னாச்சு தலைவரே?

கட்சியில தனியா இருக்க பயமாயிருக்கு!

kalki Jokes...
kalki Jokes...

*********************************

ஏன் தலைவரே, நீங்க சுயசரிதை எழுதலை?

நான் வெளியே நடமாடிக்கிட்டு இருக்கிறது உனக்கு பிடிக்கலையா?

*********************************

உங்களை வழியில பார்த்தபோதுதான் நினைவுக்கு வந்தது?

என்னது?

பிளேடு வாங்கணும்னு!

*********************************

உன்னோட மாமியார் கல் நெஞ்சக்காரின்னு எப்படிச் சொல்றே?

வ்வளவு சீரியல் பார்த்தாலும் ஒரு சொட்டு கண்ணீர் விட மாட்டேங்கிறாளே!

*********************************

அரண்மனை கஜானா காலின்னு புலவருக்கு தெரிஞ்சுட்டுதுன்னு 

எப்படிச் சொல்றே?

புலவர் ஒப்பாரி பாடுறாரே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com