
ஏங்க, என்னோட பிறந்தநாளுக்கு பட்டுப்புடவை வாங்கித்தாங்க, அதைக் கட்டிக்கிட்டா எனக்கு எடுப்பா இருக்கும்.
ஆனா அதனோட விலையைக் கேட்டா எனக்கு கடுப்பா இருக்குமே!
**************************
வீட்டுல திருட்டு பயம் இல்லாம இருக்க ஒரு நாயை வாங்கினேன்!
அப்புறம்?
வீட்டுக்கு திருட வந்தவன் அந்த நாயை திருடிக்கிட்டுப் போயிட்டான்!
**************************
ரேஷன் கடைக்காரரை கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்பாப் போச்சு!
என்னாச்சுடி?
எப்பவும் என்னைக் குறைச்சுத்தான் எடை போடறார்!
**************************
வயிறு எரியுது டாக்டர்!
எப்ப இருந்து?
உங்க டிரீட்மென்ட் பில்லை பார்த்ததிலிருந்து!
**************************
பல் டாக்டர் பொண்ணு கல்யாணத்துக்குப் போனது தப்பாப் போச்சு!
என்னாச்சு?
மொய் வைக்கலேன்னா பல்லைத் தட்டிடுவேன்னு பயமுறுத்தினார்!
**************************
நான் இவ்வளவு நகைச்சுவையாக பேசியும் கூட்டம் கை தட்டலையே,ஏன்யா?
கூட்டத்துக்கு உங்க ஏஜென்ட் கூட்டிக் கிட்டு வந்தவங்களெல்லாம் பீகார் மாநில தொழிலாளிங்க தலைவரே!
**************************
எங்க பக்கத்து வீட்டுக்காரங்க ரொம்ப மாடர்ன் டைப்!
எப்படிச் சொல்றே மாலா?
எலிப் பொறியில கூடப் பீட்ஸாவும் பர்கரும்தான் வைப்பாங்க!
**************************
மகாராணியோட உடம்பு எடை 400 கிலோ இருக்காம் மன்னா!
அரண்மனை வைத்தியர் சொன்னாரா அமைச்சரே?
பல்லக்கு தூக்கிகள் சொன்னாங்க!
**************************
டாக்டர் இருக்காரா?
இல்லைங்க, அவர் ஒரு காரியமா சென்னை போயிருக்கார்!
ஆபரேஷன் மட்டும்தான் பண்ணுவார் னு நினைச்சேன், இப்ப, காரியம் கூட பண்ண ஆரம்பிச்சுட்டாரா?
**************************
பொண்ணைப் பார்த்துட்டுப்போன டாக்டர் மாப்பிள்ளை என்ன சொன்னார்?
24 மணி நேரம் கழிச்சுத்தான் எதையும் உறுதியாக சொல்ல முடியும்னுதான்!
**************************
பேங்க் திறப்பு விழாவுக்கு தலைவரை கூப்பிட்டது தப்பாப் போச்சு!
என்னாச்சு?
சாவியைப் போட்டு திறக்கணுமா, இல்ல பூட்டை உடைக்கணுமான்னு கேட்கிறாரு!