
உங்க மாமியார் ஊர்ல இருந்து வந்திருக்காங்களா தாயீ?
எப்படிக் கண்டுபிடிச்சே ராப்பிச்சை?
ஊசிப்போன உப்புமாவும், மீந்துபோன பழைய சாதமும் தர்றீங்களே?
***********************************
காக்கா கத்தினா விருந்தாளிங்க வருவாங்கன்னு சொன்னதுக்கு தலைவர் ஏன் பயந்து நடுங்குறார்?
போன தடவை காக்கா கத்தினப்பத்தான் தலைவர் வீட்ல ரெய்டு நடந்துதாம்!
***********************************
தலைவரே! நீங்க டாக்டருக்கு கொடுத்த செக் திரும்பி வந்துடுச்சு!
பேங்க் அக்கௌன்ட்ல பணம் இல்லைன்னா?
அந்தப் பேர்ல பேங்கே இல்லையாம்!
***********************************
நம்ம தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒரு விஷயத்துல ஒற்றுமை இருக்கு!
என்ன ஒற்றுமை?
ரெண்டு பேரும் சீர்திருத்த பள்ளியில ஒண்ணா படிச்சவங்களாம்!
***********************************
தலைவர் ஏன் சுயசரிதையை யாருக்கும் புரியாதமாதிரி எழுதியிருக்கார்?
புரியறமாதிரி எழுதினா கோர்ட், கேஸ்னு அலையவேண்டி வருமே!
***********************************
ஊழல் கறைபடியாத கட்சிதான் வரப்போற தேர்தல்ல ஆட்சிக்கு வரும் தலைவரே!
அப்ப நம்ம கட்சி ஆட்சிக்கு வராதுன்னு சொல்றியா?
***********************************
எதிரி உங்களைக் கடத்திக் கொண்டு போற மாதிரி கனவு கண்டேன் மகாராணி!
அது கனவுதானே மன்னா அதுக்குப்போய் ஏன் இவ்வளவு வருத்தப்படறீங்க மன்னா?
அது கனவு ஆயிடுச்சேன்னுதான்!
***********************************
பொண்ணு ரொம்ப சுமாராத்தான் இருப்பாளா தரகரே?
எதுக்கு கேட்கறீங்க?
மாப்பிள்ளையோட ஆதார் அட்டை யிலிருக்கிற போட்டோவைப் பார்த்தே மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்றாளே!