
"மகாராணியாரே… சுயம்வரத்தில் எதை வைத்து, நம் மன்னரை தேர்ந்தெடுத்தீர்கள்?"
"ம்க்கும். நான் எங்கே தேர்ந்தெடுத்தேன்..! நான் கால் இடறிக்கீழே விழப் போனபோது, என் கையில் இருந்த மாலை பறந்துபோய் இவர் கழுத்தில் விழுந்து தொலைத்துவிட்டது.
***********************************
"மன்னா, நம் நாட்டைக் கைப்பற்றிய எதிரி, குழந்தைகளையும், பெண்களையும் மன்னித்து விடுவதாக அறிவித்துள்ளானாம்"
"அப்படியா.! யாரங்கே... உடனடியாக என் சைசுக்கு ஒரு நைட்டி ரெடி பண்ணுங்கள்..!"
***********************************
"என்ன, எதிரி மன்னனுக்கு, தங்க குண்டூசி பரிசாக வழங்கியதில் நம் மன்னரின் ராஜதந்திரம் அடங்கியுள்ளதா..? எப்படி சொல்கிறீர்,?"
"கேட்போரிடம், எதிரி 'பின்'வாங்கிவிட்டான் என்று சொல்லிக்கொள்ளலாமே..."
***********************************
"மன்னா.. சாது மிரண்டால் காடு கொள்ளாதாம்..!"
"அதெல்லாம் நல்லா கொள்ளும்.. சாதுவான என்னை உசுப்பேத்திவிட்டு, போர்க்களத்தில் குதிக்க வைக்கலாம் என்று மனப்பால் குடிக்காதீர் மந்திரியாரே...!"
***********************************
'விற்போர்' என்றால் நம் மன்னருக்கு கொள்ளை பிரியம்...
'அந்தளவுக்கு வில் வித்தையில் கை தேர்ந்தவரோ..?"
"அட நீ வேற, தள்ளுவண்டியில் வைத்து, நொறுக்குத்தீனிகள் விற்போரை சொன்னேன்."
***********************************
"நம் மன்னர் போர்க்களத்தில் எல்லாருக்கும் முன்னோடியாக திகழ்ந்தாராமே?"
" அட நீ வேற.. .புறமுதுகிட்டு ஓடிவரும்போது எல்லாருக்கும் 'முன் ஓடி'யாத்தான் திகழ்ந்தாரு!"