
அந்த ஆளு கள்ள நோட்டு அடிச்சு எப்படி மாட்டிக்கிட்டாரு?
மகாத்மா காந்திக்கு பதிலா ராகுல் காந்தி படத்தை ப்ரிண்ட் பண்ணிட்டாராம்!
*****************************
ஹாஸ்பிடல்ல இரண்டு வாரம் டிரீட்மென்ட்டுல இருந்தியா, ஏன்?
என் மனைவி அவ செல்ஃபோன்ல ரெண்டு சிம் கார்டு யூஸ் பண்றதினாலே, என்னோட செல்ஃபோன்ல மனைவி ஒண்ணு, மனைவி இரண்டுன்னு சேவ் பண்ணி வச்சிருந்தேன்!
*****************************
தலையை ஸ்கேன் எடுக்கப்போன தலைவர் ஏன் திரும்பி வந்துட்டார்?
ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் ஸ்கேன் வேணாம்னு டாக்டர் சொல்லிட்டாராம்!
*****************************
நான் சொல்ற எதையுமே காதுல போட்டுக்க மாட்டேங்கிறியே மாலா?
வைரத்தோடு வாங்கித் தாங்க, நிச்சயமா காதுல போட்டுக்கறேன்!
*****************************
எங்க வீட்டு கிரைண்டரும், வாஷிங்மெஷினும் ரிப்பேர் ஆயிடுச்சு!
உன்னோட வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லைன்னு நேராகவே சொல்ல வேண்டியதுதானே!
*****************************
இது பிரியாணி மாஸ்டர் பொண்ணு கல்யாணமா?
ஏன் கேட்கிறே?
அட்சதை பசுமதி அரிசியில இருக்கே!
*****************************
எனக்கு எதைப்பார்த்தாலும் இரண்டாத் தெரியுது டாக்டர்!
அதுக்காக எனக்குத் தரவேண்டிய 400 ரூபாய் ஃபீஸுக்கு 200 ரூபாய் தந்தால் எப்படி சரியாகும்?
*****************************
தமிழுக்காக என் கடைசி மூச்சு இருக்கிறவரை போராடுவேன்னு தலைவர் சொல்றாரே, தலைவருக்கு அவ்வளவு தமிழ் பற்றா?
அட நீங்க வேற, கட்சியோட மகளிரணித் தலைவியின் பேர்தான் தமிழ்!