ஜோக்ஸ்: காலாவதி மிக்ஸர் ஸ்டால்...

Jokes
Jokes...
Published on

-மயிலை ஜெயந்தி

ன்னது, மிக்ஸர் கடை ஆரம்பிச்ச அன்னைக்கே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரெய்டு வந்துட்டாங்களா??

பின்னே! கலாவதி மிக்ஸர் ஸ்டால்னு போர்டு எழுதச்சொன்னா, காலாவதி மிக்ஸர் ஸ்டால்னு எழுதி வெச்சிருக்கான்.

************

“என்னைய்யா இது... உண்ணாவிரதப் பந்தலைச் சுற்றி இத்தனை காக்கா பறக்குது?”                                                                       

“ஹி...ஹி... உள்ளே வெச்சிருக்கிற மசால் வடை கூடையைப் பார்த்துருச்சு போலிருக்கு...”

************

“நம்ம தலைவரை வட கொரியா போலீஸ் தேடுது தெரியுமா...” 

“எதுக்கு?”

“தலைவர் அறிமுகப்படுத்தின நம்மக் கட்சிகொடி வட கொரியாவின் தேசியக் கொடியாம்!”

************

பேஷண்ட்: தினமும் யாரோ ஒருத்தர் என் கனவில் வந்து ஆபரேஷன் வேண்டாம்னு மிரட்டறார், டாக்டர்...

டாக்டர்: விட்டுத்தள்ளுங்க... போன மாசம் ஆபரேஷன் செஞ்சுக்கிட்ட குப்புசாமியாய் இருக்கும்.

************

 “நம்ம அரசர் இந்த முறை  பூனைப்படையும் போருக்குத் தேவைன்னு சொல்றாரே!”

“ஆமாம்... பாதிப்போரில் புறமுதுகு காட்டி ஓடி வரும்போது பூனை பின்னாடியே ஓடினால் கரெக்டா அரண்மனைக்கு வரமுடியுமாம். கூகுளை நம்ப முடியலையாம்.”

************

சேவகன் 1 : என்னது, அரசரோட பதுங்கு குழியிலிருந்து புகை வருது?

சேவகன் 2 : கொசுவை விரட்ட அரசர் புகை போட்டிருக்கார் போல..!

************

அரண்மனை வாசலில்…

சேவகன்  1:  நம்ம மன்னர் எதையுமே தாமதிக்க மாட்டார்.

சேவகன்  2:  எப்படி சொல்றே?

சேவகன் 1: போர் ஓலை கொண்டுவந்த ஒற்றன் குதிரையிலேயே, எதிரி மன்னன் காலில் விழறதுக்கு, உடனே டபுள்ஸ் கிளம்பிட்டார் பாரு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com