ஜோக்ஸ்: எனக்கு கொழுப்பு அதிகம்னு டாக்டர் சொல்லிட்டார்ங்க!

The doctor told me that I have too much fat!
Kalki Jokes
Published on

ஏ டி எம் திறப்பு விழாவுல தலைவர் அப்படி என்ன பேசினார்?

இப்பத்தான் முதன்முதலா, பகல்ல ஏ டி எம்மை திறக்கறேன்னு சொன்னாராம்!

**************************************

ஏங்க, எனக்கு கொழுப்பு அதிகம்னு டாக்டர் சொல்லிட்டார்!

இதுக்கு ஏண்டி டாக்டர் கிட்டப்போனே, என்கிட்ட கேட்டிருந்தா சொல்லியிருப்பேனே!

**************************************

டாக்டர்! என் வீட்டுக்காரர் எப்ப கண்ணைத் திறந்து பேசுவார்?

இதுவரை யாருமே கண்ணைத்திறந்து பேசியதில்லை, வாயைத் திறந்துதான் பேசுவாங்கம்மா!

**************************************

உங்க ஹோட்டல்ல சாதா சாப்பாடுக்கும், ஸ்பெஷல் சாப்பாடுக்கும் என்ன வித்தியாசம் சர்வர் ?

ஒரு நாள் வித்தியாசம் சார்!

**************************************

சார்! கூலிங் கிளாஸை கழட்டிட்டு சாப்பிடுங்க!

ஏன்யா?

என்னோட தட்டுல இருக்கிற வடையை எடுத்துச் சாப்பிடுறீங்ளே!

**************************************

டாஸ்மாக் திறந்து வைக்க வந்த தலைவர்கிட்ட குழந்தைக்கு பேர் வைக்கச் சொன்னது தப்பாப் போச்சு! என்னாச்சு?

"நெப்போலியன்"னு பேர் வச்சிட்டார்!

Kalki Jokes
Kalki Jokes

**************************************

மாலா! ஓவியரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்பாப் போச்சுடி!

ஏன் என்ன பண்றாரு?

இரவு, பகல் பாராம "சித்திர" வதை செய்றாரு!

**************************************

தலைவரே! திடீர்னு ஏன் உங்க கண்ணாடியை மாற்றணும்னு

சொல்றீங்க?

உங்க பார்வையே சரியில்லைன்னு வீட்டு வேலைக்காரி சொல்றாளே..!

**************************************

இவர் நேர்மையான வக்கீல், பொய்யே பேசமாட்டார்!

அப்ப வக்கீல் தொழிலுக்கே லாயகில்லைன்னு சொல்லு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com