என்னது மன்னர் கொரோனா யாகம் நடத்துகிறாரா?
ஆம்! கொரோனா பரவினால் போருக்குப் போகாமல் தப்பிக்கலாமென கொரோனா வர வேண்டி யாகம் நடத்துகிறார்.
******************************************
அவர் எப்போதும் ஆவி பறக்க காஃபி தந்தால்தான் குடிப்பாராம்?
ஏன்?
அவர் பேய்ப்பட டைரக்டராம்!
******************************************
மன்னர் போர்களை எப்படி நிறுத்துகிறார்?
எதிரி நாட்டு மன்னர்களுக்கு ஃபேஸ் புக்கில் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தாராம்! அவர்களும் ஏற்றுக்கொண்டனராம்!
******************************************
நமது பல்கலைக்கழகத்தில் புதிய கோர்ஸை மன்னர் சேர்க்கச் சொல்கிறாராமே?
ஆம்! "புறமுதுகிட்டு ஓடுதல்" என்ற தலைப்பில் 3 வருட கோர்ஸாம்!
******************************************
மன்னருக்கு இதெல்லாம் மிகவும் அதிகம்?
ஏன்?
100 வது முறை புறமுதுகிட்டு ஓடி வந்ததை விழாவாக எடுக்கப்போகிறாராம்!
******************************************
என்னது மன்னரை புதிதாக வந்த அரசவைப்புலவர் வீரராக மாற்றிவிட்டாரா?
ஆம்! அரசவைப்புலவர் தினம் பாடுவதைக் கேட்பதைவிட போருக்குப் போவதே மேல் என்று மன்னர் முடிவெடுத்த விட்டார்!
******************************************
அவர் போலி டாக்டர்னு எப்படிக்கண்டுபிடிச்சாங்க?
ஷூகர் ஏறிடுச்சி டாக்டர்னு பேஷண்ட் சொன்னா, ஆமா ஷுகர் விலை ஏறிடுச்சின்னு சொல்றாராம்!
-ரேவதி மகேஷ்