கேட்டீங்களா, ராப்பிச்சைக்காரன் கொழுப்பை, என் சமையல் படுமோசமா இருக்குன்னு சொல்லிட்டுப் போறான்!
விட்டுத்தள்ளு, நான் சொல்லணும்னு நினைச்சேன், அவன் சொல்லிட்டுப் போறான்!
*************************************************
இந்த சுட்டெரிக்கும் வெயில் காலத்துல குழந்தைக்கு பேர் வைக்க தலைவர்கிட்ட சொன்னது தப்பாப் போச்சு!
என்னாச்சு?
"அக்னி நட்சத்திரம்" னு பேர் வச்சிட்டார்!
*************************************************
எதிரியை வீழ்த்துவதுதான் என் கனவுன்னு மன்னர் சொல்றாரே?
அதான், மன்னரே கனவுன்னு சொல்லிட்டாரே!
*************************************************
ஜோசியர் தலைவருக்கு அரசியல்ல கண்டம் இருக்குன்னு சொன்னாரா?
அப்படிச் சொன்னா பரவாயில்லையே, தலைவர் அரசியல்ல இருக்கறதே தண்டம்னு சொன்னாரு!
*************************************************
பொற்காசுகள் கூடுதலாக தரவேண்டுமா, ஏன் புலவரே?
உங்களை புகழ்த்தி பாடுவதோடு மட்டும் நில்லாமல், மகாராணியை இகழ்த்தியும் பாடினேனே மன்னா!
*************************************************
தலைவரே! கடவுள் நல்லவங்களை மட்டும்தான் சோதிப்பாரு!
பின்ன எதுக்கய்யா என்னை சோதிக்கறாரு?
*************************************************
கருத்துக் கணிப்புல எனக்கு நம்பிக்கை இல்லைய்யா!
ஏன் அப்படி சொல்றீங்க தலைவரே?
நம்ம கட்சி தேர்தல்ல வெற்றிபெறும் என்று சொன்னா நம்பவா முடியுது!
*************************************************
அதிர்ச்சி தரும் தகவல்களை ஒன்றும் அந்த நாலாம் வார்டு பேஷன்ட்கிட்ட சொல்ல வேண்டாம் சிஸ்டர்!
நீங்கதான் அவருக்கு ஆபரேஷன் செய்யப் போறீங்கன்னு சொல்லிட்டேனே டாக்டர்!
*************************************************
கடைசியாக என்னை ஒருமுறை புகழ்ந்து பாடுங்கள் புலவரே!
இன்று நிறைய பொய் சொல்லிவிட்டேன், போதும் மன்னா!