
டாக்டர்! பயப்படும்படியா ஒண்ணு மில்லையே?
உங்க எல்லா டெஸ்டும் நார்மலா இருக்கேன்னு இப்ப நான்தான் பயப்படுறேன்!
***********************************
“எங்க ஹாஸ்பிடல்ல உலகத் தரம் வாய்ந்த ட்ரீட்மென்ட் கொடுக்குறோம்...”
“இருந்தாலும் சாதாரண மூக்கடைப்புக்கு பைபாஸ் சர்ஜெரி பண்றதெல்லாம் ரொம்ப ஓவர் டாக்டர்...”
***********************************
“நான் இப்போ தனி ஆள் இல்லை, எனக்கு பின்னால ஒரு கூட்டமே இருக்கு...”
“ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு திரியாதேன்னு நான் அப்பவே சொன்னேன்... நீ கேட்கலை...”
***********************************
பெண்ணின் தந்தை; "பொண்ணு பிடிச்சிருந்தாத்தான் சொஜ்ஜி, பஜ்ஜின்னு சொல்லிட்டீங்களா தரகரே ...?"
தரகர்: "சொன்னதுக்கு, 'பையனை தவிர மத்தவங்க சாப்பிடறோம்' னு பிள்ளையோட அப்பா சொல்றாருங்க..!"
மனைவி: "ஆபீஸ் வேலையை வீட்டுல வந்து செய்யாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்....?"
கணவன்: "கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா தூங்க விடும்மா...!"
***********************************
"அந்த ஆபீஸ்ல வெளிப்படைத் தன்மை அதிகமா இருக்கு சார்.. '!"
"எப்படி சொல்றீங்க?"
"இன்னின்ன வேலைக்கு இவ்வளவு சம்திங்னு நோட்டீஸ் போர்டுலயே எழுதி ஒட்டிருக்காங்களேl."
***********************************
"அந்த தலைவர் உண்மையிலேயே ரொம்ப வித்தியாசமானவர்தான்!"
" எப்படிச் சொல்றீங்க?"
" எல்லாரும் சினிமாவுல நடித்து பிரபலமாகி அரசியலுக்கு வருவாங்க; தலைவர், அரசியல்ல திறம்பட நடிச்சு சினிமாவுக்கு போயிருக்காரே!"