
டாக்டர் மாப்பிள்ளையை பொண்ணு பார்க்க வரச்சொன்னது தப்பாப் போச்சு!
என்னாச்சு?
'விசிட்டிங் ஃபீஸ்' 500 ரூபாய் வாங்கிட்டார்!
**************************************
அந்த ஃ பைனான்ஸ் கம்பெனியில உனக்கு எப்படி வேலை கிடைச்சுது?
கல்லூரி ஓட்டப்பந்தயத்துல முதல் பரிசு வாங்கின சர்டிபிகெட்டை காமிச்சேன்.
**************************************
புலவர் பாடும்போது மன்னர் ஏன் சிம்மாசனத்துல இருந்து எழுந்து போகிறார்?
மன்னருக்கு தூக்கத்துல நடக்கிற வியாதி இருக்கு!
**************************************
எதுக்கு லோன் கேட்டு வங்கிக்கு வந்திருக்கீங்க?
'திடீரென்று பணக்காரர் ஆவது எப்படி' ன்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கேன். அதை வெளியிடத்தான் சார்!
**************************************
அந்த வங்கி லோன் கொடுத்தே திவாலாயிடுச்சா, எப்படி?
லோன் வாங்கினவங்க எல்லாரும் இப்ப வெளிநாட்டுல தானே இருக்காங்க!
**************************************
சிஸ்டர்! டாக்டர் என்னோட ஆபரேஷனை ஏன் தள்ளி வெச்சுட்டாரு?
இதுக்கு முன்னாடி செஞ்ச ஆபரேஷனுக்கே இன்னும் முன் ஜாமீன் கிடைக்கல!
**************************************
அது ரொம்ப பணக்காரக்கட்சின்னு எப்படிச் சொல்றே?
தலைவரோட சிலையை பிளாட்டினத்துல செஞ்சிருக்காங்களே!
**************************************
நீ வீடுகள்ல திருடப்போகும்போது போலீஸ்காரரையும் கூட்டிட்டுப் போவியா, எதுக்கு?
மாமூல் குறைஞ்சு போச்சுன்னு சொல்லாம இருக்கத்தான் எஜமான்!
**************************************
காணாமல்போன உன் மனைவி உடனே திரும்பி வந்துட்டாங்களா, எப்படி?
'உன் தங்கச்சி ஊர்ல இருந்து வந்திருக்கா'ன்னு பேப்பர்ல விளம்பரம் போட்டேன்!
**************************************
மேலும் மின்சாரக் கட்டணம் அதிகரிச்சா என்ன செய்வேடி?
எனக்கு கவலையில்லை, எங்க வீட்டு வாஷிங் மெஷினுக்கு மின்சாரம் தேவையில்லை!
**************************************
அரண்மனை கஜானா காலி என்று புலவருக்கு எப்படித் தெரிந்தது?
என்னை இகழ்த்தி பாடினாலும் பிரச்னை இல்லைன்னு மன்னர் புலவர்கிட்ட சொல்றாரே!