ஜோக்ஸ்: அதுவும் ' ரன்னிங்' தானா மன்னா..?

Kalki jokes
ஓவியம்; பிள்ளை
சி.ஆர்.ஹரிஹரன்

நான் கேரளாவில் உள்ள ஆலுவா யில் வசித்து வருகிறேன். என் வயது 76. பல வருடங்களாக தினமலர் சிறுவர் மலர், வாரமலர், கல்கி, மங்கையர் மலர், விகடன், குமுதம், பொதிகை சாரல் போன்ற பத்திரிகை களுக்கு ஜோக்ஸ் எழுதி வருகிறேன். எனக்கு மனைவியும், இரு குழந்தை களும் இருக்கிறார்கள். மனைவி ஆர். கீதா பெயரிலும் பல தமிழ் பத்திரிகைகளுக்கு ஜோக்ஸ், சிறு கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

Updated on
Kalki Strip
Kalki Strip

தலைவரே! என்னை உங்க கட்சியில சேர்த்துக்கிட்டா சத்தியத்துக்கும், தர்மத்துக்கும் கட்டுப்பட்டு நடப்பேன்!

அதான்யா, கட்சியில சேர்த்துக்க தயக்கமா இருக்கு!

**********************************

மன்னர் சுயசரிதை எழுதுகிறாராமே, என்ன டைட்டில்?

'ஓடிய ஓட்டமென்ன'!

**********************************

தியேட்டருக்கு எதுக்குடா தட்டும், டம்ளரும் எடுத்துக்கிட்டுப்போறே?

இந்தப் படம் ரசிகர்களுக்கு நல்ல விருந்துன்னு விமர்சனம் சொல்லுதே!

**********************************

மன்னா! உங்களுக்கு எவ்வளவு வயதாகிறது?

35 முடிந்து 36 ரன்னிங் அமைச்சரே!

அதுவும் ' ரன்னிங்' தானா மன்னா!

**********************************

தலைவரே! அடுத்தது நம்ம ஆட்சிதான்!

எப்படிய்யா சொல்றே?

எதிர்க்கட்சிக்காரங்க ஊழல் இல்லாத  ஆட்சி அமைப்போம்னு மேடையில பேசினாங்களே!

Kalki jokes
ஓவியம்; பிள்ளை

**********************************

நான் கரடு முரடான பாதையைக் கடந்து வந்தவன்யா!

அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி ஜீப் டிரைவரா இருந்தீங்களா தலைவரே!

**********************************

அது பல் டாக்டர் வீடுன்னு எப்படிச் சொல்றே?

வீட்டு வாசல் மிதியடியில 'நல்வரவுன்னு போடாம 'பல்வரவு' ன்னு போட்டிருக்கே!

**********************************

நான் உயிரோட இருக்கற வரை  நான்தான்யா இந்தக் கட்சித் தலைவர்!

அதுவரைக்கும் கட்சி இருக்கணுமே  தலைவரே!

logo
Kalki Online
kalkionline.com