“மன்னர் மேல் மகாராணி கோபமாய் இருக்கிறாரே... ஏன்?”
“மகாராணியை அடமானம் வைத்து மன்னர் ஆன்லைனில் ரம்மி ஆடியிருக்கிறார்.”
******************************************
“சட்டமன்றத்துக்கு தலைவர் எழுதாத வெறும் பேப்பரை கொண்டு வராரே... எதுக்கு?”
“வெள்ளையறிக்கை வெளியிடனும்னு சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு...
******************************************
“உடல் பருமனைக் குறைக்க இளவரசி குதிரை பயிற்சி செய்தார்களே... என்ன ஆச்சு?”
“குதிரைதான் இளைத்துவிட்டது!
******************************************
“புலவரே மன்னரிடம் என்ன பாட்டுப் பாடி பரிசு பெற்றீர்?”
“பஞ்சப்பாட்டுதான்!
******************************************
“மழையில் நனைவது பிடிக்கும் என்று சொல்லும் மகாராணி இப்போதெல்லாம் மழையில் நனைவதில்லையே ஏன்?”
“தலைக்கு அடித்திருக்கும் டை சீக்கிரம் கரைந்து விடுகிறதாம்!”
******************************************
“உங்க அபார்ட்மெண்ட்ல சமையல் போட்டி வைக்கிறாங்களே. நடுவர் யாரு?”
“வேற யாரு எங்க ஏரியா ராப்பிச்சைதான்!”
******************************************
“தலைவர் புதுசா இந்தி கத்துக்கிறாருன்னு எதை வச்சு சொல்ற?”
“மைக் முன்னாடி நின்று மைக் டெஸ்டிங் ஏக்... தோ... தீன்னு... சொல்றாரே.”