
கேஸ் கட்டைத்தான் தலைக்கு வச்சு தூங்குவார்னா பாருங்க!
மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க!
கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!
********************************
"வக்கீலுக்கு நிறைய கேஸ் வருமோ,,,,?"
"கேஸ் கட்டைத்தான் தலைக்கு வச்சு தூங்குவார்னா பாருங்க! "
********************************
"உங்க பொண்ணு தங்கத்துக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருக்காமே, பையன் எந்த ஊர் சார்?"
"செம்பூர் சார்!"
"அப்ப நல்லா செட் ஆயிடும்!”
********************************
"தூக்கத்துல என் மனைவி, நற.நற...ன்னு பல்லை கடிக்கிறா டாக்டர் .,,,,?"
"பகல்ல உங்க மேல இருந்த கோபம், தீரலைனு அர்த்தம் சார் !"
********************************
"மொட்டைக் கடுதாசு எழுதறதுக்குன்னே எங்க ஆபீஸ்ல 2 பேர் இருக்காங்க!"
"யாராரு...?"
"பழனியும், திருப்பதியும்தான்!"
********************************
'டிராபிக் போலீஸ்:
"லைட் இல்லாமல் நைட்டுல வர்றதே தப்பு ; இதுல, என் மேல மோதி வேற நிப்பாட்றியே,,,?"
டூ வீலர் காரர்:
"சாரி சார்... இருட்டுல கண்ணு தெரியலை சார்.
********************************
ஜோக் எழுத்தாளர்: "நான் எது சொன்னாலும் என் மனைவி கேட்பா,' ஒண்ணைத் தவிரl."
ஒருத்தர்: "அந்த 'ஒண்ணு' என்ன?"
ஜோக் எழுத்தாளர்: "வேற என்ன! நான் சொல்ற ஜோக்குதான்!