எங்கம்மா கூட தலைகீழா நின்னு சண்டை போடறா!

எங்கம்மா கூட தலைகீழா நின்னு சண்டை போடறா!
Published on

யோகா மாஸ்டரோட பொண்ணு என் மனைவியா வந்தது தப்பாப்போச்சு!

என்னாச்சு?

எங்கம்மா கூட தலைகீழா நின்னு சண்டை போடறா!

*************************

உங்க சுகர் குறைய நீங்க தினமும் நடக்கணும்!

நடக்கலேன்னா டாக்டர்?

உங்க "காரியம்" நடக்கும்!

*************************

கல்யாண மண்டபத்துல இரண்டு வருஷமா வாட்ச்மேன் வேலை பார்த்துக்கிட்டிருந்த உன்னை ஏன் திடீர்னு வேலையை விட்டுத்தூக்கிட்டாங்க?

நான் டவுன்ல இரண்டு செருப்புக்கடை போட்டிருக்கறது மண்டப மேனேஜருக்கு தெரிஞ்சிடுச்சு!

*************************

நம்ம ஊருக்கு புதுசா வந்த  போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு டஸ்ட் அலர்ஜி இருக்குது தலைவரே!

நல்லதாப்போச்சு, என்னோட பழைய கேஸ் ஃபைல்களையெல்லாம் தூசி தட்டி எடுக்க மாட்டாரே!

*************************

சிசிடிவி கேமரா வந்தது நம்ம திருட்டுத் தொழிலுக்கு வேட்டு வச்சிட்டுச்சு!

எனக்கு அந்த பிரச்னையில்லை!

ஏன்?

நான் திருடறதே  சிசிடிவி கேமராவைத்தானே!

*************************

தலைவருக்கு நகைக்கடை திறப்பு விழாவுக்கு போகறது பிடிக்காதா?

அது பிடிக்கும், அங்கே சிசிடிவி கேமரா இருக்கறதுதான் பிடிக்காது!

*************************

டைரக்டர் சார்! உங்க படத்தோட கதை யாருதுன்னு டைட்டில்ல போடலியே?

கோர்ட்ல கேஸ் வந்தாத்தானே அது எங்களுக்கே தெரியும்!

*************************

தலைவர் சொல்ற ஜோக்கை கேட்டு அவர் ரூம்ல இருந்து போகிற வரை சிரிக்கிறியே... ஏன்?

சிரிக்கறதை நிறுத்திட்டா இன்னுமொரு ஜோக் சொல்லிடுவாரோன்னு பயந்துக்கிட்டுத்தான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com