இந்த ‘விளையாடாப் பிள்ளை’ யார் தெரியுமா?

கிருஷ்ணமூர்த்தி...
கிருஷ்ணமூர்த்தி...

"சுத்த விளையாட்டுப் பிள்ளை” என்று பல பையன்கள் பெயரெடுப்பதுண்டு. கிருஷ்ணமூர்த்தியோ "சுத்தமாய் விளையாடாப் பிள்ளை” என்று பெயரெடுத்தான். விளையாட வேண்டிய பருவத்தில் விளையாடா விட்டால் அது சாதாரண நிலை இல்லைதான். சரி. யார் இந்த கிருஷ்ணமூர்த்தி?

சிறு பிள்ளையாய் இருக்கையில் தாம் விளையாடாமல் இருந்துவிட்டதை அடிக்கடி கல்கி வருத்தத்துடன் நினைத்துக் கொள்வதுண்டு. கிட்டத்தட்ட நாற்பது வயதாகியிருந்தபோது, அப்படி ஒரு சமயம் நினைத்துக்கொண்டதை அவர் தம் எழுத்திலேயே தெரிவித்தார். பாலாற்றங்கரையில் மாசிலாமணி முதலியார் அமைத்திருந்த குருகுலத்தைப் பார்த்துவிட்டு எழுதிய நீண்டதொரு கட்டுரையின் மத்தியில் கல்கியே சொல்கிறார்:

‘எதிரில் மாணாக்கர் கோஷ்டிகள் சில வந்து நின்றன. உடனே கஸரத் வேலைகள் ஆரம்பமாயின. கஸரத்து என்றால் ஒரு தினுசு அல்ல; பல விதங்கள். முதலில் சாதாரண டிரில்; அப்புறம் தண்டால் பஸ்கி தினுசுகள்; அப்புறம் யோகாசனங்கள்; பிறகு தாண்டுதல், எழும்பிக் குதித்தல், இன்னும் சிலம்பம், குஸ்தி, கத்தி விளையாட்டு முதலியன.

அப்படியே பிரமித்துப் போய்விட்டோம் நாங்கள். முக்கியமாக நான் அங்கேயே பகற் கனவு காண ஆரம்பித்துவிட்டேன். மறுபடியும் சிறு பிள்ளையாகி அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கும் பாக்கியம் கிடைக்காதா என்றே தோன்றிவிட்டது.

நான் பள்ளிக்கூடத்தில் படித்த இலட்சணம் அப்போது ஞாபகம் வந்தது. நான் படித்த நாளில், ஹைஸ்கூல் பிள்ளைகளைச் சாதாரணமாய் இரண்டு பிரிவாகப் பிரித்துவிடுவது வழக்கம். ஒன்று படிக்கிற பிள்ளைகள், இரண்டு விளையாடுகிற பிள்ளைகள் என்று. படிக்கிற பிள்ளைகள் விளையாடப் போக மாட்டார்கள். விளையாடுகிற பிள்ளைகளுக்குப் படிப்பு வராது ! அவர்கள் உபாத்தியாயருடைய தயவில் ஆறாவது பாரம் வரையில் தூக்கிப் போடப்படுவார்கள். பிறகு, ஆறாவது பாரத்திலேயே வருஷக்கணக்காய் இருப்பார்கள். அவர்கள் வேறு பள்ளிக்கூடங்களுக்குப் போய்விடா வண்ணம், உபாத்தியாயர்களும் அவர்களைத் தாஜா பண்ணி வைத்திருப்பார்கள். படிக்கிற பிள்ளைகளுக்கு-நல்ல மார்க்கு வாங்குகிற பிள்ளைகளுக்கு வேறுவிதச் சலுகை உண்டு. அவர்கள் டிரில் கிளாஸுக்குப் போக வேண்டியதில்லை! (அந்தக் காலத்திலேயே வா?? இன்று வரைத் தொடர்கிறதே!)

இதையும் படியுங்கள்:
உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி பானம்!
கிருஷ்ணமூர்த்தி...

ஆகவே, நான் ஹைஸ்கூலில் படித்த நாளில் செய்த தேகாப்பியாசம் ஒன்றே ஒன்றுதான். சில சமயம், 'புட்பால்' விளையாட்டு நடக்கும் மைதானங்களுக்கு வேடிக்கை பார்க்கப் போவதுண்டு. அப்போது, விளையாடுகிறவர்கள் பந்தை வேகமாய் உதைக்கும்போது, நாங்கள் வேடிக்கை பார்க்கிற உற்சாகத்தில் சில சமயம் காலை வெறுந் தரையில் உதைப்போம்!

மக்களே! உங்கள் வீட்டு சிறுவர்கள் ஓடி ஆடி விளையாட வேண்டியப் பருவத்தில் அவர்கள் அதைச் செய்யாமல் தடுத்துவிடாதீர்கள். ‘விளையாடாமல் போனோமே’ என்ற ஏமாற்றமும் ஏக்கமும் பிற்காலத்தில் அவர்களுக்கு வர விடாதீர்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com