மடை திறந்த வெள்ளம்!

அமரர் கல்கி
அமரர் கல்கி

-புகைப்படங்கள்: ஸ்ரீஹரி

மரர் கல்கியின் தமிழ் நடையை - மடை திறந்த வெள்ளத்துக்கு ஒப்பிட்டுப் பேசினார் பாரதி பாஸ்கர். அவர் தலைமையில் அன்று நடைபெற்ற பட்டிமன்றமும் - மடை திறந்த வெள்ளம் போல பாய்ந்து பார்வையாளர்களுக்குக் களிப்பூட்டி சிந்திக்கவும் வைத்தது.

 ‘கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை’யின் சார்பில் அமரர் கல்கி நினைவு தினத்தையொட்டி 24.1.2024 அன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரி, குரு ராம்தாஸ் கருத்தரங்கு கூடத்தில், புத்தக வெளியீட்டு விழா மற்றம் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இறை வணக்கம்
இறை வணக்கம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையும், குருநானக் கல்லூரியின் மொழிப்புலம் – தமிழ்த் துறையும் இணைந்து, இந்த நிகழ்ச்சியை நடத்தின. நிகழ்ச்சிக்கு பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் பாரதி பாஸ்கர் தலைமை தாங்கினார். கல்லூரி தமிழ்த் துறை துணைத்தலைவர் முனைவர் அ.சக்திவேல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்துடனும், ‘வரமொன்று தா இறைவா’ என்ற இறை வணக்கப் பாடலுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.மூர்த்தி வரவேற்புரை நல்கினார். அப்போது அவர் அமரர் கல்கி தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்கினை நினைவு கூர்ந்தார். கல்கியின் மாபெரும் சரித்திர நாவல்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற படைப்புகளைப் பற்றியும் நினைவு கூர்ந்தார். அப்போது அவர் அமரர் கல்கி குறித்த கவிதை ஒன்றையும் படித்தார்.

முனைவர் அ.சக்திவேல்
முனைவர் அ.சக்திவேல்
முனைவர் மு.மூர்த்தி
முனைவர் மு.மூர்த்தி

தொடர்ந்து, வாழ்த்துரை வழங்கிய குருநானக் கல்லூரி முதல்வர் முனைவர் தி.க.அவ்வை கோதை, அமரர் கல்கியை பற்றி மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், அவரது வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். தமிழிலக்கியம், தமிழிசை, சுதந்திரப் போராட்டம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள் போன்றவற்றில் அவர் ஆற்றிய பங்கினைக் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார்.

மொழிப் புல முதன்மையர் முனைவர் கலாநிதி வாழ்த்துரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் தி.க.அவ்வை கோதை
கல்லூரி முதல்வர் முனைவர் தி.க.அவ்வை கோதை
முனைவர் கலாநிதி
முனைவர் கலாநிதி

தொடர்ந்து நிகழ்ச்சியில் வானதி பதிப்பகத்தினரால் பதிப்பிக்கப்பட்ட அமரர் கல்கியின், ‘மகாத்மாவிற்கு விண்ணப்பம்’, ‘சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்’ எனும் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்தப் புத்தகங்கள் அமரர் கல்கியின் அபிமானியும், எழுத்தாளருமான சுப்ர.பாலன் கைவண்ணத்தில் தொகுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூல்களை பாரதி பாஸ்கர் வெளியிட, முதல் பிரதியை முனைவர் அவ்வை கோதை பெற்றுக் கொண்டார்.

புத்தக வெளியீடு...
புத்தக வெளியீடு...
பாரதி பாஸ்கர்...
பாரதி பாஸ்கர்...

அமரர் கல்கி குறித்தும், நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இரு புத்தகங்கள் குறித்தும், பாரதி பாஸ்கர் தனது தலைமையுரையில் பேசும்போது, ‘சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்’ நூலிலுள்ள, 1933ம் ஆண்டு மதுவிலக்கினைக் குறித்து கல்கி எழுதிய ஒரு சிறுகதையை நினைவு கூர்ந்தார். அந்தச் சிறுகதை சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றும் பொருந்துவதைக் குறிப்பிட்டு, கல்கியின் படைப்புகள் காலத்தைக் கடந்தும் நிற்பதைச் சுட்டிக் காட்டினார். இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும், நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், மாணவர்கள் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படித்து பயன் பெறுமாறு அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்:
வியக்க வைக்கும் வாழை இலை பயன்பாடுகள்!
அமரர் கல்கி

மேலும் அவர், கல்கி தனது பொன்னியின் செல்வன் நாவலில், வந்தியத்தேவனும் நந்தினியும் சந்திக்கும் காட்சி விவரிப்பில் உள்ள எழுத்தாற்றலின் வீரியத்தை ரசனையுடன் பகிர்ந்து கொண்டார். கல்கி தனது குருநாதர் திருவிகவை பின்பற்றி, மணிபிரவாள நடையில் இருந்த தமிழ் இலக்கியத்தை, தனித்தமிழ் இலக்கியமாக அதனை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றதைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார். தஞ்சை பெரிய கோயிலையும், ராஜராஜ சோழனையும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் கல்வெட்டு ஆய்வாளர் தம்பையா, நீலகண்ட சாஸ்திரியார் ஆகியோரோடு அமரர் கல்கியும் குறிப்பிடத்தக்கவர் என்றும் அவர் கூறினார்.

குடும்பத்தில் ஒருவர் மட்டுமே  படிப்பைத் தொடர  முடியும் என்ற சூழலில், உறவினர் ஒருவர் உதவியால், நன்றாகப் படிக்கும் கல்கி மட்டும் திருச்சி சென்று படிக்க, அவரது சகோதரர்கள் செய்த தியாகத்தினையும் அப்போது அவர் நினைவு கூர்ந்தார். கல்கி எனும் ஒருவர் படித்ததினால், நமது தமிழ் கூறும் நல்லுலகு அடைந்த நன்மைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

பட்டிமன்றம் பங்கேற்ற மாணவர்கள்
பட்டிமன்றம் பங்கேற்ற மாணவர்கள்
பட்டிமன்றம் பங்கேற்ற மாணவர்கள்
பட்டிமன்றம் பங்கேற்ற மாணவர்கள்

செயற்கை நுண்ணறிவு ஆக்கமா அல்லது அச்சுறுத்தலா என்ற தலைப்பில், மாணவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. ஆக்கமே என்ற அணியில் மோகேஸ்வர், பார்கவி மற்றும் முருகன் ஆகிய மாணவர்கள் பங்கேற்றனர்.

அச்சுறுத்தலே என்ற அணியில் வள்ளியம்மை, ரேஷ்வதி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய மாணவர்கள் பங்கேற்றனர்.

பாரதி பாஸ்கர் தலைமை தாங்கினார். இருதரப்பு மாணவ குழுக்களும் தங்களது பக்க கருத்துக்களை பல்வேறு தரவுகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

செயற்கை நுண்ணறிவின் காரணத்தால், சிக்கலான மருத்துவ சிகிச்சைகளில் தவறுகள் குறைக்கப் படுகின்றன. செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மக்களின் பாதுகாப்பு கூடுகிறது. இரு வேறுபட்ட மொழிகளை சார்ந்த நபர்கள் கூட உரையாடுவதற்கு செயற்கை நுண்ணறிவு உதவுகிறது போன்ற பல்வேறு கருத்துக்களை ஆக்கமே என்ற அணியினர் முன்வைத்தனர்.

 சுப்ர.பாலன் கெளரவித்தல்...
சுப்ர.பாலன் கெளரவித்தல்...

செயற்கை நுண்ணறிவால் மக்களின் வேலைவாய்ப்பு குறையும். அடித்தட்டு மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை, மனிதனுடைய படைப்பாக்கம் குறையலாம் என்ற வாதத்தை அச்சுறுத்தலே என்ற அணி முன் வைத்தனர்.

இரு தரப்பு மாணவர்களும் பேசிய பிறகு, அவர்களது கருத்துக்களைப் பாராட்டிய, பாரதி பாஸ்கர் இறுதியில், செயற்கை நுண்ணறிவினால் ஆக்கம் பல இருப்பினும், அதனால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதனால், அச்சுறுத்தலே என்று தீர்ப்பளித்தார்.

சீதா ரவி
சீதா ரவி

‘கல்கி நினைவு அறக்கட்டளை’யின் சார்பாக, அதன் நிர்வாக அறங்காவலர் சீதா ரவி நன்றி நல்கினார். இறுதியில் நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com