வியக்க வைக்கும் வாழை இலை பயன்பாடுகள்!

Surprising Banana Leaf Uses
Surprising Banana Leaf Useshttps://www.madhimugam.com

திருமணம் மற்றும் விசேஷங்களில் வாழை இலையில் விருந்து படைத்து உண்பது காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. பல்வேறு பதார்த்தங்களை வாழை இலையில் பரிமாறி இருப்பதைப் பார்க்கவே கண்களுக்கு குளுமையாக, அழகாக இருக்கும். அதோடு வாழை இலையில் உண்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். சருமப் பளபளப்பிற்கும் வழி வகுக்கும். வாழை இலை பல்வேறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக செயல்படுகிறது. வாழை இலை உண்பதற்கு மட்டுமல்ல, அதை ஜூஸ் செய்தும் குடிக்கலாம். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

வாழை இலையில் உண்பதால் உண்டாகும் நன்மைகள்:

1. நமது உடல் பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் இருப்பதற்கு வாழை இலையில் உண்பது உதவுகிறது. வாழை இலையில் தினமும் உணவு உண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் அனைத்தையும் நீக்கி இரத்தத்தினை சுத்தமாக்கும்.

2. செரிமான மண்டலம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், மலசிக்கல் போன்ற பிரச்னை ஏற்படாமல் தடுக்க உதவும்.

3. அல்சர் மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் தினமும் வாழை இலையில் உணவு உண்டு வந்தால் விரைவில் நல்ல மற்றம் காண முடியும். நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.

4. வாழை இலையில் உணவு உண்பது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. சிறுநீரக கற்கள், சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் முற்றிலுமாக தடுக்க உதவும்.

5. வாழை இலையில் பாலிஃபீனால்கள் என்னும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளன. இது புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும், செல் அழிவினை தடுத்து எப்பொழுதும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.

வாழையிலை உண்பதற்கு மட்டுமல்ல, வெட்டுக் காயங்கள், தீக்காயங்கள் மற்றும் கொப்புளங்களுக்கு வாழை இலையை நறுக்கி ஒத்தடம் கொடுக்கலாம். இந்த மென்மையான இலைகள் தீக்காயங்கள் மீது குளிர்ச்சியை அளிக்கும்.

வாழை இலையை எரித்து சாம்பலை தண்ணீரில் கரைத்து குடிப்பதால் வாயு அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்றவை நீங்கும்.

வாழை இலைச் சாற்றின் நன்மைகள்:

வாழை இலைகளை துண்டு துண்டாக நறுக்கி சிறிது நீர் சேர்த்து ஜூஸாக அரைத்துக் கொள்ளவும். அதை வடிகட்டி குடித்தால் மிகுந்த நன்மைகளைக் கொடுக்கும்.

வாய்ப்புண், தொண்டைப்புண் உள்ளவர்களுக்கு வெறும் வயிற்றில் வாழை இலை சாறு குடித்து வந்தால் விரைவில் குணமாகும். இருமல், சளி குறைய சிறிது வாழை இலை சாறு குடித்தால் விரைவில் குணம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
இந்த 3 அறிகுறிகள் இருந்தால் உங்கள் ரிலேஷன்ஷிப் முடியப்போகுதுன்னு அர்த்தம்! 
Surprising Banana Leaf Uses

வாழை இலை ஜூஸை தலை முடிக்கு பயன்படுத்தி பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். வாழை இலையில் உள்ள புரதம் தலைமுடிக்கு மிகுந்த நன்மையளிக்கும்.

வாழை இலைச் சாற்றை வடிகட்டி அதை பிரீசரில் உள்ள ஐஸ் கியூப் பாக்ஸில் ஊற்றி வைத்தால் அவை ஐஸ் கட்டிகளாக மாறும். பின்பு அவற்றை முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகன்று முகம் மென்மையாக தோற்றமளிக்கும். இளமையான தோற்றத்தைத் தரும். வாழை இலை ஜூஸுடன் தயிர் சேர்த்து சருமத்தில் பூசி வந்தால் முகம் அழகாக காட்சி தரும். சிலருக்கு விக்கல் வந்தால் உடனே நிற்காது. அவர்களுக்கு வாழையிலை ஜூஸில் சிறிது தேன் கலந்து கொடுத்தால் உடனே விக்கல் நிற்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com