இருபத்தியாறு அப்பாவிகளை…
ஊர்சுற்றவந்த உல்லாசப் பயணியரை…
நெஞ்சில் ஈரமும் நினைவில் இரக்கமும்
கொஞ்சமுமின்றியே கொடூரமாக…
பதைபதைத்துச் சாகடித்த
பாவியர் முகாம்களை…
தூள்தூளாக்கிச் சிதைத்திட
இந்தியராணுவம் எடுத்துக்கொண்டதோ
இருபத்துமூன்றே நிமிடங்களென்றே…
கேள்விப்படுகையில் கிளர்ந்ததுமனசு!
துல்லியமாக அவர்களை மட்டுமே
குறிவைத்து அடித்ததைக்
குவலயமே போற்றும்!
எல்லோர் இதயமும்
இதனையே வாழ்த்தும்!
பொள்ளாச்சி நகரைச்சுற்றிப்
போகும் போதெல்லாம்…
விட்டுடுங்க அண்ணா! என்ற விபரீதக் குரல்தனையே
நெஞ்சம் அசைபோடும்!
நினைவுகளில் நிழலாடும்!
சிறுநேர இன்பத்தைச்
சிரத்தையுடன் தவிர்த்திருந்தால்…
ஒன்பது இளைஞரின்று
ஒட்டுமொத்தப் பிறவியையே
இழந்திருக்க மாட்டார்கள்!
இருள்சூழும் சிறைதன்னிலே
ஆயுளைப் போக்கிடும்
ஆபத்தைத் தவிர்த்திருப்பர்!
இன்றைக்கு வலம்வரும்
இளைஞர் அனைவருமே
இறுத்துங்கள் இதைமனதில்!
தீர்ப்பை வழங்கிய
சிறப்புமிகு நீதிபதி…
பாதிக்கப்பட்ட பலபெண்ணின்
பரிதாபநிலை உணர்ந்து
எண்பத்தைந்து லட்சத்தை
எல்லோருக்கும் வழங்கிடவே
ஆணையிட்டு முடித்துவைத்தார்!
ஆனாலும் முதலமைச்சர்
அதுபோதாது என்றெண்ணி…
ஒவ்வொரு பெண்ணுக்கும்
இருபத்தைந்து லட்சம்
வழங்கிடவே வகைசெய்தார்!
இனிவாழும் நாட்களை
இன்பமுடன் வாழ்ந்திடவே…
வாழ்த்துகின்றோம்! வாழ்ந்திடுவீர்!
இருபத்து மூன்றும்…
இருபத்து ஐந்தும்…
என்றும் நம்மனதில்
குடியிருந்து கோலோச்சும்!
குன்றாது இனிப்பெண்கள்
நன்றாக வாழ்ந்திடவே
நானிலத்தில் வகைசெய்வோம்!