kavithai image
kavithai imageImage credit - pixabay.com

கவிதை - நாடோடிகள்!

Published on

வாழ்க்கைப் பயணத்தில்

வாழுங் காலத்தில்

வாழ்ந்திடத் தேவை

வளமையும் நலமும்.

ஆதிமனிதன் நாளும்

அஞ்சியே வாழ்ந்தான்

அச்சம் போக்கிட

இணைந்தோர் இனமாக

கூடியே வாழ்ந்து

குடித்தனம் பேணிட

ஆற்றங் கரையினில்

ஆரவார நகர்வு.

மாரி பொய்த்தால்

மாற்றம் தேடுவர்.

உடலை ஓம்பிட

உணவை நாடுவர்.

வானமிழ்து இன்றேல்

வாட்டம் வந்திடும்.

குழுக்களாய்ப் பிரிந்தே

குமுகாயத்தார் ஆகினர்.

கருத்து மாற்றம்

கவலை  அளித்தல்.

எதிர்த்து போரிடல்

ஏமாளிகள் தோற்றோடல்

இதையும் படியுங்கள்:
ஆண்களே இது உங்களுக்காக... கொஞ்சம் கவனியுங்கள்!
kavithai image

நாடுவிட்டு நாடு

நகர்ந்தே ஏகினர்.

இயற்கை சீற்றங்களால்

இன்னல் அடைவு.

முந்நீர் தாண்டி

முன்னேறிடத் துடிப்பு.

கட்டைகளை இணைத்தே

கட்டுமரப்

பயணம்.

நாடோடிகள் அலைவழி

நாடினர் நிலத்தை! 

தங்கிய இடத்தைத்

தரமாய்ப் பண்படுத்தல்.

உணவைப் பெருக்கி

உடலை ஓம்புதல்.

யாதும் ஊரே

யாவரும் கேளிர்

என்று  பூங்குன்றனார்

அன்றேச் சொன்னார்.

logo
Kalki Online
kalkionline.com