Kombuseevi
Kombuseevi

விமர்சனம்: கொம்புசீவி - டைட்டிலுக்கு ஏற்ற கம்பீரம் 'டோடல்லி மிஸ்ஸிங்'!

Published on
ரேட்டிங்(2 / 5)
Kalki strip
Kalki strip

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கொம்புசீவி (Kombuseevi). யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி பகுதியில் 1970களில் அணை ஒன்றை கட்டுகிறது அரசாங்கம். இதனால் இப்பகுதியை சுற்றி உள்ள கிராமங்கள் காலியாகின்றன. இந்த கிராம மக்கள் வேறு வழியில்லாமல் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயிரிட்டு வியாபாரம் செய்கிறார்கள். வைகை அணைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார் ரொக்க புலி (சரத் குமார்). கஞ்சா கடத்தும் இவருக்கு உதவியாக வந்து சேருகிறார் கொம்புசீவி 'பாண்டி'. இருவரும் சேர்ந்து மதுரை சுற்று வட்டார பகுதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்கிறார்கள்.

அந்த பகுதிக்கு புதிதாக வரும் பெண் காவல்துறை அதிகாரி லைலாவுக்கு (தரணிகா) இவர்கள் கஞ்சா வியாபாரம் செய்வது பிடிக்கவில்லை. இவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முயற்சி செய்கிறார். இதனால் காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் ரெக்கை புலிக்கும், பாண்டிக்கும் மோதல் வருகிறது. இந்த மோதலின் விளைவு என்ன ஆனது என்று சொல்கிறது கொம்புசீவி.

அணை கட்டுவதால் ஏற்படும் வாழ்வாதரர பிரச்சனை என்ற ஒன்லைனை சரியாக மெருகேற்றி சரியான திரைக்கதையில் படம் தந்திருந்தால் இந்த படம் ஒரு சிறப்பான படமாக வந்திருக்கும். இந்த விஷயம் மேம்போக்கான விஷயமாக வந்து செல்கிறது. கிரிமினல் - போலீஸ் மோதல் என்ற பழைய பல்லவியில் மிக சுமாரான காட்சிகளுடன் வந்திருக்கிறது படம்.

போதாகுறைக்கு கைதி - பெண் போலீஸ் காதல் என்ற புளித்து போன மாவையும் சேர்த்து தந்திருக்கிறார் டைரக்டர். ஒவ்வொரு போலீஸ் அதிகாரியாக வந்து இரண்டு பேரையும் பிடிக்க முடியாமல் போகும் போது, "அதுதான் பிடிக்க முடியலைன்னு தெரியுதே அவங்களை விட்டுருங்க" என்று நாம் சொல்லும் அளவிற்கு ஸ்கிரிப்ட் பலவீனமாக உள்ளது.

கதை எந்த கால கட்டத்தில் நடக்கிறது என்ற குழப்பம் பல இடங்களில் இருக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினி முருகன் போன்ற படங்களில் நகைசுவையை பிரமாதமாக தந்த டைரக்டர் பொன்ராம் இந்த கொம்புசீவி படத்தில் சில காமெடி நடிகர்களை வைத்து கொண்டு சுமாராக கூட காமெடி காட்சிகளை வைக்க வில்லை.

இதையும் படியுங்கள்:
Interview: "அப்பாவை இன்னும் அதிகமாக கொண்டாடி இருக்க வேண்டும்!" - விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் உருக்கம்!
Kombuseevi

வைகை அணையை சிறப்பாக படம் பிடித்த பலசுப்ரமணியம், நாட்டுப்புற இசையில் துள்ளல் பாடலை தந்த யுவன்சங்கர் ராஜா இருவரின் பங்களிப்பும் சிறப்பாக இருக்கிறது.

மதுரை மொழி, மிடுக்கு என பல இடங்களில் நடிப்பில் மீண்டும் ஒரு நாட்டாமையை நினைவு படுத்துகிறார் சரத்குமார்.

தரணிகா காதல் காட்சிகளில் சிறப்பாகவும், போலீஸ் கெட்டப்பில் சாதாரணமான நடிப்பையும் தந்துள்ளார்.

சண்முக பாண்டியன் ஆக்ஷன் தவிர வேறு எந்த காட்சிகளிலும் நடிப்பிற்கு ஏற்ற எந்த வித முக பாவனையையும் தரவில்லை. காதல், காமெடி என பல காட்சிகளில் ஒரே வித உணர்வுகளை காட்டுகிறார். டைட்டிலுக்கு ஏற்ற நடிப்பு சண்முக பாண்டியனிடம் இல்லை.

மொத்தத்தில் கொம்புசீவி - டைட்டிலுக்கு ஏற்ற கம்பீரம் கதையில் இல்லை.

logo
Kalki Online
kalkionline.com