கர்ப்பப்பையை பாதுகாக்க வேண்டுமா? தழும்புகள் இல்லா நவீன சிகிச்சை இதோ! - KMCH சிறப்பு முகாம்!

அறுவை சிகிச்சை இன்றி ரோபோடிக் முறையில் கட்டிகளை நீக்கி ஆரோக்கியம் பெற ஒரு வாய்ப்பு.
2 Women talking in the Hospital |  கர்ப்பப்பை நார்த்திசுக் கட்டி
KMCH Fibroid Treatment | கர்ப்பப்பை நார்த்திசுக் கட்டிAI Image
Updated on

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவனையில் (KMCH) உள்ள கதிர்வீச்சியல் துறையில் ஜூன் 1 முதல் 30 வரை சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில் இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனையை சலுகை கட்டணத்தில் செய்து கொள்ளலாம்.

முன் பதிவுக்கு: 7418887411.

கர்ப்பப்பை நார்த்திசுக் கட்டி ஆபத்து இல்லை என்றாலும், தொந்தரவு தான். எளிய சிகிச்சை செய்து சரி செய்து கொண்டால், சிரமங்களில் இருந்து விடைபெறலாம்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் சாதாரணமாக இருந்தாலும், அலட்சியப்படுத்தி விடக் கூடாது. மாதவிடாய் காலங்களில் சிலருக்கு அதிக வலி ஏற்படும். அதிக அளவில் உதிர போக்கு இருக்கும். சிலருக்கு சிறுநீர் கழித்தல் மற்றும் மலம் கழிப்பதில் சிரமம், அடிவயிற்றில் எப்போதும் நிறைந்திருப்பது போன்ற உணர்வு இருத்தல் போன்றவை கர்ப்பப்பை நார்த்திசுக் கட்டி இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

கர்ப்பப்பை நார்த்திசுக் கட்டி (Fibroid) என்பது, பெண்களுக்கு சாதாரணமாக காணப்படும் ஒரு புற்று நோய் அல்லாத கட்டி. இது சாதாதரண கட்டியாக இருந்தாலும் மாதவிடாய் கோளாறுகளால் அகற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனவே, சிறிய பிரச்சனை இருந்தாலும், அதை தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் எவ்வித தொந்தரவும் இல்லாமல் நலமுடன் ஆரோக்கியமாக வாழலாம்.

KMCH Fibroid Treatment | கர்ப்பப்பை நார்த்திசுக் கட்டி
KMCH Fibroid Treatment | கர்ப்பப்பை நார்த்திசுக் கட்டி

கர்ப்பப்பை நார்த்திசுக் கட்டிக்கு கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை:

கர்ப்பப்பையில் ஏதாவது பிரச்சனை என்றால், அதனை அகற்றி விடலாம் என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் அவசியமானவை. கர்பப்பை நார்த்திசுக் கட்டிகளுக்கு கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

1. ஊசி அளவு துளை மூலம் எந்தவித தழும்புகள் இல்லாமல் கட்டிகள் சுருங்க செய்யப்படுகிறது. இதற்கு எம்போலைசேஷன் சிகிச்சை எனப்படுகிறது. இந்தியா அளவில் சில மையங்களில் மட்டுமே செய்யப்படும் சிறப்பு அதிநவீன சிகிச்சை ஆகும்.

2. அதிதுல்லிய ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் கட்டிகள் மட்டும் அகற்றப்படுகிறது. இது சிறிய துளையின் மூலம் செய்யப்படுவதால் மிக குறைந்த தழும்புகளே காணப்படுகிறது.

மேற்குறிய இரண்டு வகை சிகிச்சைகள் மூலம் கர்பப்பையை பாதுகாக்கப்படுகிறது.

பரிசோதனையின்போது கர்ப்பப்பை நார்த்திசுக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டால், தகுந்தசிகிச்சை அளிக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவர். இதற்கும் கட்டண சலுகை உண்டு. வழக்கமான அறுவை சிகிச்சைக்கு பதிலாக, இந்த கட்டிக்கு நவீன தழும்பு இல்லாத சிகிச்சை மேற்கொள்ளப்படும். உங்களது கர்ப்பப்பையை காத்திட இது ஒரு அருமையான வாய்ப்பு.

KMCH Fibroid Treatment | கர்ப்பப்பை நார்த்திசுக் கட்டி
KMCH Fibroid Treatment | கர்ப்பப்பை நார்த்திசுக் கட்டிAI Image

இந்த கட்டியை கண்டறிய ஒரு வாய்ப்பு:

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவனையில் உள்ள கதிர்வீச்சியல் துறையில் ஜூன் 1 முதல் 30 வரை சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில் இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனையை சலுகை கட்டணத்தில் செய்து கொள்ளலாம். டாக்டர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்க இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.

ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் இந்த பரிசோதனை முகாம் இருக்காது. மேலும் விபரங்களுக்கு மற்றும் முன் பதிவுக்கு: 7418887411.

இதையும் படியுங்கள்:
கண்கள் சோர்ந்து போகிறதா? கண் பாதுகாப்பு குறித்த நிபுணர் தரும் 'நச்சுனு 4' பதில்கள்!
2 Women talking in the Hospital |  கர்ப்பப்பை நார்த்திசுக் கட்டி
logo
Kalki Online
kalkionline.com