கால் – கீற்று – கொம்பு – சுழி – விலங்கு – இவை என்ன?

துணையெழுத்தின் பெயர்கள்...
துணையெழுத்தின் பெயர்கள்...www.bbc.com

மிழ் எழுதவும், படிக்கவும் தெரிந்த நம்மில் பலருக்கு தமிழ் எழுத்து வடிவங்களில் பயன்படுத்தப்படும் துணையெழுத்துகளைப் பற்றியும் அவைகளின் பெயரும் தெரியாது.

கா - என்னும் நெடிலை எப்படி எழுதுகிறோம்?
'க' என்ற குறில் எழுத்தை எழுதி அதன் அருகில் கால் போட வேண்டும்.

கொ என்ற ஒற்றை எழுத்தினைக் குறிக்க நாம் மூன்று எழுத்துருக்களை எழுதுகிறோம். முதலில் ஓர் ஒற்றைக் கொம்பு, அடுத்து 'க' என்னும் உயிர்மெய்யெழுத்து, அதன் பின்னர் ஒரு துணைக்கால் என மூன்று தனித்தனி எழுத்துருக்களை எழுதினால்தான் 'கொ' - என்ற ஓர் உயிர்மெய் எழுத்து எழுதப்படுவதாகும்.

ஆனால் இவற்றில் கால், கொம்பு தவிர மற்ற துணையெழுத்தின் பெயர்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை.

இங்கு அனைத்து துணையெழுத்துகளின் வகைகளையும் பெயர்களையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

* துணைக்கால் – கா, சா, தா, வா
* கொம்புக்கால் – ஊ, கௌ, சௌ. யௌ
* மடக்கு ஏறுகீற்றுக் கால் – ணூ, தூ, நூ
* ஒற்றைக்கொம்பு – கெ, நெ, செ,ளெ
* இரட்டைக்கொம்பு – கே, நே, சே,ழே
* இணைக்கொம்பு/சங்கிலிக்கொம்பு – கை, சை, நை, றை
* சாய்வுக்கீற்று – ஏ
* இறங்கு கீற்று – பு, சு, வு, யு
* மடக்கு ஏறு கீற்று – ணு, து, நு, லு. று
* பின்வளைகீற்று – கூ
* மேல்விலங்கு – கி, தி, பி, மி
* கீழ்விலங்கு – மு, ரு, கு, டு
* இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி – சூ, பூ
* மேல்விலங்குச் சுழி – கீ, தீ, ரீ, வீ
* கீழ்விலங்குச் சுழி – மூ, ரூ, டூ
* பிறைச்சுழி – ஆ

இதையும் படியுங்கள்:
உலகின் பிரம்மாண்ட சொகுசுக் கப்பல் இதுதான்! விலை என்ன தெரியுமா?
துணையெழுத்தின் பெயர்கள்...

இத் தமிழ்த் துணையெழுத்து வடிவங்களின் பெயர்கள் அனைத்தையும்… இனி வரும் காலங்களில் புழங்கி மனதில் நிலைபெறச் செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com