உலகின் பிரம்மாண்ட சொகுசுக் கப்பல் இதுதான்! விலை என்ன தெரியுமா?

Icon of the Seas
Icon of the Seas
Published on

இந்திய மதிப்பில் சுமார் 16,600 கோடியில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான Icon of the Seas அமெரிக்காவில் தன் முதல் பயணத்தைத் தொடங்கியது. அப்படி இந்த கப்பலில் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

சொகுசு கப்பல் என்றதும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது டைட்டானிக் கப்பல்தான். அதிலும் குறிப்பாக அந்த கப்பல் பற்றி திரைப்படம் வெளிவந்த பிறகு நமது நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தது. ஆனால் அதைவிட பல மடங்கு பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது Icon of the Seas எனப்படும் ராயல் கரீபியன் நிறுவனத்தின் கப்பல். 

பல்லாயிரம் கோடி ரூபாயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கப்பல் அமெரிக்க துறைமுகத்திலிருந்து தன் முதல் பயணத்தைத் தொடங்கியது. இந்த பயணத்தை கால்பந்தாட்ட ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி கோலாகலமாகத் தொடங்கி வைத்தார். கிட்டத்தட்ட 20 தடங்கள் கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பல் ஈபில் கோபுரத்தின் உயரத்தை விட பெரியதாகும். ஒரே சமயத்தில் இதில் 7500 பயணிகளும் 2000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் என பத்தாயிரம் பேர் வரை பயணம் செய்ய முடியும். இது தவிர 7 நீச்சல் குளங்கள், 6 நீர் சறுக்குகள், பணிச்சறுக்கு அரங்கம், விளையாட்டு மைதானம் என அனைத்துமே உள்ளது. 

மேலும் இந்த சொகுசு கப்பலில் மதுக் கூடங்கள், 40க்கும் மேற்பட்ட உணவகங்கள், சூதாட்ட விடுதி, வணிக வளாகம் உட்பட உலகில் நாம் அனுபவிக்கும் அனைத்துமே வியப்பூட்டும் வகையில் இந்த கப்பலில் உருவாக்கியுள்ளனர். இதில் பயணம் செய்யும்போது கடல் மட்டத்திலிருந்து சுமார் 154 அடி உயரத்தில் நின்று இயற்கையை மேலும் ரசிக்க முடியும். தூரத்திலிருந்து இந்த கப்பலை பார்க்கும்போது ஒரு தீவு ஒட்டுமொத்தமாக நகர்ந்து செல்லும் உணர்வை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
காலேஜ் சென்று MBA படித்து காலத்தை வீணாக்காதீர்கள்.. இந்த ஒரு புத்தகமே போதும்! 
Icon of the Seas

மொத்தம் 2,50,800 டன் எடை கொண்ட இந்த கப்பலில், இசை நிகழ்ச்சி அரங்கு, பிரம்மாண்ட திரையரங்கம், ஓய்வறைகள், ஜிம், ரோப் விளையாட்டுகள் போன்ற எதற்கும் பஞ்சமில்லை என்பது நம்மை வியக்கச் செய்கிறது. உலகிலேயே பிரம்மாண்டமான அதிக எடை கொண்ட சொகுசு கப்பல் என்ற பெருமையை சுமந்து கொண்டு கம்பீரமாக கடலில் மிகுந்த செல்கிறது. 

இந்த கப்பலில் ஏழு நாள் பயணம் செய்து அதில் உள்ள அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள 1,50,000 முதல் 12 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. என்எல்ஜி திரவ எரிவாயுவில் இயங்கும் இந்த கப்பலில் மொத்தம் ஆறு இன்ஜின்கள் உள்ளன. இந்த கப்பல் மீத்தேன் எரிவாயுவை உமிழ்வதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என சொல்லப்பட்டாலும், சொகுசு, புதுமை, பிரம்மாண்டம், சாகசம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமாக Icon of the Seas சொகுசு கப்பல் திகழ்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com