கவிதை: திரும்பினால் மகிழ்வோமே!

நேபாளத்தில் ஏற்பட்ட கோரப் புயல் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய குடும்பத்தினரின் தற்போதைய நிலவரத்தை விளக்கும் கவிதை
கவிதை | Nepal flood
கவிதை| Nepal floodImage credit: Chatgpt
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on
Kalki Strip
Kalki Strip

நேபாளம் பார்க்கப் போன

நேசமுள்ள எங் குடும்பம் 

ஊர் வந்து சேரலையே

ஒரு தகவலும் தெரியலையே!

தாராளமா செலவு செஞ்சி

தன்னிச்சையா மலைமேல் ஏறி

மேலிருந்து கீழே பார்க்கப்போனாங்க

மெதுவாக எறங்கிடவே நெனச்சாங்க!

அதுக்குள்ள புயலாஅது வந்திடிச்சி

அங்கிருந்த அனைத்தையும் அடிச்சிடிச்சி!

அவங்கநெலை என்னன்னு தெரியல

அடிவயிற்றுக் கலக்கமது போகல!

டிவியிலே வீடியோவிலே பார்க்கையிலே

நெஞ்சுக்குள்ளே நெருப்பொன்னு பற்றுது!

இப்படியும் நாட்டிலே நடக்குமான்னு

இதயத்தில் துக்கம்வந்து அடைக்குது!

முன்னூறு நானூறு என்றவர்கள்

முழுதாய் இப்பொழுது ஆயிரத்தில் 

இறந்தவர்கள் எண்ணிக்கை என்கிறார்கள்

இதுவும் தெளிவில்லை என்கிறார்கள்!

மலையும்மரமும் மண்ணும் சேறும் 

ஒன்றாய்ச் சேர்ந்து உயரத்திலிருந்து 

உயிரை விட்டிட குதித்ததைப்போல

ஏதோவொன்றுநடந்தது!என்னன்னு  ஏதும்புரியல!

முன்பெப்பொழுதும் இதுபோல் இல்லை

முழுதாயெதுவும் புரியவும் இல்லை!

நடந்தது எதுவும் நல்லதாயில்லை

நாங்கள்நிற்பதோ துயரத்தின் எல்லை!

மண்ணும் நீரும் மரமுந்தானே

மனித உயிர்களின் உயிர்நாடியென்றும்!

அதுவே நம்மைக் காத்திடும்கவசம் 

அழிப்பதும் அதுவென்றால் ஆச்சரியந்தானே!

இதையும் படியுங்கள்:
கவிதை: நீயுமா நீரே!
கவிதை | Nepal flood

எங்கோ மனிதன் தவறிழைக்கின்றான் 

இயற்கையை மதிக்கத் தவறிடுகின்றான்

பொறுத்த அதுவும் பொங்கிடும்போது

புரியாமல் அவனும் தவித்திடுகின்றான்!

எப்படியேனும் அவர்கள் திரும்பினால் 

இறைவா நாங்கள் மகிழ்ந்திடுவோமே!

உறவாய் இருந்தவர் இல்லையென்றாலே

உதிரமும் நமக்கு நடுங்கிடுந்தானே!

logo
Kalki Online
kalkionline.com