இந்திய இராணுவ துணைத் தளபதியான தமிழர் என்.எஸ். ராஜா சுப்ரமணி!

NS Raja Subramani
NS Raja Subramani
Published on

இந்திய இராணுவத்தின் 47வது துணைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து உள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டிற்கு நீங்காப் புகழைச் சேர்த்துள்ள இவரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள இந்தப் பதிவு உங்களுக்கு துணை நிற்கிறது.

இந்திய அளிவில் உயரிய பதவியை வகிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்கள் வெகு சிலரே. பல ஆண்டுகள் நாட்டுக்காக கடினமாக உழைத்தால் மட்டுமே உயர் பதிவிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அவ்வகையில் தனது வாழ்க்கையை இந்திய இராணுவத்திற்காகவே அர்ப்பணித்த தமிழரான லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, தற்போது இராணுவ துணைத் தளபதியாக பொறுப்பேற்று, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கல்வி:

இந்திய ராணுவ அகாடமியில் பட்டதாரி படிப்பை முடித்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, லண்டனில் இருக்கும் கிங்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டத்தையும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புத் துறையில் எம்ஃபில் பட்டத்தையும் பெற்றுள்ளார். இங்கிலாந்து ப்ராக்னெல்லில் இருக்கும் பொது அதிகாரி கூட்டு சேவைகள் கட்டளை பணியாளர் கல்லூரி மற்றும் டெல்லியில் இருக்கும் தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றிலும் இவர் கல்வி பயின்றுள்ளார்.

இராணுவ வாழ்க்கை:

1985 ஆம் ஆண்டு தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்கிய என்‌.எஸ். ராஜா சுப்ரமணி, முதலில் 8வது பட்டாலியனில் நியமிக்கப்பட்டார். தேசிய பாதுகாப்பு அகாடமியின் ஒரு பிரிவில் அதிகாரியாகயும் பணியாற்றினார். இவர் ஐக்கிய ராஜ்ஜியத்தின் ப்ராக்னெலில் உள்ள கூட்டு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் படிப்பை முடித்து இந்தியா திரும்பியதும் ஒரு மலைப் படையின் பிரிகேட் மேஜராக நியமிக்கப்பட்டு, தனது பணியை சிறப்புறச் செய்தார். மேலும் இவர் அசாமில் உள்ள கர்வால் ரைபிள்ஸ் என்ற 16-வது பட்டாலியனுக்கு தலைமை தாங்கி வழிநடத்தினார். கஜகஸ்தானின் அஸ்தானாவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு இணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கர்னல் பதவியில், இராணுவத் தலைமையகத்தில் இருக்கும் எம்எஸ் கிளையில் உதவி இராணுவச் செயலாளராகவும் பணியாற்றினார். ஜம்மு காஷ்மீரில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் துறையின் துணைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஜிஓசி-யின் சென்ட்ரல் கமாண்டராகவும் பணிபுரிந்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
விண்வெளியில் பறக்கும் கோபிசந்த் தோட்டகுரா! யார் தெரியுமா?
NS Raja Subramani

பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் காலாட்படையை வழிநடத்தி சாதனை புரிந்தார். வடகிழக்கு இந்தியாவில் 'கருப்பு பூனை' பிரிவை மேற்பார்வையிட்ட இவர், 2020-ல் உத்தர பாரத் பகுதிக்கும் அம்பாலாவில் உள்ள முக்கிய கார்கா கார்ப்ஸுக்கும் கட்டளையிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் தலைமைக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற லெப்டினன்ட் ஜெனரல் எம்.எஸ். ராஜா சுப்ரமணி, ஜூலை 1, 2024 அன்று ராணுவத்தின் 47வது துணைத் தளபதியாக பதவியேற்று தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்துள்ளார். வரலாற்றில் இவரது சாதனைகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும்.

விருதுகள்:

2015 ஆம் ஆண்டில் என்.எஸ் ராஜா சுப்ரமணிக்கு விஷிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டில் இவருக்கு அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. இதே ஆண்டில் இவர் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கும் உயர்த்தப்பட்டார்.

இது தவிர்த்து சேனா பதக்கத்தையும், பரம் விஷிஷ்ட் சேவா பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

இராணுவத்தில் பல்வேறு பதவிகள், விருதுகளை வாங்கிய லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, தமிழக இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறார். கடந்த 37 ஆண்டுகளாக இராணுவத்தில் இவர் நிகழ்த்திய அளப்பரிய சாதனைகள் தான் இன்று இவர் இராணுவ துணைத் தளபதியாக பதவி வகிக்க காரணம். வரலாற்றில் இவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com