கட்சித் தொண்டர்களே... 2026 அழைக்குது வாங்க...

Public...
Public...
Published on

-தா. சரவணா

ந்த உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் தொடங்கி, கடந்த 2ம் தேதி நிறைவடைந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை 4ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து களம் இறங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன் பின்னர் பல்வேறு பேரங்கள் நடக்கும். அதாவது, இத்தனை நாட்களாக கூட்டணிக்குள் இருந்தவர்களை, மாற்று அணிக்கு அழைத்துச் செல்வதிலிருந்து அவர்களை விடாமல் பிடித்து வைப்பதுவரை பல்வேறு குதிரை பேரங்கள் நடக்கும். அதன்பின்னர் ஒருகட்டத்தில் அனைத்தும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, அதிக எண்ணிக்கை எம்.பி.க்களை கைகளில் வைத்திருப்பவர்கள் ஆட்சி அமைப்பார்கள்.

இதன் பின்னர் கட்சிக்காக களத்தில் இறங்கி கொடி கட்டி, பேனர் கட்டி, வாழ்க கோஷம் போட்ட தொண்டர்கள் அடியோடு மறக்கப்படுவார்கள். இத்தனை நாட்களாகத் தொண்டர்களுடன் ஒன்றாக இருந்த வட்டம், ஒன்றியம், மாவட்டம், எம்.எல்.ஏ., அமைச்சர் உட்பட பல தரப்பினரையும் தொண்டர்கள் எட்ட நின்றுதான் பார்க்கமுடியும். அதாவது பரவாயில்லை. ஓட்டுப் போட்ட மக்களும், மேலே குறிப்பிட்ட நபர்களைப் பார்க்க வேண்டும் என்றால், அவர்களின் வீட்டு வாசலில் தேவுடு காக்க வேண்டும்.

இன்னும் 2 ஆண்டுகளுக்கு அப்படித்தான். அதன் பின்னர் மீண்டும் சட்டசபைத் தேர்தல் வரும். அப்போது மேலே குறிப்பிட்டவர்கள், தொண்டர்களுடன் ஒன்று சேர்வார்கள். இப்படியாக ஒவ்வொரு தேர்தலுக்கும் தொண்டர்கள் நிலை இப்படித்தான் உள்ளது. ஆனால், தலைவர்கள் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறிக்கொண்டே செல்கின்றனர். அதையும் இந்தத் தொண்டர்கள் பார்த்தபடி, ஒன்றும் சொல்லமுடியாமல், தலைவர் வழி, தங்கள் வழியாக நடக்கின்றனர்.

இதில் ஜெயிக்கும் வரையில் ஒரு கூட்டணி. ஜெயித்த பின்னர் வேறு கூட்டணிக்கு மாறுபவர்கள் குறித்து என்ன சொல்வெதன்றே தெரியவில்லை.

இதையும் படியுங்கள்:
ஆந்திரா ஸ்பெஷல் பேப்பர் ஸ்வீட் பூதரெகுலு ரெசிபி!
Public...

தேர்தல் குறித்து ஒரு முக்கிய முடிவை தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டும். அதாவது சில தலைவர்கள், 2 தொகுதிகளின் போட்டியிடுகின்றனர். அதில் ஒரு தொகுதியில் ஜெயித்து, இன்னொரு தொகுதியில் தோல்வியுற்றால் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் இரு தொகுதிகளிலும் ஜெயித்துவிட்டால், ஒரு தொகுதியில் ஜெயித்ததை ராஜினாமா செய்கின்றனர். இப்போது அந்தத் தொகுதிக்கு மறுபடியும் தேர்தல் நடத்த வேண்டும். இதனால், அரசுக்குத்தான் செலவு. அதனால் இப்படி இரு தொகுதிகளில் நின்று, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் நபர்கள்தான், அந்த தொகுதியில் நடக்கும் மறு தேர்தலுக்கான முழு செலவையும் ஏற்க வேண்டும் என சட்டமியற்றலாமே? அப்போது இரு தொகுதிகளில் யாரும் நிற்க மாட்டார்கள். அதே நேரம், அரசுக்கும் பணம் மிச்சமாகும்தானே?

இதுபோன்று தேர்தல் மாற்றங்கள் குறித்து கருத்துகள் இருந்தால், நீங்களும் பகிர்ந்துகொள்ளலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com