
விமான விபத்துல உயிர் பிழைக்கிறது அதிசயம்தான், ஆனா விமான விபத்துல உயிர் பிழைச்சவங்க எல்லாம் ரோ 11ம் நம்பர் சீட்டுல உக்காந்திருந்தாங்கன்னா, கொஞ்சம் ஆச்சரியமா இல்ல? இந்த மூணு கதைகள் “மிராக்கிள் சீட்”னு ஒரு மிஸ்டரிய உருவாக்குது. ஆனா, இது உண்மையாவே பாதுகாப்பான இடமா, இல்ல வெறும் அதிர்ஷ்டமா?
மூணு விபத்து, மூணு உயிர் பிழைப்பு
குமார் நடிக் – இந்தியன் ஏர்லைன்ஸ் 605 (1990)
1990 பிப்ரவரி 14-ல், பெங்களூரு விமான நிலையத்துல இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் (ஏர்பஸ் A320) கோல்ஃப் மைதானத்துல விழுந்து உடைந்தது. 146 பேர்ல 92 பேர் இறந்தாங்க. ரோ 11C சீட்டுல இருந்த குமார் நடிக் உயிர் பிழைச்சார். 10A சீட்டை ஒரு சிறுவனுக்கு கொடுத்து, இவர் 11C-க்கு மாறினார். எமர்ஜென்சி கதவை திறந்து, ஒரு தாய்-மகனையும் காப்பாத்தினார்.
ருவாங்சாக் “ஜேம்ஸ்” – தாய் ஏர்வேஸ் TG261 (1998)
1998-ல, தாய்லாந்து சூரத் தானி விமான நிலையத்துல தாய் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும்போது மோதி, தீப்பிடிச்சு உடைந்து போச்சு. 146 பேர்ல 26 பேர் உயிர் பிழைச்சாங்க. அதுல பிரபல தாய் பாடகர் ருவாங்சாக், ரோ 11A சீட்டுல இருந்தவர், எரியுற விமானத்துல இருந்து தப்பினார்.
விஷ்வாஷ் குமார் ரமேஷ் – ஏர் இந்தியா AI117 (2025)
2025 ஜூன் 12-ல், லண்டன் போன ஏர் இந்தியா விமானம் (போயிங் 787) அகமதாபாத்தில் விழுந்து விபத்தானது. 270 பேர் உயிரிழந்தாங்க. ஆனா, 35 வயசு தொழிலதிபர் விஷ்வாஷ், ரோ 11A சீட்டுல இருந்து உயிர் தப்பினார். எமர்ஜென்சி எக்ஸிட் அருகே இருந்த இவர், உடைந்த விமானத்துல இருந்து தப்பிச்சு, இப்போ மருத்துவமனையில நல்லா இருக்கார்.
ரோ 11 ம் நம்பர் ஏன் சிறப்பு?
மூணு பேரும் ரோ 11-ல உயிர் பிழைச்சது ஆச்சரியமா இருக்கு. ஆனா, இது பாதுகாப்பான இடமா? பெரும்பாலும் அதிர்ஷ்டம்! விஷ்வாஷ் இருந்த போயிங் 787-ல, 11A எமர்ஜென்சி எக்ஸிட் சீட், விமானத்தோட வலுவான “விங் பாக்ஸ்” பகுதிக்கு அருகே இருந்துச்சு. முன்னால இடம் இருந்ததால, இவருக்கு தப்பிக்க இடம் கிடைச்சு. பேராசிரியர் ஜான் மெக்டெர்மிட் சொல்றார், “விஷ்வாஷ் வலுவான இடத்துல இருந்தார். கதவு உடைஞ்சு, தப்பிக்க முடிஞ்சிருக்கு.” ஆனா, எல்லா விமானத்துலயும் ரோ 11 இப்படி இருக்காதுனு சிட்னியைச் சேர்ந்த ரான் பார்ட்ஷ் சொல்றார்.
அதிர்ஷ்டமா, இல்ல வேற எதுவுமா?
பேராசிரியர் எட் கேலியா சொல்றார், “விஷ்வாஷ் அதிர்ஷ்டசாலி. காயம் இல்லாம, எக்ஸிட் கதவுக்கு அருகே இருந்தார்.” எமர்ஜென்சி சீட்ஸ் தப்பிக்க வாய்ப்பு கொடுக்கலாம், ஆனா மிராக்கிள் சீட்னு இல்லை.
ரோ 11 மிராக்கிளா, இல்ல லக்கா?
ரோ 11-ல மூணு பேர் தப்பிச்சது ஒரே ஒற்றுமை, ஆனா இது அதிர்ஷ்டமும், எக்ஸிட் கதவு அருகே இருந்ததும் தான். “ரோ 11 புக் பண்ணலாமா?”னு நினைச்சா, நில்லுங்க! எல்லா விமானத்துலயும் இது வேலை செய்யாது. சீட் பெல்ட் கட்டி, எமர்ஜென்சி வழிமுறைகளை கவனிச்சா உயிர் பிழைக்கலாம். ரோ 11 மிராக்கிளா, இல்ல லக்கா? உங்க கிட்டயே பதிலை விட்டுடுறேன்....