AADHI ENTERPRISES
AADHI ENTERPRISES

PM Surya Ghar திட்டம்: ரூ.78,000 மானியம் எப்படி பெறுவது - A to Z தகவல்கள்!

- கமலக்கண்ணனுடன் ஒரு நேர்காணல்!
Published on

ளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் தினசரி மின்தேவை அதிகரித்து வருகிறது. இதனை ஈடு செய்ய பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ள நிலையில், மக்களிடையே அதிகம் பிரபலமடைந்து வருவது சோலார் மின்சக்திதான். வீடு, கல்லூரி மற்றும் தொழிற்சாலைகளுக்கு சோலார் பேனல்களை அமைத்துக் கொடுக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆதி சோலார் என்டர்பிரைசிஸ் இயக்குநர் கமலக்கண்ணனிடம் கல்கியின் சார்பாக நேர்காணல் நடத்தினோம். சோலார் மின்சக்தி குறித்த பல கேள்விகளுக்கு மிகவும் நேர்த்தியாக பதில் அளித்தார். பயனுள்ள பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். பல சந்தேகங்களுக்கு பொறுமையாக விளக்கமளித்தார். நேர்காணலின் தொகுப்பு இதோ: 

AADHI ENTERPRISES
AADHI ENTERPRISES
Q

சோலார் பேனல்கள் அமைக்கும் தொழிலில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

A

நான் கமலக்கண்ணன். கோயம்புத்தூரில் எனது அண்ணன், ஆதி சோலார் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனம் அமைத்து சோலார் பேனல்களை நிறுவி வருகிறார். இவருடன் இணைந்து சுமார் 7 ஆண்டுகள் வேலை செய்தேன். பிறகு இந்தத் தொழிலில் இருக்கும் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டு, சென்னைக்கு வந்து அதே பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி சோலார் பேனல்களை நிறுவி வருகிறேன்.

Q

கோயம்புத்தூரை விட சென்னையில் உங்களுக்குத் தொழில் முன்னேற்றம் எந்த அளவிற்கு உள்ளது?

A

கோயம்புத்தூரில் வேலை செய்யும் போதே சென்னையில் இருக்கும் வாடிக்கையாளர்களை நன்கறிவேன். ஆகையால், சென்னக்கு வந்து தொழில் தொடங்கியதும் அதற்கு பலரும் வரவேற்பு அளித்தனர். மேலும், மக்களுக்கு சோலார் மின்சக்தி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், அவர்களே எங்களைத் தேடி வருகின்றனர்.

Solar panels
Solar panels
Q

சூரியப் பலகங்கள் எனப்படும் சோலார் பேனல் என்றல் என்ன?

A

பகலில் கிடைக்கும் சூரிய ஒளியை நமக்குத் தேவைப்படும் மின்சாரமாக மாற்றும் ஒரு சாதனம்தான் சோலார் பேனல். மேலும், சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தாத ஒரு சாதனமும் கூட. 

Q

சோலார் பேனலிலிருந்து எவ்வாறு சூரிய ஒளி மின்சாரமாக மாற்றப்படுகிறது?

A

பகலில் சூரிய ஒளியைக் கிரகித்துக்கொண்டு, அதனை நேர் மின்னோட்ட (DC) மின்னழுத்தமாக மாற்றுவதுதான் சோலார் பேனல்கள். சோலார் பேனல்களை பாலி சோலார் மற்றும் மோனோ சோலார் என இரண்டு விதமாகப் பயன்படுத்தலாம். இன்றைய காலகட்டத்தில் அதிக உற்பத்தியைத் தரும் மோனோ சோலார்தான் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. 

Q

வீட்டுமனைகளைத் தவிர வேறு எங்கு சூரிய மின்னாற்றல் அல்லது சூரிய மின்சக்தி உபயோகப்படுகிறது? 

A

பொதுவாக வீடுகளில் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கவே சோலார் பேனல்கள் அமைக்கப்படுகின்றன. வீடுகளைத் தவிர்த்து கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இதன் தேவை அதிகமாக உள்ளது.

Solar panels
Solar panels
Q

ஒரு சிறிய வீட்டிற்கு சோலார் பேனல் அமைப்பதற்கு எத்தனை மணி நேரம் ஆகும்? எவ்வளவு செலவாகும்?

A

சிறிய வீடு எனில் 1KW சோலார் பேனல்களே போதுமானவை. இருப்பினும் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத் தேவையின் அளவைப் பொறுத்து தான் இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். உதாரணத்திற்கு ஒரு வீட்டின் மின்சாரக் கட்டணம் ரூ.2,000-க்கும் குறைவாக இருந்தால் 1KW சோலார் பேனல்களும், ரூ.2,000 முதல் ரூ.4,000 எனில் 2KW சோலார் பேனல்களும், ரூ.4,000 முதல் ரூ.6,000 எனில் 3KW சோலார் பேனல்களும், ரூ.6,000 முதல் ரூ.9,000 எனில் 5KW சோலார் பேனல்களும் தேவைப்படும். இதில் 2KW பேனல்களை நிறுவ 2 நாட்களும், 5 KW சோலார் பேனல்களை நிறுவ 3 நாட்களும் ஆகும். பொதுவாக 2KW பேனல்கள் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும். இதனை நிறுவ ரூ.1,48,000 செலவாகும். 

Q

இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள மானியங்கள் யாருக்கு அல்லது எந்த மாதிரி வீட்டில் இருப்பவர்களுக்கு உதவும்?

A

சோலார் பேனல்களை நிறுவுவதில் ஆன் கிரிட் (ON Grid) மற்றும் ஆஃப் கிரிட் (OFF Grid) என இரு வகைகள் உள்ளன. இதில் ஆஃப் கிரிட் வகைக்கு மானியங்கள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. அதே நேரம், இதற்கான செலவும் அதிகம். ஆனால், இதனைப் பயன்படுத்தினால் எப்போதுமே மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. 

ஆன் கிரிட் வகைக்கு அரசு சார்பில் மானியங்கள் வழங்கப்படுகிறது. அதாவது 1KW பேனலுக்கு ரூ.30,000, 2KW பேனலுக்கு ரூ.60,000 மற்றும் 3KW முதல் 10KW பேனல்களுக்கு ரூ.78,000 என அரசு மானியத்தொகை அளிக்கிறது.

Solar panels
Solar panels
Q

ஒருமுறை சோலார் பேனல் அமைத்த பிறகு ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு லாபம் அல்லது செலவு மிச்சமாகும்?

A

ஒரு வீட்டில் 3KW பேனல்கள் அமைக்கப்பட்ட பிறகு சோலார் மீட்டர் ஒன்று பொருத்தப்படும். ஒருநாளைக்கு 25 யூனிட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இதில் 13 யூனிட்டை பயன்படுத்தி விட்டு, மீதமிருக்கும் 12 யூனிட்டை சோலார் மீட்டர் வழியாக அரசுக்கு கொடுத்து விடலாம். பயன்படுத்திய அளவில் இருந்து கொடுக்கப்பட்ட அளவைக் கழித்தால் வரும் 1 யூனிட்டுக்கு மட்டும் நீங்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு 1 யூனிட் எனில் 60 நாட்களுக்கு 60 யூனிட் முதல் 100 யூனிட்டுகள் இலவசம் என்பதால் நீங்கள் பயன்படுத்தும் இந்த 60 யூனிட்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை இந்த யூனிட்டுகளின் அளவு 100ஐ தாண்டினால் அதற்கு மட்டும் மின் கட்டணம் செலுத்தினால் போதும். ஆக, சோலார் பேனல்களை அமைத்தால் மின் கட்டணம் வெகுவாக குறைந்து விடும். 

Q

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்திற்கு சோலார் பேனல் நிறுவுவதற்கு என்ன தடைகள் உள்ளன? இருப்பின் அதை சரி செய்வது எப்படி?

A

அடுக்குமாடி குடியிருப்பு என்றால் அங்கு நிறைய குடும்பங்கள் இருக்கும். ஆனால் மேல்மாடி ஒன்றுதான். ஆகவே அனைவரும் ஒப்புதல் அளித்தால்தான் இங்கு சோலார் பேனல்களை நிறுவ முடியும் அல்லது அனைவருமே சோலார் பேனல்களை நிறுவிக்கொள்ள முன்வந்தால் பிரச்னைகள் ஏதும் இருக்காது. இதுவே ஓட்டு வீடு எனில், ஓட்டின் மீது ஸ்டான்ட் ஒன்றைப் பொருத்தி பேனல்களை எளிதாக நிறுவி விடலாம். 2KW பேனல் அமைக்க 180 சதுர அடிகள் இருந்தால் போதுமானது. 

Q

சோலார் பேனலை பராமரிப்பது எப்படி? அதாவது நீண்ட நாள் பயன்பாட்டிற்கு என்ன பராமரிப்பு முறைகள் உள்ளன?

A

சோலார் பேனல்களை அவ்வப்போது தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். நீங்கள் வசிக்கும் இடம் அதிக வாகனங்கள் செல்லும் இடமாக இருந்தால் தூசிகள் அதிகளவில் படியும். ஆகையால் மாதம் ஒருமுறை தண்ணீர் ஊற்றி கழுவி பராமரிக்க வேண்டும். அதுவே கிராமங்களைப் போன்று தூசிகள் குறைவாக இருக்கும் இடம் என்றால் 3 மாதத்திற்கு ஒருமுறை பேனல்களை கழுவி வந்தால் நீண்ட காலம் நன்முறையில் இருக்கும். 

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையே ஒரு தவம்தான்!
AADHI ENTERPRISES
Q

மின்னல், மழை போன்றவை பேனலைப் பாதிக்குமா? அதே போல் வீட்டில் இருக்கும் மின் உபகரணங்கள் பாதிப்படையுமா?

A

மின்னல், மழை போன்றவை எல்லாம் பேனல்களை எவ்விதத்திலும் பாதிக்காது. வீட்டில் இருக்கும் மின் உபகரணங்களுக்கும் எந்த பாதிப்பும் நேராது. ஏனெனில், பேனல்களில் இடிதாங்கி பொருத்தப்பட்டுள்ளது. ஆகையால் எந்தக் காலநிலையிலும் தைரியமாக இருக்கலாம். 

Q

சென்னையில் மட்டும்தான் பேனல்களை அமைத்து வருகிறீர்களா?

A

சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் எங்களுக்கு டீலர்கள் இருப்பதால் அனைத்து மாவட்டங்களிலும் சோலார் பேனல்களை நிறுவி வருகிறோம். 

Q

ஒரு முறை அமைக்கப்படும் சோலார் பேனலின் ஆயுள் காலம் எவ்வளவு?

A

சோலார் பேனல்கள் பொதுவாக 25 வருடங்கள் வரை நன்றாக இருக்கும். அதற்குப் பிறகு மின்சார உற்பத்தி படிப்படியாக குறையத் தொடங்கும். ஆகையால், 25 வருடங்களுக்குப் பிறகு பேனல்களை மாற்றுவது நல்லது.

Q

சோலார் பேனல்களுக்கு உத்தரவாதம் ஏதேனும் உண்டா?

A

உத்தரவாதம் இல்லாமல் இப்போது எந்தப் பொருள் இருக்கிறது. சோலார் பேனல்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் முதல் 15 வருடங்களுக்கு இலவசமாக சரி செய்து தரப்படும். அதற்கடுத்த 10 வருடங்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இதற்கு மட்டும் சேவைக் கட்டணம் விதிக்கப்படும். 

சோலார் பேனல்கள் குறித்து தாங்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தும் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். உங்களின் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி நேர்காணல் அளித்தமைக்கு கல்கியின் சார்பாக நன்றி. மேலும் உங்களது தொழில் விருத்தியடைய வாழ்த்துகள்.

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு (Business Opportunity), பின் அதற்கு கிடைக்க வேண்டிய மானியத்தையும் உங்களுக்கு பெற்று தருவோம் மற்றும் குறிப்பிட்ட அனைத்து வேலைகளுக்கும் தேவையான பொருட்கள் எல்லாம் டீலர்கள் நிர்ணயித்த விலையிலே உங்களுக்கு வழங்கப்படும். பிறகு இந்த வகை சூரிய மின் விநியோக வேலைப்பாடுகளில் முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் எங்கள் நிறுவனம் மூலம் கற்று தரப்படும். பின் இந்த எல்லா சேவைகளையும் நீங்கள் பெற இந்தியாவில் உள்ள எந்த மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்தும் நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். 

தொடர்புக்கு:

கமலக்கண்ணன்

91763 62015

logo
Kalki Online
kalkionline.com