நிமோனியா...
நிமோனியா...

நுண்கிருமிகளால் ஏற்படும் நிமோனியா – உயிருக்கு ஆபத்தா?

சிறிய கிருமிகள் – பெரிய பாதிப்புகள் - மருத்துவ (மினி) தொடர் – பகுதி 3

தொற்று நோய்கள் தொடர்பாக பலரும் அறிந்திராத தகவல்கள் உண்டு. குறிப்பாக நிமோனியா குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் ஓரளவுதான் இருக்கிறது. மேலும், தொற்றுநோய்களுக்கான தடுப்பு மருந்துகள் பற்றி அறிந்துகொள்ளாதவர்கள் ஏராளம்.

சென்னையில் உள்ள கேப்ஸ்டோன் கிளினிக் நிறுவனராகவும்,  சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஆலோசகராகவும் விளங்கும் தொற்று நோய் நிபுணர் டாக்டர் வி. ராமசுப்ரமணியன், தொற்று நோய்கள் குறித்த - குறிப்பாக நிமோனியா குறித்த, அதற்கான தடுப்பு ஊசிகள் குறித்த -  நமது பல சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் இப்பயனுள்ள பகுதியில்.

டாக்டர் வி. ராமசுப்ரமணியன்
டாக்டர் வி. ராமசுப்ரமணியன்
Q

நிமோனியா நம்மை பாதிக்காமல் தடுத்துக்கொள்வது நம் கையில் இருக்கிறதா?

A

பெரும்பாலும் சத்தான உணவு, நல்ல தூக்கம், யோகா போன்ற உடற்பயிற்சிகள், மனச்சோர்வு இல்லாமல் இருப்பது இவை எல்லாம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தொற்று நோய்களின் பாதிப்பு தவிர்க்கப்படும் அல்லது மிகவும் குறையும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை முழுமையாக நிறுத்திக்கொள்ள வேண்டும். சிலர் 'ஒரு நாளைக்கு இரண்டு சிகரெட்தான் ​பிடிப்பேன். அதனால் பெரிய பாதிப்பு இருக்காது’ என்று தாங்களாகவே நினைத்துக்கொள்கிறார்கள். அது தவறு. சொல்லப்போனால் புகைபிடிப்பது பலரும் நினைப்பதுபோல நுரையீரல் புற்றுநோய்க்கு மட்டுமே காரணமாக அமைவதில்லை. சிறுநீரக புற்றுநோய், மலக்குடல் வாய்ப் புற்றுநோய் போன்ற பலவகை புற்று நோய்களுக்கும் காரணமாக அமைகிறது.

Q

எந்தெந்த தொற்றுநோய்களுக்கான தடுப்பூசி மருந்து இப்போது இந்தியாவில் உள்ளன?

A

ருபதிலிருந்து இருபத்தைந்து தொற்றுநோய்களுக்கான தடுப்பூசி மருந்துகள் வந்துவிட்டன. டெட்டனஸ், தொண்டை அடைப்பான் நோய் (டிப்தீரியா), மணல்வாரி அம்மை (மீஸில்ஸ்), புட்டாளம்மை (மம்ஸ்), ரூபெல்லா, மஞ்சள் காமாலை ஏ மற்றும் பி வகைகள், போலியோ, நிமோனியா, ஃப்​ளூ, விளையாட்டம்மை, அக்கி, மஞ்சள் காய்ச்சல் (யெல்லோ ஃபீவர்), காலரா போன்றவற்றுக்கான தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் கிடைக்கின்றன.

ஆரம்ப நிமோனியா...
ஆரம்ப நிமோனியா...
Q

தடுப்பூசி மருந்துகளைப் போட்டுக்கொள்ள குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது என்று உண்டா?

A

குழந்தைகளுக்கு குறைந்தபட்ச வயது என்பது சில தடுப்பூசிகளுக்கு உண்டு. ஆறு மாதங்கள் நிறைந்திருந்தால்தான் ஃப்​ளூவுக்கான தடுப்பூசி போடுவதுண்டு. இரண்டு வயது நிறைந்திருந்தால்தான் சின்னம்மைக்கான தடுப்பூசி போடுவார்கள்.

அதிகபட்ச வயது என்று எதுவும் கிடையாது. ஆனால், மூப்படைந்தவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி மருந்துகளின் செயல்பாடு ஓரளவு குறைவாகத்தான் இருக்கும். ஏனென்றால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

நிமோனியா...
நிமோனியா...
Q

மிக சமீபத்தில் ஏதாவது தொற்று நோய்த் தடுப்பு மருந்து அறிமுகமாகியுள்ளதா?

A

கோவிடுக்கான தடுப்பூசி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என்பது தெரிந்திருக்கும்.  அக்கி நோய்க்கான தடுப்பூசி மருந்து ஆறு மாதங்களுக்கு முன்புதான் இங்கு அறிமுகமானது.  ஆர்.எஸ்.வி. வைரஸுக்கெதிரான தடுப்பூசி மருந்து ஒருவகை நிமோனியாவுக்கெதிரானது. 

Q

தடுப்பூசி மருந்தை ஒரு முறை செலுத்திக்கொண்டால் போதுமா?

A

யெல்லோ ஃபீவர் என்பது தென்னமெரிக்காவிலும் சில ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவலாக உள்ள ஒரு நோய்.  இதற்கு எதிரான தடுப்பூசி மருந்தை வாழ்க்கையில் ஒரே ஒருமுறை செலுத்திக்கொண்டால் போதுமானது.  மற்றவற்றை  மூன்று வருடங்களுக்கு ஒருமுறை,
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை,  பத்து வருடங்களுக்கு ஒருமுறை என்று அவரவர் உடல்நிலை மற்றும் வயதுக்கு ஏற்ப செலுத்திக்கொள்ள வேண்டி இருக்கும்.

இதையும் படியுங்கள்:
Long Distance Relationship-ல் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 7 விஷயங்கள்! 
நிமோனியா...
Q

ஒவ்வொன்றுக்கும் சுமார் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்?

A

தைக் குறிப்பாகக் கூற முடியாது.  ரணஜன்னி எனப்படும் டெட்டனஸுக்கு எதிரான தடுப்பூசி மருந்து வெறும் 10 ரூபாய்தான். ஷிங்கி​ல்ஸ் எனப்படும் அக்கிநோ​ய்க்கு எதிரான தடுப்பூசி மருந்தின் விலை சுமார் 11,000 ​ரூபாய்.  அக்கி என்பது பல பெரியவர்களுக்கு உண்டாகக்கூடிய மிகக் கொடிய வலியை உண்டாக்கக்கூடிய ஒரு நோய்.   இந்த தடுப்பூசி மருந்தை இருமுறை போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். 

Q

தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்த வேண்டிய அவசியம் குறித்த உங்கள் கருத்து என்ன டாக்டர்?

A

குழந்தைகளுக்கு உண்டாகக்கூடிய பல நோய்களுக்கான தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதால்தான் பல குழந்தை இறப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

பெரியவர்களுக்கான நோய்த்தடுப்பு மருந்தைப் பொறுத்தவரை அவை 100 சதவிகிதம் பாதுகாப்பை அளிக்கின்றன என்று கூறிவிட முடியாது.  தவிர, சிலவற்றுக்கு பக்க விளைவுகளும் இருக்கலாம்.  ஆனால், சரியான முறையில் சரியான இடைவெளிகளில் தடுப்பூசி மருந்து போடப்பட்டால்  அதற்கு கண்டிப்பாக பலன் இருக்கும்.

(நிறைந்தது)

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com