கவிதை - உழவே தலை!

உழவே தலை...
உழவே தலை...
Published on

-செ.கலைவாணி, மெல்போர்ன்.

த்தொழில்

செய்வார்க்கும்

எவர்க்கும் தேவை

நாழி உணவேயது

நலத்தைத் தருவது.

ழுவார் உலகத்தார்க்கு

உணவை நல்குவர்.

ழவரே

எவ்வுயிரையும் 

என்றும் தாங்குபவர்.

ழுதுண்டு வாழ்பவரே

உயிர் வாழ்பவராம்.

பிறரெல்லாம் உழவன்

பின் செல்பவராம்.

லரையும் தன்கீழாய்ப்

பார்த்திடச் செய்வராம்.

விடியலில் விழித்தே

விரைந்தே ஏகுவர்

புழுதியாய் நிலம்

உழுது உணக்குவர்.

யிரோடு, களையும்

பயிராய் வளரும்.

ளையை அகற்றி

களைப்போடு ஏகுவர்.

நீர் பாய்ச்சி

நித்தமும் உழைப்பர்.

யலை நினைத்தே

வாட்டமாய் இருப்பர்.

இதையும் படியுங்கள்:
உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யும் கரிசலாங்கண்ணி!
உழவே தலை...

பிறரிடம் இரக்காது

பிறர்க்கு ஈபவராம்.

ழவினார் கைமடக்க

உணவே இல்லையாம்.

சிப்பிணி போக்கி

புசிக்க உணவிடும்

ழவர் இன்றேல்

உயிர்களும் இல்லாதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com