
இன்றைய ஆன்லைன் தளங்களின் வசதியுடன் இணைந்த, இந்தியாவின் மாறுபட்ட இலக்கியப் பயணம், அனைத்து வயதினரின் புத்தக வாசிப்பு பழக்கத்தை மறு வடிவமைத்துள்ளது. அப்படி ஏற்கும் வகையில் சில பிரபலமான புத்தகங்களை இந்தப் பதிவில் காணலாம்.
குழந்தைகள்:
குழந்தைகளில் சராசரியாக 4-12 வயதிற்குட்பட்ட இளம் வாசகர்கள் பெரும்பாலும் வண்ணமயமான விளக்கப்படங்கள் (colorful illustrations), ஈர்க்கக்கூடிய சம்பவங்கள் (engaging plots) நிறைந்த கதைகளைத்தான் நாடுகின்றனர்.
1. ரஸ்கின் பாண்டின் 'கிரேட் ஸ்டோரிஸ் ஃபார் சில்ரன்' (Great Stories for Children by Ruskin Bond)
2. ஜெஃப் கின்னியின் 'டைரி ஆஃப் எ விம்பி கிட்' (Diary of a Wimpy Kid by Jeff Kinney)
3. மாத்தூரின் 'அம்மா டெல் மீ அபௌட் ஹோலி'
(Amma Tell Me About Holi by Bhakti Mathur)
4. ஜூலியா டொனால்ட்சனின் 'தி க்ரூஃபாலோ' (The Gruffalo by Julia Donaldson)
5. ஹெர்கேவின் 'தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டின்டின்' (The Adventures of Tintin
by Hergé)
டீன் ஏஜ்:
டீன் ஏஜ் அல்லது இளம் வயதுள்ளவர்கள் சாகசக் கதைகள் கொண்ட புத்தகங்களைத்தான் விரும்புகின்றனர். அந்த வகையில்
1. சுசான் காலின்ஸ் எழுதிய 'தி ஹங்கர் கேம்ஸ்' தொடர் ('The Hunger Games' series by Suzanne Collins)
2. ரிக் ரியோர்டனின் 'பெர்சி ஜாக்சன் & தி ஒலிம்பியன்ஸ்' ('Percy Jackson & The Olympians' by Rick Riordan)
3. ஜேம்ஸ் கிளியரின் 'அட்டாமிக் ஹாபிட்ஸ்' ('Atomic Habits' by James Clear)
நடுத்தர வயதுள்ளவர்கள்:
நடுத்தர வயதுள்ளவர்கள் அல்லது 30 மற்றும் 40 வயதில் இருப்பவர்கள் சுய உதவி மற்றும் ஊக்கமளிக்கும் விதம் (motivational genres) சார்ந்த புத்தகங்களை விரும்புகின்றனர்.
1. ஹெக்டர் கார்சியா மற்றும் பிரான்செஸ்க் மிரல்லெஸின் 'இகிகை' ('Ikigai' by Héctor García and Francesc Miralles)
2. மோர்கன் ஹவுஸ்லின் 'தி சைக்காலஜி ஆஃப் மனி' ('The Psychology of Money' by Morgan Housel)
3. யுவல் நோஹ் ஹராரியின் 'சேபியன்ஸ்' ('Sapiens' by Yuval Noah Harari)
4. ஜே ஷெட்டியின் 'திங்க் லைக் எ துறவி' ('Think Like a Monk' by Jay Shetty)
வயதில் மூத்தவர்கள்:
மூத்த குடிமக்களின் தேர்வுகள் பொதுவாக வரலாற்று மற்றும் கலாச்சார சார்ந்த கதைகளை நோக்கித்தான் இருக்கின்றன.
1. மகாத்மா காந்தியின் 'சத்தியத்துடன் எனது சோதனைகளின் கதை' ('The Story of My Experiments with Truth' by Mahatma Gandhi)
2. சுதா மூர்த்தியின் 'ஞானம் மற்றும் இல்லையெனில்' ('Wise and Otherwise' by Sudha Murty)
3. ராமச்சந்திர குஹாவின் 'காந்திக்குப் பிறகு இந்தியா' ('India After Gandhi' by Ramachandra Guha)
4. சித்ரா பேனர்ஜீ டிவகாருணியின், 'பேலஸ் ஆப் இல்லுஷன்' ('The Palace of Illusions' by Chitra Banerjee Divakaruni)
பொதுவாக புத்தக வாசிப்பு மனதிற்கு அமைதியைத்தரும் என்பார்கள். அதுவும்மேலே குறிப்பிட்ட இந்தப் புத்தகங்கள் அந்தந்த வயதுக்கு ஏற்ப பல சுவாரஸ்யங்களைத் தருவதால், இந்தப் புத்தகங்கள் இன்றைய வாசகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன.