உங்க காதல் வெளிப்பாடு மோதிரத்திலா? ரோஜா மலரிலா?

கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் உளவியலாளர் லீ (Lee), தன் புத்தகத்தில், ‘காதலின் நிறங்கள்’ என்று 4 வகை காதலை பட்டியலிட்டுள்ளார். இதுவரை யாரும் சொல்லாத 'Colors of Love' மர்மம்!
Lovers and colour of love book
Love feelings
Published on
Kalki Strip
Kalki Strip

வாலிப வயதில் ஒரு ஆண் ஒரு அழகிய பெண்ணை பார்த்தவுடன் மூளையின் மையப்பகுதியில் சில இடங்களில் செல்கள் தூண்டப்படும் போது காதல் ஏற்படுகிறது. இந்த தூண்டுதல்கள் தொடர்ந்து இதயத்திற்கும் பரவுகிறது. வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்றும், காதல் வயப்பட்ட உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுவது மூளையில் தூண்டுதல் ஏற்பட்ட பிறகு தான். எனவே, காதல் தோன்றுவது மூளையில் தான் என உறுதியாக கூறுகிறார் ஐரோப்பாவின் சைராக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீபன் ஆர்ட்டிக்யூ.

இவரது ஆய்வில் தெரிய வந்த உண்மை, காதல் வயப்படும் போது (Love feelings) மூளையின் 12 பகுதிகள் தூண்டுதல் அடைகின்றன. அப்போது டோபாமைன், ஆக்ஸிடேசின், அட்ரினலின், வாசோபிரஸ்சின் போன்ற இராசயனங்கள் மூளையில் சுரக்கிறது. இந்த கெமிக்கல்ஸ் அளவுக்கு அதிகமாகும் போது தனது உடலை அழகுப்படுத்திக் கொள்வது, காதலியிடம் பரிசுகளை கொடுத்து காதலை தெரிவிப்பது போன்ற செயல்களை செய்ய மனம் தூண்டும் என்கிறார்.

இளம் வயதினர் காதல் வயப்படும் போது உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதும், நரம்புகள் அதிக துடிப்புடன் இருப்பதும் நடக்கிறது. இதனால் தான் காதலர்கள் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார்கள். இதே, காதலில் தோல்வி அடையும் போது மூளை சோர்வடைந்து, அதன் காரணமாக மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

முதல் பார்வையிலேயே காதல் வந்தது என்பது தான் பொதுவான கருத்து. ஆனால், முதல் பார்வையிலேயே காதல் வருவது இல்லை. 4 முறை பார்த்த பிறகு தான் ஒரு ஆணுக்கு பெண்ணின் மீதோ அல்லது ஒரு பெண்ணுக்கு ஆணின் மீதோ காதல் பிறக்கிறது என்கிறார்கள் அமெரிக்காவின் ஹாமில்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

1. உலகில் காதலைச் சொல்ல 89 சதவீதம் பேர் மோதிரத்தை பரிசாக வழங்கிக் தான் சொல்லுகிறார்களாம். 87 சதவீதம் பேர் "என்னை திருமணம் செய்து கொள்கிறாயா!" என்று காதலைச் சொல்ல முற்படுகிறார்களாம்.

2. 85 சதவீதம் பேர் காதலை சொல்ல காதலியின் முன் மண்டியிட்டு ஒரு ரோஜா பூவை கொடுத்து காதலை சொல்லுகிறார்களாம். சிலர் ஒரு காலை மண்டியிட்டு காதலை சொல்வது வழக்கமாக உள்ளது.

3. காதலியோ, காதலனோ தன் காதலை வெளிப்படுத்த மற்றவருக்கு ரோஜாவைக் கொடுப்பது உலகளாவிய பழக்கமாக உள்ளது. அதிலும் சிவப்பு ரோஜாவை கொடுப்பது தான் வழக்கமாக உள்ளது.

4. உலகில் 69 சதவீதம் பேர் காதலை சொல்லும் முன் பெற்றோர் அனுமதியை பெறுகிறார்களாம். 57 சதவீதம் பேர் காதலை சொல்லும் போது அழுது விடுகிறார்கள் என்கிறார்கள்.

5. பொதுவாக வாழ்க்கையில் காதல் வயப்படாத மனிதர் இருக்கவே முடியாது. ஏதோ ஒரு வகையில் காதலில் சிக்குண்டு விடுவார்கள். இதில் வெற்றி, தோல்வி இவர்களது மனநிலையை பொறுத்து அமையும். இதில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் 4 முறை காதல் வயப்படுவார்கள் என்பதை தங்களது ஆய்வில் கண்டறிந்துள்ளனர் இங்கிலாந்து விஞ்ஞானிகள்.

6. இதில் 20 வயதிற்கு முன்பே ஒருமுறை கண்டிப்பாக காதல் வலையில் சிக்கக் கொள்வார்கள் என்கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக சிறு வயதிலேயே பூப்படையும் பெண்கள் எளிதில் காதல் வயப்படுகிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

7. கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் உளவியலாளர் லீ (Lee), தன் புத்தகத்தில், ‘காதலின் நிறங்கள்’ என்று 4 வகை காதலை பட்டியலிட்டுள்ளார். அவைகள்...

ஈரோஸ் (Eros) என்பது உடலும், மனமும் இணைந்த காதல். வழக்கமான திரைப்படங்களில், Fantasy கதைகளில், ஊடகங்களில் நாம் பலமுறை பார்த்து, கேட்டறிந்த காதல்தான் இது.

முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கக் கூடியது. இரண்டாவது வகை லுடோஸ்(Ludos) விளையாட்டுத்தனமான காதல். இந்தக் காதலில் உண்மையான நெருக்கமோ, நீண்டகால உத்தரவாதமோ இருக்காது.

இதையும் படியுங்கள்:
மனவசியம் (Mesmerism) : இதுவும் ஒரு மருத்துவமா?
Lovers and colour of love book

ஸ்டோரேஜ் (Storage) எனும் மூன்றாம் வகை காதல் இருவரும் அடிப்படை குணங்களை அறிந்துகொண்டு, சில காலம் பழகியபின், ஒத்த சிந்தனையினால் உருவாகும் வலுவான காதல்.

அடுத்தது மேனியா(Mania) வகை காதல். பெயரே இதன் தன்மையைச் சொல்லிவிடும். ‘‘நீ காதலிக்காவிட்டால் இறந்து விடுவேன்” என்றெல்லாம் மிரட்டும் வெறித்தனமான காதல் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com