மழை – பெயர் காரணம் தெரியுமா? மழையில இத்தனை வகைகளா?

Rain image...
Rain image...

மக்கெல்லாம் மழை தெரியும். ஆனால், நம் மக்கள் மழையை எப்படியெல்லாம் பகுத்து, பெயரிட்டு அழைத்தனர் தெரியுமா? வாருங்கள் சொல்வளம் மிக்க தமிழ் மழையில் நனைவோம்.


பொதுவாகச் சொல்வதென்றால்...
சடசடவென நனைத்துப் பொழிவது (பெய்வது) - மழை!
பருத்த மழைத்துளி ஆங்காங்கே அகலவிழுந்தால் - அது தூறல்! .


நுண்ணிய மழைத்துளி நெருங்கி சாய்வாக விழுந்தால் - அது சாரல்!


துளித்துளியாய் தெளிப்பது போலப் பெய்வது - தூறல்!
தூறல் [தூத்தல்] : பூந் தூறல், ஊசித்தூறல், எறி தூறல், போடி தூறல், ரவைத்தூறல்.


பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துச் சிதறுவது சாரல்! (சாரல் மழை - என்றால் சாய்வாய் பெய்யும் மழையைக் குறிக்கும்).


சாரல்: சாரல் மழை [ஊதல் காற்றோடு கலந்து பெய்யும் நுண்ணிய மழை], ஆலி,

பொசும்பல், தூவானம், எறசல், பரவல், துணை மழலை.
சடசடவென நனைத்துப் பெய்வது - மழை!
மழை: தக்காலம் [மழை காலம்], பருட்டு மழை, அரண்ட பருவ மழை, பேய் மழை, நச்சு மழை, வதி மழை, கல் மழை[ஆலங்கட்டி மழை], காத்து மழை, சேலை நனைகிறாப்புல மழை, கோடை மழை, கால மழை, பாட்டம் [பாட்டமாய் பெய்யும் மழை], நீருந்து மழை, வெக்கை மழை, அடை மழை, மாசி மழை, தை மழை, சுழி மழை, பட்டத்து மழை, எல்லைக் கட்டி பெய்யும் மழை, குளிக்கும் மழை, பனி மழை, வெள்ளை மழை, பரு மழை [கனமழை], பருவ மழை, பத மழை, அப்பு மழை.

அடடா... மழையின் தன்மையைப் பொருத்து, பெய்யும் காலத்தைப் பொருத்து அதற்கு எத்தனை எத்தனைப் பெயர்கள்!


'மழை' என்ற சொல் தமிழில் பிறந்தவிதம் குறித்தும் விளங்கிக்கொள்வோம்!
மழ - என்பது இளமைப் பொருள் குறித்த ஓர் உரிச்சொல்!
மள் > மழ = இளமை.
"மழவுங் குழவும் இளமைப் பொருள்" - எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
மழ > மழவு.
மழ > மழல் > மழலை = இளமை.
மழவு > மழவன் = இளைஞன்.

மழ + ஐ = மழை! இளமையின் அலட்டலும் ஆர்ப்பாட்டமும்போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் 'மழை' என்ற காரணப் பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர்கள்.
அடைமழை: விடாமல் பெய்வதால், ஊரையே ‘அடை’த்து விடும் மழையே அடை மழை! எவ்வித இடைவெளியின்றி பார்வையை மறைக்கும்படி - அடைத்துக்கொண்டு பெய்யும் மழை.
கனமழை:  துளிகள் சற்றுப் பெரிதாக எடை அதிகம்கொண்டதாக இருக்கும்.
ஆலி: என்றால் ஆங்காங்கே பரவலாக விழும் ஒற்றை மழைத்துளி. இதனால் உடலோ உடையோ நனையாது!
ஆலங்கட்டி மழை:  திடீரென  மாற்றம் பெறும் வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து, மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை.
பனிமழை : பனிதுளிகளே மழைபோல பொழிவது. இது பொதுவாக இமயமலை போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்.

இதையும் படியுங்கள்:
இதயத்துக்கு இதம் தரும் செர்ரி, பெர்ரி பழங்கள்!
Rain image...

ஆழி மழை: ஆழி என்றால் கடல். இது கடலில் பொழியும் மழையைக் குறிக்கும். இதனால் மண்ணுக்கு எவ்விதப் பயனுமில்லை என்றாலும், இது இயற்கைச் சமன்பாட்டின் ஒரு பகுதியாகும்.
மாரி: காற்றின் பாதிப்பு ஏதும் இல்லாமல் - வெள்ளசேதங்களின்றி - மக்கள் இன்னலடையாமல் - பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது.
மாதம் மும்மாரி பொழிகிறதா? – என அன்றைய அரசர்கள் ஏன் கேட்டார்கள் எனப் புரிகிறதா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com