

100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் - குறிப்பாக கைத்தறி துறைக்கான சிறப்பான அர்ப்பணிப்பை வழங்கிவரும் - புகழ்பெற்ற ஆரெம்கேவி சில்க்ஸ் ( RMKV Wedding Silks) அனைவரின் அபிமானத்திற்கு உரியதாக விளங்குகிறது. தனித்துவமான திருமண பட்டுப் புடவைகள் என்றால் 'அது ஆரெம்கேவி சில்க்ஸ் மட்டுமே' என அதன் வாடிக்கையாளர்கள் அக மகிழ்கின்றனர்.
சென்னை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் கிளைகளை கொண்டுள்ள ஆரெம்கேவி நிறுவனம் 120க்கும் மேற்பட்ட புதுமையான படைப்புகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எத்தனையோ பட்டுப்புடவை நிறுவனங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் முன்னோடியாக பல அற்புத வடிவமைப்புகளும் மேம்பட்ட நெசவு நுட்பங்களும் ஆரெம்கேவி நிறுவனத்திற்கு இரண்டு தேசிய விருதுகள், கின்னஸ் உலக சாதனை மற்றும் பலகாப்புரிமைகளை பெற்றுத் தந்துள்ளது பெருமைக்குரிய விஷயமாக அந்நிறுவனத்தினர் குறிப்பிடுகின்றனர்.
தன் 102 ம் வருடத்தில், ஆரெம்கேவி நிறுவனம், சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள 'மை பங்களா'வில் (My Bungalow) Weaves and Wonders Festive Edit '26 எனும் சிறப்பு கண்காட்சியை நடத்தியது. இந்நிறுவனத்தின் பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கருப்பொருள்களை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் எக்ஸ்க்ளூசிவ் சில்க் ரகங்கள் காட்சிப்படுத்தபட்டிருந்தது சிறப்பு. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களான சங்கர் குமாரசுவாமி, மாணிக்கவாசகம் ஆகியோர் இந்த கண்காட்சியின் சிறப்புகள் மற்றும் புடவைகளின் தனித்துவம் குறித்து விளக்கம் அளித்தனர்.
RmKV - Shankar Kumarasamyகண்காட்சியில் நவராத்திரி தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு மனதைக் கவரும் நேர்த்தியான வடிவமைப்பில் 18 புதிய, புதுமையான பட்டுப்புடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் ஏற்கனவே அறிமுகபடுத்தப்பட்டு வரவேற்பைப் பெற்ற ரகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன.
உள் நுழைந்ததும் நம் பார்வைக்கு முதலில் பட்டது இயற்கை வண்ணமேற்றப்பட்ட அழகிய புடவை. உலகின் முதல் மற்றும் ஒரே புடவையாக... 10 வருடங்கள் தொடர்ந்த ஆராய்ச்சியின் பலனாக... 4000 இயற்கை வண்ணங்களுடன் கண்களைப் பறித்த பட்டுப்புடவையின் அழகில் நிச்சயம் மனதை பறி கொடுக்கலாம்.
சாயமேற்றல் பிரிவில் பணியாற்றுபவரான கள்ளபிரானிடம் பேசினோம்..
"இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த காந்தியவாதியும் இயற்கை சாயமேற்றலில் நிபுணருமான 95 வயதான டூபான் ரஃபாய் 10 நாட்கள் இங்கு வந்து பயிற்சி அளித்தார். அதைத் தொடர்ந்து 8 மடங்கு நேரம் 5 மடங்கு உழைப்பு 8 மடங்கு செலவுடன் இந்த புடவை உருவாகியுள்ளது எங்கள் நிறுவனத்தின் சாதனை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் போன்ற பொருட்கள் மற்றும் வண்ணப் பூக்கள், மூலிகைகளிலிருந்து இயற்கை சாயமேற்றும் கலை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பெருக வேண்டும் என்றா எங்கள் நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது," என்றார்.
இனி நாம் பார்த்து வியந்த பட்டுப்புடவைகளின் அணிவகுப்பை காண்போம்:
ராகமாலா: இசை, கலை மற்றும் நெசவு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் பட்டுப் புடவை. முந்தானையில் 16-19ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த எட்டு ராகமாலா ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியமும் அதற்குரிய ராகத்தின் தனித்துவமான இயல்பை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பட்டு புடவை.
கற்பவிருட்சம்: வளர்ச்சி மற்றும் உறவுகளின் அடையாளமான கற்பவிருட்சத்தை மையமாகக் கொண்ட இந்தப் புடவையின் முந்தானை, விரிந்து பரவும் மரக்கிளைகளைக் கொண்ட நெசவு. மேலும் செழுமையான மலர் வடிவ ஜரி புட்டாக்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சம் ஜப்பானியத் தொகுப்பு.
இதில் ஜப்பானின் கலை, குறியீடுகள் மற்றும் கைவினை மரபுகளைப் பட்டில் மறுவடிவமைத்துள்ளது RmKV.
சஷிகோ-கசுதி ரிவர்சிபிள்: இரு நெசவு மரபுகளின் சங்கமமாக அமைந்துள்ள, இருபுறமும் அணியக்கூடிய புடவை. கர்நாடகத்தின் கசுதி எம்பிராய்டரியையும் ஜப்பானின் சஷிகோ எம்பிராய்டரியையும் ஒன்றிணைக்கிறது. ஒரு பக்கம் பச்சை நிறத்தில் இளஞ்சிவப்பும், மறுபக்கம் மெஜந்தா நிறத்தில் பச்சையும் இடம்பெற்றுள்ளன.
ஜப்பானிய இண்டிகோ நேச்சுரல்ஸ்: இயற்கை இண்டிகோ சாயத்தில் உருவாக்கப்பட்ட புடவையில், ஜப்பானியக் கலையிலிருந்து கிமோனோ அணிந்த பெண்களின் உருவங்கள் நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
வுட்பிளாக் லினோ: ஜப்பானிய மரஅச்சுக் கலையைப் போற்றும் இந்த லினோ புடவையின் முந்தானையில், புகழ்பெற்ற கலைஞர் கவாசே ஹசுய் உருவாக்கிய 'ஷிபா பென்டன் இக்கே' ஓவியம் மீண்டும் நெய்து உருவாக்கப்பட்டுள்ளது.
கூரை கட்டம்: பாரம்பரிய கூரை கட்டம் வடிவமும், ஆரஞ்சு மற்றும் துரு நிறப் புடவையில் ஜரி பொன் புட்டாக்கள். கொடி விசிறி மற்றும் தேன் துளி வடிவங்கள் கொண்ட பச்சை நிற பார்டர் இதற்கு நிறைவளிக்கிறது.
பெல் ஜால் லினோ: மீனாகாரி பெல் ஜால் எனப்படும் கொடி வலைப்பின்னல் வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட லினோ புடவை. முகலாயக் கலை வடிவங்களுடன் அடர் சிவப்பு பார்டருடன் அமைந்துள்ள அழகிய பட்டுபுடவை.
ரெட்டை கிளி: தமிழ் நெசவு மரபில் விரும்பிப் பயன்படுத்தப்படும் இரட்டைக் கிளி வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கோர்வை புடவை, MS blue நிறத்தில் அமைந்துள்ளது. குயில்கண் வங்கி, மயில் மற்றும் யானை போன்ற பாரம்பரிய வடிவங்களோடு உருவாக்கப்பட்ட அற்புத படைப்பு.
பூ தோரணம்: பூ தோரணத்தின் வடிவமைப்போடு கோர்வை முறையில், மாலை-காலை பார்டர். மேல்புற விளிம்பிலிருந்து ஜரியில் நெய்யப்பட்ட வடிவம் கீழிறங்குகிறது. மாறுபட்ட வாடாமல்லி நிற பார்டரில் யாழி, அன்னம் மற்றும் வங்கி வடிவங்கள்.
பூ கோபுரம்: கார்னேஷன் மலர்கள் மற்றும் சாமந்திப் பூ புட்டாக்களுடன் கைத்தறியில் நெய்யப்பட்டுள்ள பாரம்பரிய half and half புடவை காலத்திற்கேற்ற புதுமை படைப்பு.
மயில் துத்தம் கோர்வை: மயில் துத்தம் நிறத்தை கொண்ட கோர்வை புடவையில் லட்டு கமலம், ஜடை நாகம், வங்கி மற்றும் குயில்கண் போன்ற தமிழ் நெசவு மரபில் வேரூன்றிய வடிவங்கள் இடம்பெற்று, முந்தானை முழுவதும் தொடரும் அழகிய பட்டு புடவை.
கோல்டன் ககோமே: ஜப்பானிய அழகியல் மரபோடு நெய்யப்பட்ட புடவையில், கரகுசா மலர்-கொடி வடிவங்களோடு தீமையைத் தடுக்குமென நம்பப்படும் மூங்கில் வலைப்பின்னல் வடிவமான ககோமே இணைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய பிஜிங்கா: எடோ காலத்தில் அழகிய பெண்களைச் சித்தரிக்கும் பிஜிங்கா கலைவடிவ உருவங்கள் உலோக நூல் நெசவால் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேக வடிவங்களை மையமாகக் கொண்ட முந்தானையைச் சுற்றி காமோன் குடும்பச் சின்னங்கள் இடம்பெறுகின்றன.
முப்பாகம் நேச்சுரல்ஸ்: கடுக்காய், இண்டிகோ, அரக்கு, பட்டை, மரம் மற்றும் இந்திய மஞ்சிட்டி ஆகிய இயற்கைப் பொருட்களால் சாயமிடப்பட்ட இந்த முப்பாகம் புடவையில் கிளி வடிவங்கள் கொண்ட விவா மெஜந்தா நிறப் பகுதி, கட்டம் போட்ட பகுதிகளால் இருபுறமும் சூழப்பட்டுள்ளது.
கிளி கொடி லினோ: காப்புரிமை பெற்ற லினோ நெசவின் 40% எடை குறைவான இலகுத்தன்மையைப் பயன்படுத்தும் புடவையில், மீனாகாரி முறையில் நெய்யப்பட்ட கொடி வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.
செவ்வந்தி கட்டம்: செவ்வந்திப் பூவின் பெயரைக் கொண்ட இந்த ஆரஞ்சு மற்றும் மெரூன் நிறப் புடவையில், பெரிய ஜரி கட்டங்களுக்குள் முத்துக் கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடையிடையே அன்னம் மற்றும் சக்கரம் புட்டாக்கள்.
மெட்ராஸ் கட்டம்: காலத்தால் அழியாத மெட்ராஸ் கட்டம் வடிவத்தின் நவீன வடிவமாக டர்காய்ஸ் நிறப் புடவை உருவாக்கப்பட்டுள்ளது. ஜரி மற்றும் பட்டில் கைத்தறியில் நெய்யப்பட்ட கட்டங்களுடன், திலகம், ருத்ராட்சம், துத்திரிப்பூ மற்றும் சீப்புரேக்கு வடிவங்கள் கொண்ட மாறுபட்ட இளஞ்சிவப்பு முந்தானையோடு கூடிய அற்புத பட்டு புடவை.
கோல்டன் பேர்ல் கட்டம்: வேல்தாரியின் நான்கு மாறுபாடுகளைக் கொண்ட இந்த ஆஃப்-வைட் கட்டம் புடவையில், மெரூன் நிற பார்டருக்குள் அமைந்துள்ள சிறப்பான பட்டுபுடவை.
மெட்ராஸ் கட்டம், கோல்டன் பேர்ல் கட்டம், கூரை கட்டம் மற்றும் செவ்வந்தி கட்டம் ஆகிய புடவைகளின் வழியாக மெட்ராஸ் கட்டம் வடிவத்தை ஆரெம்கேவி தொடர்ந்து ஆராய்ந்து மறுவடிவமைக்கும் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.
இங்கு சீனியர் மேலாளராக பணிபுரியும் சீனிவாசன் என்பவர் தங்கள் நிறுவனத்தின் சிறப்புகளை பற்றிக் கூறும் போது அவர் முகத்தில் தெரிந்த பெருமிதமே இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இங்கு பணிபுரிவோர் மற்றும் நெசவாளர்கள் மீது நிறுவனம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் சான்றாகிறது.
இந்தியாவின் செழுமையான நெசவு மரபை உருவாக்கிய பாரம்பரியங்களில் ஆழமாக வேரூன்றியபடியே, கைத்தறிப் புதுமையின் எல்லைகளை ஆரெம்கேவி தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
நீங்களும் இந்தப் பண்டிகைக்கு ஆரெம்கேவி புடவைகளை வாங்கி அணிந்து பெருமை கொள்ளுங்கள்.