உடனுக்குடன் சூடா கிடைக்கும் உணவு... ஆனால் அதில் ஒளிந்திருக்கும் நோய்கள்! - உஷார் மக்களே!

Street foods
Street foods
Published on
Kalki Strip
Kalki Strip

நாட்டில் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் சிலமுக்கியமான இடங்களை சாலையோர உணவக வணிகத்திற்காக அடையாளம் காணுகிண்றனர். பின்னர் அவ்வாறான பகுதிகளில் தற்காலிக சாலையோர உணவகங்களை அமைத்து சுயவேலைவாய்ப்பினை பெறுகின்றனர். பல்வேறு பொருட்களை சமைக்க ஒரு பொதுவான சமையலறையை வைத்திருக்கிறார்கள். பின்னர் உணவுப் பொருட்களை  உணவகத்திற்கு கொண்டு சென்று தனது வணிகத்தை நடத்துகிறார்கள். வணிகம் முடிந்ததும், பொதுவான சமையலறைக்கு பாத்திரங்களை திரும்பவும் கொண்டு செல்கிறார்கள். இவ்வாறே அவர்களின் வணிகம் ஒவ்வொரு நாளும் கழிகிறது. சாலையோர உணவகங்களின் வேலை நேரம் தேவைக்கேற்ப மாறுகிறது. இந்த உணவகங்கள், தற்போது தமிழ்நாட்டின் பெரும்பான்மையான நகரங்களில் இயங்கிக் கொண்டிருப்பதால், இவை சமூகத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டன.

அதே போன்று, பேருந்துகளில் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும்போது, இடைவெளிக்காக அரசால் சாலையோர உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதாரமற்ற குடிநீர், தரம் குறைந்த உணவு வகைகள், சுவை கூட்ட உடலுக்குத் தீங்கைக் கொண்டு வரும் பொருள்களைக் கொண்டு உணவை சமைப்பது போன்றவற்றால் தரமற்ற உணவுகள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுவது கவலை அளிக்கிறது. இவ்வாறான உணவகங்களை பயணிப்போரே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறான உணவகங்களில் வேலைக்கு ஆள் சேர்க்கத் தேவையில்லை. ஏழை எளியவர்கள் அனைவரும் சாப்பிட முடியும். இங்கு கேட்டதும் உடனுக்குடன் சூடாகவும், விலை குறைவாகவும் உணவுகள் கிடைக்கும். இங்கு குறைந்த வருவாயுடையோர் அதிக அளவில் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். விலைக்கு ஏற்ப அங்கு சாப்பிடும் உணவுகள் கலப்படம் நிறைந்தவையாகவும், தரம் குறைந்ததாகவும் உள்ளன.

இதையும் படியுங்கள்:
'May Day': ஆபத்துக்கான அவசர சமிக்ஞைக்கு பின்னால் இருக்கும் உண்மை கதை! நடந்தது என்ன?
Street foods

அடிப்படை சுகாதாரத்தைப் பற்றி நுகர்வோரோ, அவற்றை நடத்துபவர்களோ கவலைப்படுவதில்லை. பயணம் செல்லும் அவசர சூழலில் அவற்றையெல்லாம் பயணிகள் பெரும்பாலானவர்கள் சகித்துக்கொண்டு சென்று விடுகிறார்கள். குடிப்பதற்கும், கைகழுவுவதற்கும் சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. சாப்பிடும் தட்டுகள் திரும்ப, திரும்ப ஒரே தண்ணீரில் கழுவப்படுகின்றன. ஊழியர்கள் எவரும் கையுறை அணிந்து தம் பணியை செய்வதில்லை. சமைத்த உணவுகள் சரியாக மூடி வைக்கப்படுவதில்லை. வாகனங்களின் மாசுகளும், நச்சுக்கிருமிகளும் பரிமாறப்படும் உணவுகளில் கலக்க வாய்ப்பு உள்ளது. ஒரே எண்ணெயை திரும்ப, திரும்ப அளவுக்கு மீறி சூடேற்றுவதால் அதன் உண்மைத்தன்மை மாறி விடுகிறது. இவைகளை உண்ணும் போது உணவுக்குழாய், இரைப்பை சார்ந்த நோய்கள் ஏற்படலாம்.

இவ்வாறான உணவகங்கள், அங்கு சாப்பிடுபவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பதை நம்மால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது. பல உணவகங்கள் திறந்த வடிகால்களுக்கு மிக அருகில் செயல்படுவதையும் நம்மால் காணமுடிகிறது.  இவ்விடங்களில் நாம் சுகாதாரத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
7,32,000 குருக்குலங்கள் காணாமல் போனது எப்படி? இன்றும் நம்மை ஆளும் ஆங்கிலேயர்கள்... இது எப்படி?
Street foods
street food
street food

சில உணவுப் பொருட்கள் தாளில்வைத்துக் கொடுக்கப்படுகின்றன. அந்த தாளில் உள்ள எழுத்து அச்சு நம் உடலுக்குள் சென்றால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சில உணவுகளை ப்ளாஸ்டிக் கவரில் வைத்துச் சாப்பிடுவதாலும் புற்று நோய் போன்ற நோய்கள் வரலாம். மேலும் தற்காலங்களில் சமைக்க பயன்படும் எல்லாப் பொருட்களிலும் கலப்படும் வந்துவிட்டது. பார்த்துப் பார்த்து வாங்கி சமைக்கப்படும் உணவுகளிலேயே பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

பல இடங்களில் விதிகளுக்கு மாறாக உணவகங்கள் செயல்படுகின்றன. எவ்வித உரிமமும், பதிவுமின்றி செயல்படும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்த வேண்டும். பாதுகாப்பு விதிகளை சரிவர பின்பற்றாத உணவகங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும். இது சம்பந்தமாக உணவு பாதுகாப்புத்துறையினர், சுகாதாரத்துறையினர் திடீர்சோதனை மேற்கொண்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீதிகளில், உணவுக் கூடம் திறக்க விரும்புவோர் உணவு பாதுகாப்புத்துறையினரின் பதிவினையும் உரிமத்தையும் பெறுவது உறுதி செய்யப்படவேண்டும்.

இதையும் படியுங்கள்:
சினிமாவின் இரட்டை வேஷம்!இளைஞர்கள் உணராத உளவியல் ஆபத்து!
Street foods

சாலையோரம் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் உணவகங்களில் சாப்பிட்ட பின் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகிவருவதாக கூறப்படுகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாதத்துக்கு ஒரு முறையாவது குறிப்பிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சாலையோர உணவகங்களை நடத்துவோர்களுக்கு உணவுகளை தயாரித்தல், பாதுகாத்தல், பரிமாறுதல், சுத்தம் செய்தல் ஆகியவற்றில் தேவையான பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் சாலையோர உணவகங்களால் ஏற்படும் தீய பாதிப்புகளை நம்மால் ஓரளவு குறைக்க முடியும். 

எல்லாவகையான சாலையோர உணவகங்களும் சுகாதாரமான உணவு தயாரிக்கும் முறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்களிடையே இது சார்ந்த விழிப்புணர்விணை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் சாலையோர உணவகங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவ்வாறான உணவகங்களில் உணவு உண்டு பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட நுகர்வோர் குறை தீர்மையத்தில் தகுந்த ஆதாரங்களுடன் தங்களது புகாரினை தெரிவிக்கலாம். அவர்கள் நடவடிக்கை எடுப்பதோடு அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டையும் அது பெற்றுக் கொடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com