சேலம் இளைஞரணி மாநாடு - நோக்கம் என்ன?

மாநாட்டு வாயில்...
மாநாட்டு வாயில்...

சேலத்தில் நாளை (21ஆம் தேதி) நடைபெறும் திமுக இளைஞர் அணியின்  இரண்டாவது மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்துவருகின்றன. இதனால் சேலம் மாநகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது எனலாம். கோட்டை கொத்தளமாய் முகப்புகள், திராவிட வரலாற்று ஓவியங்கள், அறுசுவை உணவுகள், வருபவர்களின் அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகள் என சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள திடலில் கவனம் ஈர்க்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாநாடு குறித்தும் இதன் நோக்கம் என்ன என்பது குறித்தும் திமுக கட்சி நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் சொல்வது என்ன?

செ உமாராணி,
மாநில துணை செயலாளர், அயலக அணி திமுக கழகம். தலைவர், அஸ்தம்பட்டி மண்டல குழு சேலம் மாநகராட்சி.

ந்த மாநாட்டின் நோக்கமாக திராவிடம் என்றால் என்ன அதன் கொள்கைகள் என்ன என்பதை இப்போது இருப்பவர்களுக்கும், இனி வரக்கூடிய சந்ததிகளும் தெரிந்துகொள்ளும் விதமாக நிகழ்ச்சிகள் இருக்கும். இதில் நன்கு உரையாற்றக்கூடிய பேச்சாளர்கள் திராவிடக் கொள்கைகள் என்ன என்பதை பற்றி விளக்கமாக எடுத்துக் கூற உள்ளார்கள்.

செ. உமாராணி,
செ. உமாராணி,

இப்போது இருக்கும் நெருக்கடியான சூழலில் ‘மாநில உரிமை மீட்கும் முழக்கமாக" இந்த மாநாடு நடைபெறப்போகிறது என்பது மட்டும் நிச்சயம். மேலும், ஒன்றிய அரசிடம் நமது உரிமைகளை மீட்கும் விதமாகவும் இந்த மாநாடு அமையும் என்பதும் உறுதி. 2019ல் இருந்து இளைஞர்களை வழிநடத்திச் செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  கழகத்தின் அடையாளமாக மட்டுமல்ல தற்போது தமிழ்நாட்டின் அடையாளமாகவும்  விளங்குகிறார் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை தரும் விஷயம். மேலும், திமுகவை பொருத்தவரை எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் "குடும்பமாக வாருங்கள்"  என்று அழைப்பதே வழிமுறையாக உள்ளது. இந்த மாநாட்டுக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வந்து கலந்துகொள்வார்கள். முக்கியமாக பெண்களுக்கும் முன்னுரிமை உள்ளது.

இதையும் படியுங்கள்:
அவதிப்படுத்தும் குளிர்கால மார்பு சளிக்கு நிவாரணம்!
மாநாட்டு வாயில்...

அலங்கரிக்கப்பட்ட இந்த மாநாட்டுத் திடலை தங்கள் குடும்ப விழாவாகவும் நினைத்து இரண்டு நாட்களாகவே குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து பார்வையிட்டுச் செல்வது சிறப்புக்குரியது.

ச.அன்புமணி,
சேலம் மத்திய மாவட்டம்,
49வது கோட்டம் திமுக பிரதிநிதி.

18 வயதிலிருந்து இந்த கழக உறுப்பினராக இருக்கிறேன். இப்போது 49-வது வார்டு பிரதிநிதியாக உள்ளேன். சின்னவர் உதயநிதி ஸ்டாலினின் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பங்கு மிக அலாதியானது. அவர் தலைமையில் இந்த மாநாடு நடப்பது மிகச் சிறப்பு. இந்த மாநாடு நிச்சயம் இந்திய அளவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடிய திமுகவின் மாநாடாக இருக்கும். முக்கியமாக திராவிடப் பற்றை இக்காலத்து இளைஞர்களிடம்  விதைக்கும் மாநாடாகவே இது அமையும். மேலும், தொழில்நுட்ப ரீதியாகவும், இணையதளங்கள், மீடியா, சோசியல் மீடியா என அனைத்தின் வாயிலாகவும் இளைஞர்களை  ஈர்ப்பது குறிப்பிடத்தக்கது.

ச.அன்புமணி
ச.அன்புமணி

தலைவர்களின் ஆளுமையான சேலம் மாவட்டத்தில்  குறிப்பாக தலைவர் கலைஞரின் அரசியல் பயணம் துவங்கிய இந்த மாவட்டத்தில் இந்த மாநாடு நடப்பது மிகச் சிறப்பு. இந்த மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் திறமையான திட்டமிடல்களுடன் நடந்தேறி வருகின்றன.


ரியா,
ஒன்றிய குழு உறுப்பினர், மாநில மகளிர் அணி,
சமூக வலைத்தள பொறுப்பாளர், நாமக்கல் மேற்கு.

ந்த மாநாட்டின் முக்கிய நோக்கமே மாநில உரிமைகளை  மீட்டெடுக்க வேண்டும் என்பதே. காலம் காலமாக ஆரியத்துக்கும் திராவிடத்திற்கும் தொடர்ந்து நடந்து வரும் கருத்து  வேறுபாடுகளுக்கு பதில் சொல்லும் விதமாகவே இந்த மாநாடு அமையும். எல்லோருக்கும் எல்லாம் எனும் நீதிப்படி சமூக நீதி, சம உரிமை, பாலின சமத்துவம், பெண்ணுரிமை ஆகியவற்றை பேணிக்காக்கும் விதமாக இந்த மாநாடு அமைகிறது.

ரியா,
ரியா,

மதிப்பிற்குரிய தலைவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் போராடிய வழியில், அவர்களது நோக்கங்களைப் பறைசாற்றும் விதமாகவே இந்த மாநாடு நடைபெறுகிறது. இளைஞர் அணி செயலாளர் மற்றும் தலைவர் இதனை வெகு சிறப்பாக வழி நடத்துகிறார்கள். திமுகவில் ஆண்கள்,  பெண்களுடன் அனைத்து பாலினமும் சமத்துவம் என்பதற்கு இந்த மாநாட்டு மேடையில் நானும் ஒரு சிறப்பு பேச்சாளராக இருப்பதே சான்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com