இருக்கையும் இறுக்கமும்!

அக்டோபர் - 2 காந்தி ஜெயந்தி!
Gandhiji...
காந்தியடிகள்...
Published on

ருமுறை காந்தியடிகள் காஷ்மீரத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் மழை பெய்யத் தொடங்கியது.  அவரோ வழக்கம்போல் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் ஒருவர் "நீங்கள் ஏன் மூன்றாம் வகுப்பில் பயணிக்கிறீர்கள் என்று கேட்க அவர் ரயிலில் நான்காம் வகுப்பு என்ற ஒன்று இருந்தால் நான் அதில்தான் பயணம் செய்வேன்’’ என்றார். 

பெட்டி முழுவதும் தண்ணீர் பரவியது.  கார்டு அவரிடம் வந்து தாங்கள் பெட்டி மாறுங்கள் என்று கூறினார். உடனே காந்தியடிகள் இந்த பெட்டியை என்ன செய்வாய் என்று கேட்க அவர் "உங்களுக்காக தனி பெட்டி காலி செய்து வைத்திருக்கிறேன்.  அதிலுள்ள பிரயாணிகள் இங்கே உட்காருவார்கள்" என்றார். உடனே அவர் "இந்த பெட்டியில் வேறு ஆட்கள் உட்கார முடியும் என்றால், நானே ஏன் உட்காரக் கூடாது. என் சுகத்திற்காக பிறர் கஷ்டப்பட்டு கூடாது" என்றாராம்.

பலருக்கு அடுத்தவர்கள் கஷ்டப்பட்டாலும் தான் மட்டும் சுகப்பட வேண்டும் என்ற சுயநலம் இருப்பதால்தான் நாம் சாதாரண ஆத்மாக்கள் ஆக இருக்கிறோம். "மனிதன் ஆத்மாவுடன் கூடப் பிறப்பதில்லை. அவன் அதை அடைய வேண்டியவராக இருக்கிறான்" என்றார் ஜார்ஜ் குல்ஜீப். நாம் முக்கியமானவர்கள். நமக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று எண்ணுவது தவறு.

சுதந்திரப் போராட்டம் இந்தியா முழுவதும் பரவியதற்குக் காரணம் காந்தியடிகளுடைய அணுகுமுறைதான். சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடு இல்லாமல்  இடைவெளி நேராமல் வாழ்பவர்கள்தான் கண்களின் வழியாக இதயத்துக்குள் ஊடுருவ முடியும். சில நேரங்களில் சாதாரண அதிகாரத்தைக் கூட துஷ்பிரயோகம் செய்பவர்களாக உள்ளார்கள்.

ஒருவர் நல்ல அரசுப் பதவியில் இருப்பவர். அவர் திருச்சியிலிருந்து சேலம் செல்ல வேண்டியிருந்தது. முதலிலேயே வந்து பஸ் முன் இருக்கையில் அமர்ந்திருந்தால் பரவாயில்லை. அவரோ பேருந்து புறப்படும் நேரத்திற்கு வந்து  முன் இருக்கைக்காக தன் செல்வாக்கை பயன்படுத்தி நடத்துனரிடம் வாக்கு வாதம் செய்தார். கெடுபிடி அதிகமானதால் முன் இருக்கையில இருந்தவர்கள் பின் இருக்கைக்குச் சென்றார்கள்.

இதையும் படியுங்கள்:
சாதாரண பசை தந்த பல மில்லியன் வருமானம்!
Gandhiji...

முப்பது கிலோமீட்டர் தொலைவில் சரக்கு லாரி பேருந்து மீது மோதியதில்  முன் இருக்கையில் அமர்ந்தவர்களுக்கு மட்டும் பலத்த அடி.  பின் இருக்கைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டவர்களுக்கு  சின்ன கீறல் கூட ஏற்படவில்லை. மூன்று நிமிடங்கள் வம்பு செய்து இடம் பெற்ற முன் இருக்கைவாசிகள் மூன்று மாதம் படுக்கையில் கிடக்க வேண்டிய இருந்தது. மிகுந்த சுயநலம் ஆபத்தையே விளைவிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com