மதிய உணவுக்குப்பின் சிறிது ஓய்வு எடுக்கலாமா?

Neuroscience
NeuroscienceImage credit - news-medical.ne
Published on

நியூரோசயன்ஸ் என்னும் நரம்பியல் விஞ்ஞானம் சொல்லும் உண்மை என்ன தெரியுமா? தினசரி கடமைகளில், சிறு சிறு மாற்றம் செய்துகொள்ளுங்கள். உங்களது அறிவு கூர்மையாகும். திட்டமிடுதல், பல விஷயங்களில் முடிவெடுத்தல் போன்றவை சிறப்பாக அமையும்.

சுவாரசியம் இல்லாத விஷயங்கள் என்று எதுவுமே இல்லை… ஆனால், அவற்றை சுவாரசியமாய் நினைக்காத மனிதர்கள்தான் அதிகம். போரடிக்கிறது என அலுக்கும்போதே நம் மனது புதிய அனுபவத்தைத் தேடுகிறது அல்லவா?

ஒரே மாதிரி வேலை அலுப்பைத் தரும்போது நம் படைப்பாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன்  ‘விழித்துக்கொள்கிறது’. அதாவது, புதிய உத்திகளை மனம் சிந்திக்கத் துவங்குகிறது என்பது  நிரூபிக்கப்பட்ட உண்மை.

தினசரி வாழ்க்கை நடைமுறைகளில் 40 சதவீதத்தை நாம் திட்டம், தீர்மானம் எதுவும் இல்லாமல் (not decision-based) பழக்கத் தோஷத்தில் மட்டுமே செய்து வருகிறோம். ஆனால், இவற்றையும்கூட  தகுந்தபடி கணக்கிட்டு,  ஒரு சட்ட திட்டத்துக்குள் (framework) செய்யும்போது வெற்றி கிடைக்கும் என்பது பல வெற்றியாளர்களின் ரகசியம்.

அமேசான் நிறுவனர் Jeff Bezos கூறுவதைக் கேளுங்கள்… “சில முடிவுகளுக்கு இரண்டு வாசல் இருக்கும். (one and two way doors) ஒரு வாசல் வழியே சென்றபின், முடிவு சரியில்லை என்றால் பின்வாசல் வழியாக திரும்பி விடலாம். சிலவற்றுக்கு ஒரே வாசல்தான். முடிவெடுத்தபின் பாதையை மாற்ற முடியாது.”

ஆப்பிள் நிறுவனர் Steve Jobs, பல விஷயங்களுக்கு மறுப்பு சொல்வதே வெற்றி (saying no as often as possible) என்கிறார்.

ஒரு சட்டதிட்டத்துக்குள் செயல்படுவது நல்லது என்றாலும் நம்மில் யாருக்குமே அளவிடமுடியாத மனோசக்தி (mental energy) கிடையாது. நீங்கள் ஒரு தொழிலதிபர் என்றால், ஒரே நாளில் பல முடிவுகள் எடுக்க வேண்டிவரும். எல்லாமே நல்ல முடிவுகள் என்று மகிழ்வீர்கள். ஆனால், முடிவெடுக்கும் சோர்வு (decision fatigue) என்பது மெல்ல வந்துவிடும். அதிக வேலைகள் சேரும்போது, அதற்கான முடிவுகள் அடிக்கடி எடுக்க வேண்டி வரும்போது, புத்திசாலித்தனமான முடிவுகளை (smart decisions) எடுக்கும் திறன் குறைந்துவிடும்.

து குறித்து நியூரோபயாலஜி எனப்படும் நரம்பியல் மருத்துவத்தில் என்ன சொல்லப் படுகிறது? சக்தி கிடைப்பதற்காக,நமது மூளை தேவையான ஊட்டச்சத்துக்களைப் பிரித்துத் (breaks down nutrients) தருகிறது. அதில் பிரியும் பொருட்களில் (By-products) க்ளூடமேட் (glutamate) போன்றவை தானாகவே இயங்கி தூங்கும் வரை, மூளை சுறுசுறுப்பாக இருக்கும்படி செய்கின்றன.

நரம்பியல் மருத்துவம்
நரம்பியல் மருத்துவம்

பொதுவாக நமது மூளையில் lateral prefrontal cortex என்ற பகுதிதான் நமக்கு திட்டங்கள் தீட்டவும், முடிவுகளை எடுக்கவும் ஆற்றலைத் தரும் பகுதி. மனதுக்கு,அல்லது மூளைக்கு கடினமான வேலைகளை (Difficult mental tasks)செய்ய நேரிடும்போது அதிக கவனம், செறிவுடன் கூடிய நோக்கு வேண்டும். அப்போது க்ளூடமேட் அதிகம் தேவைப் படுகிறது. அதிகப்படியான க்ளூடமேட் lateral prefrontal cortex பகுதியைப் பாதிக்கிறது.

Current Biology என்னும் புத்தகத்தில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி அதிக கவனம் தேவைப்படும்  வேலைகள் ஒரு குழுவினரிடம் தரப்பட்டது. அதை அவர்கள் 6.5 மணி நேரத்தில் மிக கடினமாகச் சிந்தித்து முடித்தனர்.

மற்றோர் குழுவினரிடம் எளிதான சிந்தனை கொண்ட பணிகள் கொடுக்கப்பட்டன. அதே 6.5 மணி நேரம்தான். கடினமாக சிந்தித்து முடித்தவர்களிடம் க்ளூடமேட் லெவல் அதிகரித்திருந்தது.

அவர்களிடம் மேலும் சில கேள்விகள் கேட்கப்பட்டன. உடலாலும் மனதாலும் கடினமாக செய்ய வேண்டிய பணிகளிலா அல்லது எளியவற்றிலா எதில் அவர்களுக்கு ‘ஆத்ம திருப்தி’ஏற்படுகிறது  என்பது போன்றவை…  நிச்சயமாக அவர்கள் எளிய பணிகளைத்தான் தேர்ந்தெடுத்தார்கள்.

Chronobiology International புத்தகத்தின் ஆய்வு அறிக்கை களின்படி, முக்கியமான முடிவுகள், ஒரு நாளின் ஆரம்பத்தில், அதாவது காலையில் எடுக்கும்போது மிகவும் சரியாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்கும் என்று உறுதிபடக் கூறுகிறது.

(காலை எழுந்தவுடன் படிப்பு என்று பாரதியார் அன்றே சொல்லிவிட்டாரே…)

Journal of Retailing and Consumer Services தரும் விளக்கப்படி,  நாளின் முடிவில் ஏதோ அவசர உந்துதலால் நாம் எடுக்கும் முடிவுகள் தவறாகப் போகலாம். மனதளவில் சோர்வு ஏற்படும்போது நம் முடிவுகள் தவறாகலாம். காலை வேலைகள் முடிந்து, பிற்பகல் உணவுக்குப்பின் உடல், மனம் இரண்டிலும் ஒரு மந்த நிலை உண்டாவது இயல்பு. அப்போது க்ளூடமேட் அதிகரித்திருக்கும். உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டே… அதற்காக வேலைகளை நிறுத்த முடியுமா?

அதிகமாக மன சக்திகள் தேவைப்படாத எளிய வேலைகளான, புத்தககங்களை அடுக்கி வைத்தல், ஈ மெயில்களைப் பார்த்தல், தேவைப்படும் பொருட்களை வாங்குதல், சிறிதாக நடைப்பயிற்சி போன்றவற்றை அந்த மதிய நேரத்தில் செய்யலாம்.

அதிக கவனம் தேவைப்படும் கடினமான விஷயங்களைக் காலையிலேயே செய்து முடித்து விடுவதுபோல் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

மதியம் உணவுக்குப் பிறகு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டால், மனமும் உடலும் புத்துணர்வு பெறும் என்றும், தீர்மானித்து முடிவெடுக்கும் சக்தி உடலில் அதிகரிக்கும் என்றும், National Bureau of Economic Research வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சில வேலைகளுக்கு நல்ல கவனத்துடன் முடிவெடுக்கக்கூடிய நபர்களிடம் பொறுப்புக்களைத் தரலாம். இதன் மூலம், உங்களுடைய தீர்மானிக்கும் ஆற்றலை ‘சேமித்து வைத்து’ (decision making energy) முக்கியமான வேலைகளில் நீங்கள் ஈடுபடமுடியும்.

இதையும் படியுங்கள்:
சொர்க்கப் பதவி பெற்றுத் தரும் விடங்கலிங்க தரிசனம்!
Neuroscience

த்தனையோ ஆண்டுகளுக்கு முன் நம் வள்ளுவப் பெருந்தகை திருக்குறளில்,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்’ என்று சொன்ன விஷயம்தான்

ஒரு நாளின் முடிவில் உங்களிடம் ஒரு பிரச்னை அல்லது முடிவெடுக்கும் நிலை வந்தால், அதை காலை வரை ஒத்திப்போட முடியுமா? என்று தீர்மானியுங்கள். பிரச்னையின் முக்கியத்துவம் பொறுத்து, அவசரமாகத் தீர்மானிப்பதைவிட நிதானமாகச் செய்வது மேலானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com