சிறுகதை – கோபம்!

short story...
short story...
Published on

-கோவிந்த் மனோகர்

1943.

கோபத்திற்கே பிறந்தவன் முத்து என்கின்ற முத்துவேலன் ஆதாரமாக நல்லவன்தான். ஆனால் பேசிக் கொண்டிருக்கும்போதே கோபப்பட்டு கை நீட்டி விடுவான். சில நாட்கள் ஓங்கிய கையை கீழே இறக்கி அனுப்பவும் செய்வார்கள். கோபம் தணிந்ததும் அவனே அதற்காக வருத்தப்படுவான்.

காட்டில் விறகு வெட்டிக்கொண்டிருந்தவன் ஆளரவம் கேட்டு அதனருகே சென்றான். பலர் எதோ திட்டம் தீட்டுவது போலிருந்தது அவனுக்கு. அவனைப் பார்த்தவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டு "ஒனக்கு என்ன வேலை இங்கே. போ... போய் அந்த வெள்ளக் கொக்குங்கங்களுக்கு காவடி காக்கறவனுக்கு விறகு வெட்டு போ. ‘சல்லிக்கு வெலப்போற சல்லி பயலே’ன்னு வெறுப்பா உமிழ்ந்தான் ஒருவன். ஜீவா முத்துவுக்கு தெரிந்தவன். அவமானமாக இருந்தது

இதெல்லாம் அவனறிவுக்கு ஏறினதே இல்லை. சுதேசி, சுதந்திரம், விடுதலை எல்லாம் அவனுக்குப் புரியாத புதிர்கள். ஆனால், தன்னை மட்டம் தட்டுகிறார்கள் என்ற மட்டில் அவனுக்குப் புரிந்தது. அவர்கள் மதிப்பில் உயர எதாவது செய்ய வேண்டுமென்று மட்டும் புரிகிறது. அங்கிருந்து கோபத்துடன் விலகி நடந்தான். அவன் முழுவதுமாக அங்கிருந்து கிளம்பினானா இல்லையா என்று கவலைப்படாமல் அவர்கள் தங்கள் திட்டத்தைப் பகிரத் தொடங்கினர்.

முத்து கிளம்பியவன் அவர்கள் பேசுவதைக் கேட்க, எட்ட இருந்த மரத்திற்கு பின் நின்று கவனித்தான். அவன் உடல்  முழுமையாக மறைக்க படவில்லையென்றாலும் அவர்களது அசிரத்தை அவன் இருப்பை மறைத்தது.

“சரி அந்த வண்டி அந்த அண்டி பாலத்த நாலு மணிக்கு கடந்துரும். 10 முழ திரின்றது கிட்டத்தட்ட நாளே முக்கா அடி. கொஞ்சம் மெதுவாத்தான் வண்டி வரும். பாலத்துக்கு கிட்ட வரும்போது திரிய பத்த வெச்சா போதும் சரியா? முக்கியமானது... பத்த வெச்ச ஒடனே பாலத்துக்கு உள்ள பந்து அந்த பக்கம் போய்டணும். தாமசம் பண்ணா வெள்ளக்காரனோ நாமு கைலாசம். என்ன புரிஞ்சிதா. மதியம் 2 மணிக்கு ஆரும் அங்க இருக்க மாட்டாக. அப்போ அங்கன மறச்சி வெச்சிபுடலாம். மண்ணு கலரும் சணல் கலரும் ஒற்றே மாறி இருக்கும் சரியா?

மா மறைவிலிருந்து மொத்த நடப்பயம் உன்னிப்பாகக் கவனித்தான் முத்து. முத்து, ஜீவாவின் கையிருக்கும் பையை பார்த்துக்கொண்டான்.

"சரி கெளம்பலாமா வேலைய சரியாய் முடிக்க பாருங்க... முடித்த ஒடனே எல்லோரும் ஊற விட்டு கெளம்பிடுறோம். 4 மாசம் கழிச்சி இதே எடத்துல சந்திக்கிறோம். இப்போ மணி 10. எல்லாரும் கலைஞ்சி போங்க. ஜீவா குண்டு பத்திரம். பாக்கலாம்." மற்றவன்.

தனியே போய்க்கிட்டிருந்த ஜீவா அருகில் சென்று "ஜீவா என்னையு சேத்துக்கவே" என்றான்

"போடா போய் பொழப்ப பாரு. இதெல்லாம் உனக்கு வேண்டாம்" என்றான்.

"என்னால முடியு ஜீவா."

"போ போய் மரத்த வெட்டு."

"நா கேட்டுகிட்டே இருக்கேன் நீ மதிக்கவே மாட்ற" சூடாகினான் முத்து

"எந்த பாலம் மருதாண்டி பாலமா இல்ல வேலாண்டி பாலமா?"

"போடா" விறுவிறுவென்று அங்கிருந்து கிளம்ப பார்த்தான்.

வாய் வார்த்தை முற்ற ஆரம்பித்தது. கை கலப்பில் முடிந்தது. ஒரு கல்லெடுத்து ஜீவா மண்டையில் அடித்துவிட்டான் முத்து. மயங்கி விழுந்தவனின் கையிலிருந்த பையை எடுத்துக்கொண்டு ஓட்டம் எடுத்தான்.

தலையில் கட்டுடன் திண்ணையில் வீற்றிருந்த ஜீவாவை பார்த்த மற்றவன் "என்ன ஜீவா இங்க உட்கார்ந்திருக்கே... அங்கே போலையா?"

"இல்ல தோழா பைய பறிகொடுத்துட்டேன்" என்று பரிதாபமாகச் சொன்னான்.

இதையும் படியுங்கள்:
தன்மதிப்பு - தன்னம்பிக்கை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?
short story...

"சிறுபிள்ளைத்தனமா பதில் சொல்றியே... என்ன மாதிரியான சமாச்சாரம் இருக்கு அதுக்குள்ளே" மற்றவன்.

"இல்ல தோழரே ஒரு ஆர்வத்துல நமக்கு தெரிஞ்சவன் அத சரியா பண்ணுவான்னு நெனைக்கிறேன்."

"மணி 4.10 கொர வண்டி பாலக்க தாண்டி சந்தை பக்கம் போறத பாத்துட்டு நம்மாளு ஒருத்தரு சொன்னத கேட்டுட்டுத்தான் உன்ன பாக்க வந்தேன்."

"ஐயோ... மருதாண்டி பாலம் வழியா வட நாட்டு காங்கிரஸ் தலைவருங்க தலைமைல ஊர்வலம் போக போதே" என்று அவன் முடிக்குமுன்னே காதை செவிடாக்கும்படியான வெடிச்சத்தம் கேட்டது...

இந்தக் கதையை அதன் போக்கில் விட்டு முடித்தால் நமக்கு சுதந்திரம் கிடைப்பது தள்ளி போகும் அல்லது முத்துவேலனை சிதற வைத்தால் கோபத்தின் விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளாமலேயே இறந்தவனாவான். ஆதலின் அந்த வெடிச்சத்தத்துடனே இச்சிறுகதையை முடித்துக்கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com