
ஹிந்தி மூலம்: மங்களா ராமச்சந்திரன்
தமிழாக்கம்: ஜி.ஜி.
நாலாபுறமும் மௌனம் நிலவியது.
''உனக்கு இம்மாதிரி சூழ்நிலைதானே விருப்பமாக இருந்தது?" என் மனம் என்னை இடித்துக்கேட்டது.
"ஓ! இதுபோன்ற மௌனச் சூழல்தான் விருப்பமானதாக இருந்ததா?" என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
போஸ்ட்மேன் கதவிடுக்கு வழியாக ஒரு கடிதத்தை வீசி விட்டுச் சென்றார்.
இளைய மகனின் கடிதம்தான் அது. என் மனம் கெஞ்சியது - 'அவன் விருப்பத்திற்குச் சம்மதம் சொல். ஒரு வேளை இதுவே கடைசி அழைப்பாகக்கூட இருக்கலாம்.'
சரிதான், சில நாட்கள் இளையவனிடமும், சில நாட்கள் மூத்தவனிடமும் இருந்து பார்க்கலாம். அதன் பிறகு சரி என்று தோன்றுவதைப் பார்த்துக்கொள்வோம் என்ற முடிவுக்கு வந்தேன்.
"ஹையா... தாத்தா வந்துட்டாங்க...!
குழந்தைகளின் இரைச்சல் கேட்டு இளையவன் ஆதித்யா வெளியே வந்தான்.
"வாங்கப்பா..."
அவன் என்னை உள்ளே அழைத்துப் போனான். மருமகள் என் கால் தொட்டு வணங்கி, ''இதென்ன மாமா, இவ்வளவு இளைச்சுட்டீங்களே?" என்று குசலம் விசாரித்தாள்.
நான் குழந்தைகளுக்காக இனிப்புகள் தந்தேன்.
குழந்தைகளும், மருமகளும் எனக்கு வேண்டிய வசதிகள் செய்வதில் அன்புடன் முனைந்தனர்.
சில நாட்கள் கழிந்தன.